ஆனந்த லஹரி - 1 & 2



ஸிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி


சிவன், சக்தியான உன்னூடன் இருப்பதாலேயே (யதி பவதி) ஈஸ்வரனுக்கு பிரபஞ்சத்தை ஆக்கும் சக்தி கிடைக்கிறது. அவ்வாறு உன்னூடன் சிவன் இல்லாவிடில்(ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி). ஆகவே ஹரி-ஹர-பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்க்கோ (ப்ரணந்தும்), துதிப்பதற்கோ (ஸ்தோதும் வா) எவ்வாறு தகுதியுடையவனாவான். அதாவது பராசக்தியை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே பூர்வபுண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறார்.


மும்மூர்த்திகளையும் இயக்கும்சக்தியே பராசக்தி. அந்த சக்தியின் துணை கொண்டுதான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரங்கள் நடக்கிறது.அந்த சக்தியினை பணிந்து போற்றுவதற்கும் நல்ல ஊழ்வினை செய்திருக்க வேண்டும் என்கிறார்.


ஸ்பந்திதும் - அசைவதற்கு; அபி - கூட;
ந கலு குசல: - திராணியில்லாமை; விரிஞ்சாதி - பிரும்மா;

தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்று ஒரு வரி வரும்.அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதாக
அர்த்தம்.


தநீயாம்ஸம் பாம்ஸீம் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷித்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்


உன்னுடைய திருவடித்தாமரைகளிலுள்ள (சரண-பங்கேருஹ-பவம்) மிக நுட்பமான (பாம்ஸீம்) துகள்களை பிரும்மா (விரிஞ்சி:) சேகரித்து (லோகான்), அதன் மூலமாகவே உலகங்களைப் படைக்கிறார் (விரசயதி). செளரி: என்னும் ஆயிரம் தலையுடைய ஆதிசேஷன் இவ்வுலக வடிவான உன் பாதத் துகள்களை (கதமபி)எப்படியோ (வஹதி) தாங்குகிறார். ஹரனோ, இந்தப் பாதத்துகள்களை இன்னும் நன்றாக துகள்களாக்கி (பஸிதோத்தூளன-விதிம்) விபூதியாக அணியும் முறையை கடைப்பிடிக்கிறார்.


சில சுவாசினி பூஜைகளில் அன்னையாக வரிக்கப்பட்ட பெண்களை வஸ்திரத்தின் மீது நடக்கச் செய்து, அதில் சேர்கின்ற பாததூளிகளை சிரசில்
தரிப்பார்கள் ஸ்ரீ வித்யா உபாசகர்கள்.

2 comments:

குமரன் (Kumaran) said...

ஆகா. முதல் இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கின்றன மௌலி. மிக்க நன்றி.

ஹரி ஹர விரிஞ்சாதிகள் வணங்கும் உன்னை எந்த விதப் புண்ணியமும் செய்யாத அடியேன் எப்படி வணங்குவது? எப்படி போற்றுவது? மிக அருமையான கருத்து.

தேவியின் திருவடித் துகள்களின் சக்தியால் விரிஞ்சியாகிய பிரம்மதேவர் இந்த உலகத்தைப் படைக்கிறார். விஷ்ணுவின் அம்சமான ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் அன்னையின் திருவடித் துகள்களின் சக்தியால் இந்த உலகத்தைத் தலைகளில் தாங்கிக் காக்கிறார். தேவியின் திருவடித் துகள்களையே சிவபெருமான் உலகங்களை அழித்த பின் கிடைக்கும் பஸ்மமாக அணிகிறார். ஆகா. எவ்வளவு நன்றாக இருக்கிறது. இப்படி முத்தேவர்களின் முத்தொழில்களும் அன்னையின் திருவடித் துகள்களின் பெருமையாலேயே நிகழ்கிறது.

Kavinaya said...

படிக்கையில் கண்பனிக்கிறது!