செளந்தர்யலஹரி 81 & 82குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச


தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.


பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவாழ்
அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்
அடையவுன்நி தம்ப விடையே
எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற
வருத்தவோ மதுர அமுதே.


******************************************************************************கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி


அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து
மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபமம ராமை கண்டோ
நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.
பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.

5 comments:

கவிநயா said...

உவமைகளும் வார்த்தை பிரயோகங்களும் கற்பனைக் கெட்டாதனவாக இருக்கின்றன! அடுத்ததா குமரனுக்கு வெயிட்டிங்...!

மிக்க நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

கவிராசரது மொழிபெயர்ப்பு:

கொத்து வரி அலர் சோலை இமய வெற்பு அரசன் மெய்க்
குலமலைப் பக்கமென வாழ்
அத்தனை விரிந்த அகலத்தொடு பெரும்பாரம்
அடைய உன் நிதம்ப இடையே
எத்தனை பெரும் புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கென சேம நிதி போல்
வைத்து அது பரந்து இடம் கொண்டு வகை இடம் அற
வருத்தவோ மதுர அமுதே.

கொத்து கொத்தாக மலர்கள் மலரும் சோலை உடைய இமய மலையின் அரசன் தன்னுடைய குலமலையான இமயத்தின் பக்கம் போல் வாழ்த்தித் தந்த உன் நிதம்ப இடை அத்தனை அகலத்துடன் இருக்கிறது. எத்தனையோ உலகங்கள் அழிந்தாலும் அழியாத சேம நிதி போல் பரந்து உலகத்தில் இடமே இல்லாமல் செய்து உலகங்களை உன் நிதம்பம் வருத்துமோ இனிய அமுதம் போன்ற அன்னையே!

பொற் கதலி புறம் காட்டும் குறங்கால் வேழப்
புழைக்கை தடிந்தும் சிவனைப் பணிந்து தேய்ந்த
வற் கடின முழந்தாளில் கும்பம் சாய்த்து
மணிமருப்பை கனதனத்தால் வளைத்தும் அம்மே
நின் கடின கோபம் அமராமை கண்டோ
நித்தர் அதன் தொக்கு உரித்த துடித்த நேயம்
பிற்கருதி இவள் உறுப்போடு உவமை வீறு
பெற்றது இது என்னும் இந்தப் பெருமை கண்டோ

பொருள் முழுதும் பிடிபடவில்லை.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கவிக்கா.

மதுரையம்பதி said...

வருகைக்கும் பொருளுக்கும் நன்றி குமரன்.

Anonymous said...

நிதம்ப = buttocks.