குமரன், கே.ஆர்.எஸ், கண்ணன் ஆகியோருக்கு எனது முதற்கண் நன்றிகள். அவர்களது ஊக்குவிப்பே இந்த வலைப்பூவுக்கு மூலம். அவர்களைப் போன்ற எழுத்தாற்றல் எனக்கு இல்லை எனினும், அவர்கள் அவ்வப்போது வந்து செம்மைப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், மற்ற ஆன்மிக பந்துக்களான கீதாம்மா, வல்லியம்மா, திராச போன்ற பெரியோர்கள் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்ற நினைவுடனே, இதனைத் தொடங்குகிறேன். குமரனின் சொல்படி இதனை தனி வலைப்பூவாக கொண்டு செல்ல இருக்கிறேன்.
இங்கு இந்த பதிவுகளுக்கு ஆதாரமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துப் பதிப்பாக திரு.அண்ணா அவர்கள் எழுதிய புத்தகமும், பாஸ்கர ராயரின் வழித்தொன்றலான கிருஷ்ண தீக்ஷதரின் புத்தகமும், பரமாச்சாரியாரின் மொழிகளும் எடுத்தாள உத்தேசித்துள்ளேன்.
பிறைதவழும் எழில்தோன்றப் பிறங்குகதிர் வெண்கோட்டான்
செறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பொன்மால்வரை வாய்ப்ப
மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்
விறல்கெழுமு வேழமுகன் விரைமலர்த்தாளினை தொழுவாம்.
இங்கு நான் கவிதை பிறந்த கதை என்று இப்பதிவிற்கு பெயரிட்டாலும் செளந்தர்யலஹரி வெறும் கவிதையல்ல. இது சிறந்த மந்திர சாஸ்திரமாக நாடெங்கிலும் போற்றப்படுகிறது. லிங்க புராணத்தில்விநாயகர் வாழ்த்தில் இது மகாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்டதென்று கூறப்படுகிறது.
மேருமலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர்கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்ய லகரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.
மேருமலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர்கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்ய லகரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.
ஆனால் இன்னுமொரு கருத்தென்னவென்றால், ஆதிசங்கரரே இதனை கைலாசத்திலிருந்து இதனை கொண்டு வந்தார் என்றும் ஆனால் அவருக்கு கிடைத்தது முதல் 41 ஸ்லோகங்கள் (ஆனந்த லஹரி)மட்டுமே என்றும், எஞ்சிய 59 ஸ்லோகங்களையும் சங்கரர் தாமே எழுதி பூர்த்தி செய்த்தாக சொல்வர். எப்படியாகினும், இது ஆதிசங்கரரால் உலகிற்கு தந்தருளப்பட்டதென்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. இவ்வாறாக 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்தமகோன்னதம் மிக்கது இந்த செளந்தர்யலஹரி.
முதல் 41 மந்திர சாஸ்த்திரீயமானது. இதனை கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களுடன்அனுஸந்தானம் செய்ய முடியும். இந்த 41ல் மந்திர யோகம், குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர ஆராதனை போன்றவை தரப்பட்டுள்ளது. ஆனால் பாராயணம் செய்யும் போது இரண்டையும் சேர்த்து 100 ஸ்லோகங்களையும் செய்வதேமுறை.
சரி, ஆச்சாரியாருக்கு இது எப்படிக்கிடைத்தது, ஏன் அவர் 59 ஸ்லோகங்களை தானே செய்ய வேண்டியதாயிற்று என்பதைஅடுத்த பதிவில் பார்க்கலாமா?
13 comments:
//பாஸ்கர ராயரின் வழித்தொன்றலான கிருஷ்ண தீக்ஷதரின் புத்தகமும், பரமாச்சாரியாரின் மொழிகளும் எடுத்தாள உத்தேசித்துள்ளேன்//
மிகவும் அருமையான பணி! வாழ்த்துக்கள் மெளலி சார். இடையிடையே செளந்தர்ய ஸ்வருபீணி, அவள் படங்களும் தாருங்கள்!
//இவ்வாறாக 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்த மகோன்னதம் மிக்கது இந்த செளந்தர்யலஹரி//
அருமையான கருத்து!
ஈச்வரன் துதிப்பது ஒரு சிறப்பு என்றால், அம்பாளின் குழந்தையான சங்கரன் துதிப்பது அதைக் காட்டிலும் சிற்ப்பல்லவா?
செளந்தர்ய+லஹரி, அப்படியே கொஞ்சம் பொருளும் விளக்குங்கள்!
அடுத்த பதிவை ஆவலுடன் நோக்கி!
