ஆனந்த லஹரி - 35 & 36


மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே

அம்மா!, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.


இந்த ஸ்லோகத்தில் அன்னையின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. அதாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம்.


த்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய்.தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி-ஸசி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

அம்பிகே!, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன்
சூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான்.


இங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த இடத்தில் "ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.


தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.

5 comments:

கவிநயா said...

படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் மௌலி. என் சிற்றறிவுக்கு புரியாத செய்திகளாதலால் பின்னூட்டம் இடுவதில்லை. அவளே அனைத்தும் என்று மட்டும் புரிகிறது. உங்கள் பணி சிறக்கட்டும். அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

குமரன் (Kumaran) said...

மநஸ்த்வம் சுலோகம் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் மௌலி. முதல் இரண்டு வரிகள் எளிதாகப் புரிந்தன.

அன்னையின் அஷ்ட மூர்த்தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இதே அஷ்ட மூர்த்திகளை பரிபாடலும் சொல்கிறது. ஆனால் அப்போது அது மாயோனைப் போற்றுகிறது. மாயோனும் மாயோளும் ஒன்று தானே.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...அவளே அனைத்தும் என்றிருந்தால் போதும்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்.

//இதே அஷ்ட மூர்த்திகளை பரிபாடலும் சொல்கிறது. //

எழுதுங்களேன் அதை ஒரு இடுகையாக..நானும் தெரிந்து கொள்வேன்.

குமரன் (Kumaran) said...

விரைவில் வரும் மௌலி. :-)