செளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை -2

ஆதி சங்கரர் பல ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து பல்வாறாக போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை சங்கரருக்கு வழங்குகிறார். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். [அந்த பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் பெயர் சந்திர மெளலி என்றே பெயர். இந்த 5 லிங்கங்கள் இன்று இருக்கும் இடம் பின்வருமாறு. 1 காமகோடி மடத்தில் இருக்கும் யோக லிங்கம், 2 கேதாரத்தில் இருக்கும் முக்தி லிங்கம், 3 நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்தில் இருக்கும் வரலிங்கம், 4 சிருங்கேரியில் இருக்கும் போகலிங்கம், 5 சிதம்பரத்தில் இருக்கும் மோக்ஷலிங்கம்.] ஈசன் தந்த லிங்கங்கள் அருவ-ருபமான ஈஸ்வரன் என்றால், சுவடியில் இருந்ததோ தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கையிலாயத்தை விட்டு வெளிவருகிறார்.அங்கு அதிகார நந்தி சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன், கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்த்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்றுசினம் கொள்கிறார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கவில்லை என்பது போல நந்தி தனது கோபத்துடன் சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆச்சாரியரோ அதனை கவனியாது வந்து நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே சங்கரர் கையில் மீந்துவிட, மற்றதெல்லாம் கையிலை வாயிலில் விழுந்து விடுகிறது. [இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேயபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது]


இவ்வாறாக ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளே முதல் 41 ஸ்லோகங்கள். இதனை உணர்ந்த தேவி, சங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாகச் செய்ய சங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என்றும், கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஆனந்த லஹரி என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரிஎன்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. இதனால்தான் முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரமும், குண்டலினி சக்தியும், ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப் பட்டுள்ளது. இந்த 41 சாதகர்களுக்காக என்று கொண்டால், பின் வந்த 59 பக்தி மார்கத்தவருக்காக என்று எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக உலகில் உள்ள இலக்கியங்களில் அதிசயமாக ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரத்தையும், கவித்துவமான வர்ணனைகளையும் சேர்த்த படைப்பினை வேறெங்கும் காண முடியாது.


சரி, செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?. செளந்தர்யம் என்றால் அழகு. சுந்தரமாக இருப்பது செளந்தர்யம். லஹரி என்றால் பிரவாஹம் (அ) அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தியை ஸ்ரீமாதா உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம்-அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதிக்கு செளந்தர்யலஹரி என்ற பெயர் கொடுத்தது மிகச் சரியல்லவா?. இதில் முதல் 41 ஸ்துதிகள் ஈசனே செய்து அன்னையை ஆனந்திக்கச் செய்ததால் ஆனந்த லஹரி என்பதாகச் சொல்வார்கள். எப்படி அழகென்றால் அது அன்னையை மட்டும் குறிக்குமோ அதே போல ஆனந்தம் என்பதும் அவளை அடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது, அதனால்தான் அது ஆனந்த பிரவாஹம் என்று பெயர்.பரமாச்சாரியார் ஆனந்தலஹரி பற்றிச் சொல்லும் போது பின்வருமாறு சொல்வார். ஸத் ஆக இருக்கும் பரமேஸ்வரனின் 'சித்' (அறிவு) ஆன அம்பிகையிடத்தே தான் ஆனந்த அனுபவம் கிடைக்கிறது. எனவே இந்த சித்தால் நமக்குக் கிடைக்கும்ஆனந்தத்தின் முடிவு ஞானமயமான அத்வைத ஆனந்தம். அம்பிகை அந்த ஆனந்தமயத்தில் நிலைத்தவள். எனவேதான் இந்தபூர்வபாகத்திற்கு, கையிலையில் கிடைத்த ஈஸ்வரன் துதித்த பகுதிக்கு ஆனந்த லஹரி என்று பெயரிட்டார்.

14 comments:

Thambi said...

Anna,
Arumayana varnanai, Sowndaryam + lahari= Aanandha saakaram or peralagen pravaham, enna oru arumayana meaning, mahaperiyava("Theyvathin Koral"-Ra.Ganapathy)intha sowndaryalaharyai patri mattum alitha varnanai separate volumemaga vantherikkerathu(i think 5th volume)Padika padika kannula jalam vanthurum namakku, Srimathavoda roopalavanyam yaarsonnalum kettundey erukkalam.

Regards,
Ganeshan

மதுரையம்பதி said...

ஆமாம் கணேசன், பெரியவா சொன்ன விளக்கத்தைத்தான் முதன்மையா எடுத்துச் சொல்லியிருக்கேன்........