Hearty Congratulations about this new Blog. Very good post indeed. Of Course you are the right person to write these things. Till now I think the Sounthariya Lahiri was written by Adi Sankarar only. Your message is a new one to me. Keep it up. Sorry for the English.
//இடையிடையே செளந்தர்ய ஸ்வருபீணி, அவள் படங்களும் தாருங்கள்!//
நன்றி கே.ஆர்.எஸ். முயற்சிக்கிறேன்...படங்களுக்கு குமரனிடம் யாசிக்க வேண்டும். :-)
நன்றி கீதாம்மா....எனக்குத் தெரிந்ததை தெளிவாக எழுத முயற்ச்சிக்கிறேன்...
nalla muitivu. thotarunkaL.thaan matuum nallathu seyvathaikaattilum nammais seernthavaraiyum nallathu seyvikka vaippathu mikavum nallathu
அருமையான ஆரம்பம். மிகவும் ஆவலாக உள்ளேன். ஊக்க சக்தியாக இருந்த மாஹானுபாவர்களுக்கு நன்றி ஹை! :)
பி.கு: எனது தம்பிக்கும் இதன் சுட்டி அளித்து விட்டேன். :)
Anna,
Nala arumayana sathkaaryam, bhagavathpaathaal parameshwaranidam 100 slogangal pettru vanthadhagavum,edaiyel nandhidevar 59 slogangalai abagaritthathagavum oru thaathparyam undo endru periyavaallam solluva,shankara vijayathil kooda etharku aatharam undu,amballukku shankarar vayaal 59 slogam ketkaveendum enra aasayal nandhidevar vilayadal nadanthathu enbathu athan saaram."shivas sakthya yuktho"- appadinnu anna vaayala kettka aachaya wait pannaren.
Regards,
Ganeshan
திராச சார், எல்லாம் உங்கள் ஆசிகள்....
மிக்க நன்றி அம்பி...கணேசனுக்கும் சுட்டி அளித்தமைக்கு நன்றி. அவர் ஈ மெயில் என்னிடம் இல்லை. ஆனால் நீங்க சுட்டி கொடுத்து அவர் படித்துப் பின்னூட்டமும் இட்டுவிட்டார்.
கணேசன், நீங்கள் குறிப்பிட்ட செய்தி அடுத்த பதிவில் போடக் காத்திருக்கிறது....அதுவும் வரும்.
:-)
//ஈச்வரன் துதிப்பது ஒரு சிறப்பு என்றால், அம்பாளின் குழந்தையான சங்கரன் துதிப்பது அதைக் காட்டிலும் சிற்ப்பல்லவா?//
கே.ஆர்.எஸ், ஈஸ்வரனின் இன்னுமொரு அவதாரமாக ஆதி சங்கரரைக்க் கூறுவதுண்டு. அதன்படி பார்த்தால் இரண்டுமே ஈஸ்வரனால் எழுதப்பட்டவையே....
மௌலி.
சிறிது காலம் தாழ்த்தி வருவதற்கு மன்னிக்கவும். திரு. அண்ணா அவர்கள் மொழிபெயர்ப்புடன் பல வடமொழி நூல்களைப் படித்திருக்கிறேன். உசாத்துணையாக நீங்கள் கொள்ளப்போகும் நூல்களைக் கண்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யலஹரியைப் பற்றி எழுதத் துவங்கியதற்கு மிக்க நன்றி.
ஆதி சங்கர பகவத்பாதரே 100 பாடல்களையும் எழுதினார் என்றே எண்ணியிருந்தேன். இன்று தான் அறிந்தேன் 41 பாடல்கள் பரமசிவனார் எழுதியது என்றும் மற்ற 59 பாடல்கள் ஆசாரியார் எழுதியது என்றும். அம்பிகை உபாசகரான உங்கள் ஆனந்தலஹரியும் சௌந்தர்யலஹரியும் அறிய அன்னையின் அருள் அமைந்தது.
அன்னையின் திருப்படங்களுக்கு கூகிளாரைக் கேளுங்கள். www.google.com/images சென்று தேடிப் பாருங்கள். நிறைய படங்கள் கிடைக்கும்.
//அன்னையின் திருப்படங்களுக்கு கூகிளாரைக் கேளுங்கள். www.google.com/images சென்று தேடிப் பாருங்கள்.//
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறீர்கள் குமரன்.....கண்டிப்பாக படங்கள் தேடி இடுகிறேன். 2-3 நாட்கள் முன் தான் நான் படங்களை எப்படி பதிவதென அறிந்தேன்.
Post a Comment