ஆனந்த லஹரி - 21 & 22


தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

இந்த ஸ்லோகத்தில் குண்டலினீ யோகத்தில் ஸித்தி அடைந்தவர்களது நிலை சொல்லப்பட்டிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேலெழும்பிய குண்டலினீ சக்தியானது ஆக்ஞா சக்ரத்தில் மட்டும் அதிக நேரம் நிலைகொள்ளாது மின்னல் கொடி போல தோன்றி உடனடியாக க்ஷண நேரத்தில் மேலெழும்பி ஸஹஸ்ரார கமலத்தை அடைகிறதாம். காமம், மாயை போன்ற மலங்களை நீக்கி, சூர்ய சந்திரர்கள் போலவும் அக்னி, போன்றதுமான உனது கலையை சஹஸ்ராரத்தில் தியானிப்பவர்கள் பேராந்தமான அலைகளில் மூழ்கித் திளைப்பர் என்கிறார்.

இவ்வாறாக குண்டலினீ சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ந்து ஐக்ய ஸ்வருபத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதை "ஸ்திர செளதாமினி" என்றும் க்ஷண நேரமே ஆக்ஞா சக்ரத்தில் இருப்பதால் "க்ஷண செளதாமினி" என்றும் இரு நாமங்களாக சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டிருக்கிறது

தடித்-லேகா-தன்வீம் - மின்னல் போன்ற சூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும்; தபன-சசி-வைச்வானர மயீம் - சூர்ய-சந்த்ர, அக்னி ஆகியவற்றில் ப்ரகாசிப்பதும். ஷண்ணாம் கமலானாம் அபி - ஆறு ஆராதாரங்களுக்கு மேலே; மஹாபத்ம அடவ்யாம் - தாமரை மலர்களாலான காடு போன்ற சஹஸ்ராரத்தில்; நிஷண்ணாம் - நிலையான;

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஈஸ்வரனுக்கு 'பவன்' என்று ஒரு பெயரிருக்கிறது, ஸ்ரீ ருத்ரத்தில் ''பவாயச ருத்ராயச' என்று வருகிறதே அதுதான். சிவனின் 8 பெயர்களில் முதல் பெயர் பவன். அந்த 8 பெயர்களாவன, பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மாஹாதேவன். இதில் ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி.

த்வம் - நீ; தாஸே மயி - தாஸனான என்னிடத்தில்; ஸகருணாம் - கருணையுடன் கூடிய; த்ருஷ்டிம் விதர - பார்வையைச் செலுத்துவாயாக. ஸ்தோதும் வாஞ்சன் - ப்ரார்த்தித்துக் கொள்ள ஆசைப்பட்டு; ததைவ - அப்போதே / உடனேயே; த்வம் - நீ; தஸ்மை - அவனுக்கு; நிஜ ஸாயுஜ்ய பதவி - நீயே ஆன சாயுஜ்ய பதவியினை (அதாவது அன்னையே சாயுஜ்யம் எனப்படுவதாம்); திசஸி - கொடுக்கிறாய்; முகுந்தன் என்றால் திருமால். ப்ரஹ்மேந்த்ர = ப்ரம்ஹ + இந்தர; ஸ்புட மகுட - ப்ரகாசமான க்ரீடம்; நீராஜனம் என்றால் நமக்கு தெரியும் கர்பூர நீராஜனம், புனர் நீராஜனம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதுதான்.

"பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்" என்று சொல்லி அவள் கடாக்ஷத்தை ப்ரார்த்திக்க ஆசைப்பட்ட ஒருவன் இதில் முதல் இரண்டு சொற்களான 'பவானி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே நீ அவனுக்கு, விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான, உனதேயான ஸாயுஜ்ய பதவியைக் ஸாயுஜ்ய பதவியினை தந்தருளுகிறாய்" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.

பரமாச்சார்யார் இது பற்றி சொல்லுகையில், இங்கே ஆச்சார்யார் சொல்லியிருப்பது ஞான வழியில் போய் நிர்குண ப்ரம்ஹத்தோடு ஐக்யமாகும் அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்று கூறுகிறார். ஏனென்றால், அடுத்த வரி 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்' என்பதை காரணமாகச் சொல்கிறார். அம்பாளுடன் அவன் ஐக்ய சாயுஜ்யம் பெற்றுவிட்டால் அப்போது அவனுக்கே 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர' என்பதான தன்மை அவனுக்கே கிடைத்து விடுகிறது. ஆனால் அத்வைதத்தில் ஸாயுஜ்யம் அடையும் போது அங்கு மூர்த்தியே கிடையாது, பிறகு ஏது பாதங்கள், மகுடங்கள்?. நிர்குண தத்வம் என்பது மேலே சொன்ன பாடலில் இல்லை. எனவே இங்கே ஆதிசங்கரர் சொல்லியிருப்பது அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்பார். இந்த ஸ்லோகமானது சர்வ ஸித்திகளையும் தரும் மந்த்ரம் என்றால் மிகையாகாது.

21 comments:

கீதா சாம்பசிவம் said...

சாப்பிட்டுட்டு வந்து திரும்பிப் படிக்கிறேன். வந்து தான் கமெண்டணும்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆகா, அருமையாக இருந்தது, திரும்பத்திரும்ப படிக்கணும்.

ஷைலஜா said...

ஈஸ்வரனுக்கு 'பவன்' என்று ஒரு பெயரிருக்கிறது, ஸ்ரீ //ருத்ரத்தில் ''பவாயச ருத்ராயச' என்று வருகிறதே அதுதான். சிவனின் 8 பெயர்களில் முதல் பெயர் பவன். அந்த 8 பெயர்களாவன, பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மாஹாதேவன். இதில் ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி//

பவனம் என்பதுகூட இதன் தொடர் சொல்லாய் இருக்குமோ? நலல்பதிவு மதுரையம்பதி...வரிக்கு வரி ஆழ்ந்து படித்தேன்.

