நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:
ஹே! பர்வதராஜ புத்ரி, உனது கண்கள் திறப்பதால் லோகங்கள் ஸ்ருஷ்டியாகின்றன என்றும், மூடுவதனால் அழிகின்றன என்றும் சாதுக்கள் சொல்கின்றனர். உனது கண்கள் திறந்திருக்கும் போது உண்டான லோகங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் உனது கண்களை மூடாது இருக்கிறார் என்று தோன்றுகிறது.
அநிமிஷா என்றால் இமைகளால் கண்களை மூடாதிருத்தல். தேவர்களுக்கு அநிமிஷா என்றே பெயர் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தில் "உன்மேஷநிமிஷோத்பந்ந விபந்ந புவனாவளி" என்று ஒரு நாமம் இருக்கிறது. இதன் பொருள், அம்பிகை கண்களைத் திறப்பதால் புவனத்தின் ஸ்ருஷ்டியும், முடும் பொழுது பிரளய/ஸம்ஹாரமும் நடக்கிறது என்று பொருள்.
நிமேஷோந்மேஷாப்யாம் -நிமிஷ-அநிமிஷோப்யாம் - கண்களை திறப்பதும்-மூடுவதும்; ப்ரளயமுதயம் - ப்ரளய+உதயம் - லோகங்கள் அழிவதும், உருவாவதும்; யாதி இதி - அடைகிறது என்று; ஸந்த: - பெரியோர், யோகிகள்; ஆஹு - சொல்கிறார்கள்; தரணிதர ராஜ்ந்ய தநயே - பர்வதராஜ புத்ரி; த்வத் உந்மேஷாத் ஜாதம் - உன் கண்கள் திறப்பதால் உண்டான; இதம் ஜகத்-அசேஷம் - அசேஷமான இந்த ஜகத்தை; ப்ரளயத: பரிராதும் - ப்ரளய காலத்திலிருந்து காப்பாற்ற; தவ த்ருச: - உன் கண்கள்; பரிஹ்ரித நிமேஷா: இமைகள் கொட்டாது இருக்கிறது; சங்கே - ஸந்தேகமாகிறது.
தீந்தமிழில் கவிராயர் சொன்னது கீழே!
இணைவிழி இமையா நாட்டம்
எய்தியது அலரத் தோன்றும்
பணைநெடும் புவனம் இந்தப்
பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழ்து அழிவது எண்ணித்
துணிந்தநின் கருணை யென்றோர்
கணையினுங் கொடிய தென்னக்
கடவதோ கடவுண் மாதே.
----------------------------------------------------------------------------------------
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி
அம்பிகே! அபர்ணா!, காதுகளை அடுத்து நீண்டிருக்கும் உனது கண்கள், காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன்கண்களுக்கு வந்திடுகிறது, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள்.
மீனலோசனி, மீனாக்ஷி போன்ற பெயர்களை குறிக்கும் ஸ்லோகம் இது. அன்னையின் கண்களை மீன்களுக்கும், நிலோத்பல மலருக்கும் உவமையாகச்
சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
இந்த ஸ்லோகத்தில் அன்னையை அபர்ணா என்று கூறி விளிக்கிறார். "அபர்ணா" என்ற நாமத்திற்கு இரு பொருட்கள் உண்டு. பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து, அவர்களுக்கு ருணங்களை தீர்ப்பதால் அபர்ணா. அன்னை பார்வதியாகப் பிறந்து தபஸ் பண்ணும் சமயத்தில் இலையைக் கூட உண்ணாது கடுந்தவம் புரிந்தாளாம். பர்ணா என்றால் இலை, அபர்ணா என்றால் இலையையும் தவிர்த்தவள் என்று பொருள். [அபர்ணா து நிராஹாரா தாம் மாதா ப்ரத்யபாஷத: - ப்ரம்ம புராணம்] தவத்தின் போது இலையைக் கூட உண்ணாது தவிர்த்ததால் அபர்ணா என்று பொருள். பாஸ்கர ராயரது மனைவி, ஏழ்மையால் உண்ணவும் ஏதுமின்றி இருக்கையில் ராயர் அன்னையை 'அபர்ணா' என்றழைத்தவுடன் அவரது ருணத்தை தீர்க்க அன்னையே வந்ததாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது.
கர்ணேஜபநயந பைசுந்ய சகிதா: - காதுகளருகில் இருக்கும் கண்களது கோள் சொல்லுக்கு பயந்து; சபரிகா: - பெண்மீன்கள்; அநிமேஷா: - கண்களை மூடாது; தோயே நிலீயந்தே - நீரில் ஒளிந்துகொண்டு; நிபதம் - நிச்சயம்; இயம் ச ஸ்ரீ - உன் கண்களிலிருக்கும் லக்ஷ்மியும்; பத்தச்ச - மூடப்பட்ட; புடக - இதழ்களான; வாடம் - கதவுகள்; குவலயம் - நீலோத்பலம்; ப்ரத்யூஷே - காலையில்; ஜஹாதி - விட்டுவிடுகிறது; நிசி ச - ராத்திரியில்; தத் விகடய்ய - திறந்து கொண்டு {அரும்பான குவலய புஷ்பத்தை திறந்து கொண்டு}; ப்ரவிசதி - அதில் பிரவேசித்தல்;
கவிராயரது அமுத மொழி கீழே!
இடம்படர் கொடியே நின்கண்
இருசெவிக்கு உரைப்பதே என்று
அடர்ந்தெழு கயலின் கண்கள்
அடைப்பில் பயப்பட் டம்மா
கடும்பகற் கமல வீடுங்
கங்குல்வாய் நெய்தல் வீடும்
அடைந்தனள் கமலை யொன்றோன்ற
டைப்பன கண்டு கண்டாய்.