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

செளந்தர்ய லஹரி பெயர்க் காரணம் அருமை மெளலி சார்.
அதோடு தொடர்புடைய புராணக் கதையும் பதிவுக்குச் சுவை கூட்டுகிறது!

நந்திகேஸ்வரர் செய்ததும் நன்மையில் தான் முடிந்தது பாருங்கள்! சிறந்த அடியார்கள் தங்களை அறியாமல் செய்யும் சிறு தவறுகளும் கூட பகவத் சங்கல்பம் தான்!

அப்படியே நூறு ஸ்லோகங்களும் கிடைத்து இருந்தால் நம் சிற்றறிவுக்கு அதை நாம் புரிந்து கொண்டு இருப்போமோ என்னவோ?
அதான் யோகமும், பக்தியும் கலந்து சேர வேண்டும் என்பது இறைவியின் திருவுள்ளம் போலும்!

மதுரையம்பதி said...

//அப்படியே நூறு ஸ்லோகங்களும் கிடைத்து இருந்தால் நம் சிற்றறிவுக்கு அதை நாம் புரிந்து கொண்டு இருப்போமோ என்னவோ?//

சரியாகச் சொன்னீர்கள் கே.ஆர்.எஸ்.
இதனால்தான் கலியில் பக்தி மார்க்கத்தை பிடித்துக் கொள்ள உபதேசித்துள்ளார்கள் போலும்.

கீதா சாம்பசிவம் said...

sengalipuram ANANDA LAHIRI solluvaar, keedkanum, nalla irukkum.
intha panja linganggaLil, Keedarnathil oru lingamnu ezuthi irukkirathile konjam santhekama irukku. nan padisathile JYOTHISHMATH appadinu padicha ninaivu. ithu BADRINATH pokira vazhiyil varum. ADHI PEEDAMnu solluvanga. Sankara Madam rombave purathanamanathu. India vanthu marupadi orumurai parthudu solren. sorry for the english. G3 panna mudiyalai. etho pirasnai.

மதுரையம்பதி said...

//intha panja linganggaLil, Keedarnathil oru lingamnu ezuthi irukkirathile konjam santhekama//

இருக்கலாம் கீதாம்மா...நான் இந்த தகவலுக்கு மூலமாக கொண்டது பரமாச்சார்யரின் குரலை.

ambi said...

அருமையான விளக்கங்கள். அடுத்த பதிவுக்கு வெயிடிங்க்.

தம்பி முதலில் வந்து விட்டான் போலிருக்கே! :)

மதுரையம்பதி said...

//தம்பி முதலில் வந்து விட்டான் போலிருக்கே! :) //

ஆம், தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.

நன்றி அம்பி....

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கு சௌந்தர்யலகிரி அவ்வளவு பரிச்சயம் கிடையாது. உங்களால் தெரிந்து கொள்கிறேன்

@

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

தொடரட்டும் உனது பக்திப் பணி.. நானும் செளந்தர்ய லஹரியைப் பற்றிக் கேள்விப்பட்டதோடு சரி.. படித்ததில்லை. இப்போது படிக்கத் துவங்கியிருக்கிறேன் உன் மூலமாக.. உன் இறைப் பணி தொடரட்டும்..

மார்க்கேண்டய புராணத்தைப் போல் நிறைய புராணங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது பற்றி ஒரு தனிப்பதிவு போட்டு புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று எழுதினால் என்னைப் போன்ற இறை ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கும்..

நன்றி..

குமரன் (Kumaran) said...

மார்க்கண்டேய புராண கதையை இன்று தான் முதன்முதலில் படிக்கிறேன் மௌலி. யோக சாஸ்திரத்தையும் பக்தி சாஸ்திரத்தையும் அறியக் காத்திருக்கிறேன்

மதுரையம்பதி said...

//மார்க்கேண்டய புராணத்தைப் போல் நிறைய புராணங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

18 புராணங்கள் உள்ளது (தமிழில் பதினெண்கீழ் புராணங்கள் என்பதும் இதுதான் என்று நினைக்கிறேன்.


சிறிதுகாலத்தில் நான் சில பதிவுகள் இடுகிறேன உ.தமிழரே

மதுரையம்பதி said...

வர வேண்டும் குமரன்... நீங்கள் எல்லாம் திருத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.

Pradeep Adhamkavil said...

adu sari....inda SL padichu enna kedachudu ungaluku???mandira sastiram nu solrel...apo ethanai peruku siddhi/ambal or kumdalini arul kedachuruku????life la ennatha matrathai kandel inda SOUNDARYA LAHARI padichundu.......