க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா
அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;சிறிய இடையுடையவள்; சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்; வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும். மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.
க்வணத் சலங்கைகள் கிலுகிலுக்கும் (காஞ்சி தாமா) தங்க ஒட்டியாணம் பூண்டவளும் (கரி-கலப-கும்ப) யானையின் மஸ்தகம் போன்ற (ஸ்தன-நதா)ஸ்தனங்களால் சற்று வளைந்த உருவுடன், மத்த்யே - இடையில் (பரீக்ஷிணா) மெலிந்த; சரத்-சந்த்ரவதனா - சரத்கால பூர்ண சந்திரனையொட்டிய முகம்; கரதலை: - கரங்களால்; தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி - கரும்புவில் புஷ்ப பாணம், பாசம், அங்குசம் ஆகியவை; ததானா - தரித்த; புரமதிது: - முப்புரத்தை எரித்த சிவன்; ஆஹோ-புருஷிகா ஆச்சரியமான குணமுடைய பராசக்தி (ந:) எங்கள் (புரஸ்தாத்) எதிரில் (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.
ஸிதா ஸிந்தோர்-மத்த்யே ஸிரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலையாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம்
தாயே, அமுதக் கடலின் நடுவில், கற்பகத் தருக்களால் சூழப்பட்ட ரத்தினமயமான தீவில், கதம்ப மரங்கள் நிறைந்ததும், சிந்தாமணிகளால் அமைந்ததுமான அரண்மனையில், அதிவிசேஷமான மஞ்சத்தில் சதாசிவன் மடியில் அமர்ந்தவளும், ஞான-ஆனந்த அலை போன்றவளுமான உன்னை ஒரு சில புண்ணியசாலிகளே தியானம் செய்ய முடிகிறது.
ஸீதாஸிந்த்தோர்; - அமிர்தகடலின்; மத்த்யே - நடுவில் ; ஸிரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே - கல்பவிருக்ஷத் தோப்புக்களால் சூழப்பட்ட; மணித்வீபே
எனப்படும் ரத்ன தீவீல் (நீப-உபவனவதி) கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணி க்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே)மங்களகரமான சிம்மாஸனத்தில் பரமசிவனின் மடியில் (பரமசிவ-பர்யங்க நிலையாம்) சிதானந்தலஹரியாக (ஞானகடலலையாக) இருக்கும் உன்னை(தன்யா) புண்ணியவான்களான (கதிசன்) சிலரே பஜந்தி செய்ய முடிகிறது.
எனப்படும் ரத்ன தீவீல் (நீப-உபவனவதி) கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணி க்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே)மங்களகரமான சிம்மாஸனத்தில் பரமசிவனின் மடியில் (பரமசிவ-பர்யங்க நிலையாம்) சிதானந்தலஹரியாக (ஞானகடலலையாக) இருக்கும் உன்னை(தன்யா) புண்ணியவான்களான (கதிசன்) சிலரே பஜந்தி செய்ய முடிகிறது.
3 comments:
இதிலுள்ள காமாட்சி அன்னையின் படம் இதுவரை பார்த்திராதது! - நாயக்கமார் ஓவிய பாணியில்.
வருகைக்கு நன்றி ஜீவா. என் தந்தைக்கு மிகவும் பிடித்த படம். இதனை மூலமாக வைத்து அவர் வரைந்த படங்கள் எங்கள் இல்லத்தில் ப்ராதான்யம்.
சிந்தாமணி கிருஹத்தில் அன்னை வீற்றிருக்கும் திருக்கோலத்தை இந்தப் பாடலில் தரிசிக்க முடிகிறது. நன்றி மௌலி.
Post a Comment