கீதா சாம்பசிவம் said...

ஷணம்" "ஷணம்" என்று எழுதி இருக்கின்றீர்கள். அது அர்த்தம் மாறுது. நொடி என்ற அர்த்தத்தில் வர க்ஷணம் என்று தான் எழுதணுமோன்னு நினைக்கிறேன். ஷணம் என்றால் சணல் என்ற அர்த்தத்தில் வருது. பொதுவாய் யாருக்கும் அர்த்தம் புரியப் போறதில்லை என்றாலும் சொல்லி வைக்கிறேன். :D பார்த்துக்குங்க! உங்க செளகரியம் போல் எழுதவும்.
மெளலி, போட்டுட்டேன், :)))))))))

மதுரையம்பதி said...

நன்றி கீதாம்மா, மாற்றிவிட்டேன். :)

(ஆமாம் உங்க பெண் பெயர் கீதாவா:-).

கவிநயா said...

அழகான விளக்கம்.

//விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான,//

இந்த வரி மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தில் வரும் ஒரு வரியை நினைவு படுத்தியது. தேவியுடைய பதம் பணிவோருடைய ஆபரணங்களால் அவள் பாதங்களின் விரல் நகங்களும் மின்னுகின்றனவாம்...

ஜீவி said...

பலர் குறிப்பிட்டிருக்கிற மாதிரி மேலோட்டமாகப் படித்து விட்டுப் போகிற விஷயமில்லை...அப்படி இருப்பது தான் இப்படிப்பட்ட விஷயங்களின் இயல்பு போலும். மனத்தில் அசைபோட்டு ஆனந்திக்க வேண்டிய கருத்துக்கள்.
நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துக்கள்,
மெளலி!

மதுரையம்பதி said...

வாங்க ஜீவி...ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க...

ஆமாம், இது கொஞ்சம் அசை போட வேண்டிய விஷயந்தான்.

மதுரையம்பதி said...

வாங்க கவிநயா...மஹிஷாசுர மர்த்தினிலயும் இப்படி வருதா?, எனக்கு நினைவில்லை...தகவலுக்கு நன்றிங்க...

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸ்...


//பவனம் என்பதுகூட இதன் தொடர் சொல்லாய் இருக்குமோ//

தெரியல்லையே

மதுரையம்பதி said...

வாங்க ஜீவா...எப்பல்லாம் முடியுதோ படியுங்க...:) நல்லதுதான்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

முருகனால் கொஞ்சம் லேட்டு! இப்போ துவங்கி விடுகிறேன் கச்சேரியை! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி.
//

அப்போ சரவண "பவ"?

கீதா சாம்பசிவம் said...

ஆமாம் உங்க பெண் பெயர் கீதாவா:-).

என் பெயருங்க இது, எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையில் இந்தப் பேரைப் பிரபலம் அடையச் செய்து கொண்டிருக்கும் முயற்சியைத் தடை செய்ய எதிர்க்கட்சியின் சதியா? இப்படிக் கேட்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மதுரையம்பதி said...

//என் பெயருங்க இது, எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையில் இந்தப் பேரைப் பிரபலம் அடையச் செய்து கொண்டிருக்கும் முயற்சியைத் தடை செய்ய எதிர்க்கட்சியின் சதியா? இப்படிக் கேட்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

இல்லை 'கீதாம்மா' அப்படின்னே எல்லோரும் சொல்றோம். திடிரென ஒரு சந்தேகம்...நீங்க கீதாவோட அம்மாவோன்னு. அஷ்டே...தவறாக நினைக்க வேண்டாம்...எதிர்கட்சியில் இப்படி புரளி கிளப்பியது யாருன்னு உங்களுக்கே தெரியுமே? :)

மதுரையம்பதி said...

KRS,

சரவணபவ-ல அப்படி 'பவ' என்ற இரண்டு எழ்த்துக்களை மட்டும் பிரிக்கலாகாது. சரவணபவ-ன்னு சொல்வது அப்படி பிரித்து சொல்லும் வார்த்தையுமல்லன்னு நினைக்கிறேன்....:)

தெதசெவி

திவா said...

இந்த தெதசெவி புதசெவி வியாழன்செவி எல்லாம் என்ன?

ப4வ =நிகழ்வு குறிப்பது
ப4வன் = உலகின் உற்பத்திக்கு காரணமானவன்
பவன -உறைவிடம்

அதனால வேற வேற

திவா said...

திருப்பி யோசிச்சதுல
ப4வ= இருப்பு
ப4வன் = இருப்பிடமான உலகத்தை உண்டாக்கியவன்.
ப4வனம் = இருப்பிடம்

ஒண்ணேதான் போல இருக்கு.!
:-))
டேய் திவா, அடுத்த முறை யோசிச்சு பின்னூட்டம் போடணும். முந்திரிகொட்டை மாதிரி சட்டுனு போடக்கூடாது. :-(

மதுரையம்பதி said...

வாங்க திவாண்ணா,

இங்க வந்தவுடன் என்னுடைய குறைகள் உங்களையும் தாக்கிவிட்டது போல.. :)

குமரன் (Kumaran) said...

ரொம்ப நாளைக்கு முன்னாடி பிரதி எடுத்து வைத்ததை இன்று தான் படிக்க இயன்றது மௌலி. இந்த இரண்டு சுலோகங்களையும் அடிக்கடி படித்திருப்பதாகத் தோன்றுகிறது.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி குமரன். :-)