ஆனந்த லஹரி - 9 & 10


மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே


தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலுள்ள ஜலதத்துவத்தையும். அநாகத சக்ரத்திலுள்ள வாயுதத்துவத்தையும், விசுத்தி சக்ரத்திலுள்ள ஆகாச தத்துவத்தையும் புருவங்களிடையே ஆஜ்ஞாசக்ரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும் பிளந்து கொண்டுபோய்,மேலே ஆயிரம் தளங்களுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் நீ உன் கணவனுடன் வீற்றிருக்கிறாய்.

மூலாதாரே - முலாதாரத்தில்; மஹிம் - பிருதிவி தத்துவம்; மணிபூரே - மணிபூரத்தில் ஜலதத்துவத்தையும்; ஸ்வாதிஷ்டானே - ஸ்வாதிஷ்டானத்தில்இருக்கும் ஹிதவஹம் - அக்னி தத்துவத்தையும் ஹ்ருதி - ஹ்ருதயத்தில் இருக்கும் அனாகதத்தில் வாயுவையும், மேலே விசுக்தியில் ஆகாசத்தையும்,(ப்ருமத்யே) புருவமத்தியில் ஆக்ஞையில் மனஸ்ஸும் ஆக எல்லாச் சக்ரங்களையும் பித்வா - ஊடுருவிச் சென்று ஸஹஸ்ராரே பத்மம் எனப்படும் கமலத்தில் (பத்யா ஸ்ஹ) உனது பதியுடன் (விஹரஸமாக) கூடியிருக்கிறாய்.

ஸீதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹ்ஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி
தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகுசந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்ரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.
(சரண-யுகள-அந்தர்-விகலிதை:) திருவடிகளிரண்டின் வழியே பெருகும் (ஸீதா-
தாரா-ஆஸாரை:) அம்ருத தாரையின் பிரவாகத்தால் (ப்ரபஞ்சம்)
ஐம்பூதங்களால் ஆன உடலில்லுள்ள நாடிகள் எல்லாவற்றையும் (ஸிஞ்சந்தி) நனைப்பவளாய் (ரஸ-ஆம்னாய-மஹஸ்:) அம்ருத கிரணங்களைப்
பொழியும் சந்த்ர மண்டலத்தில் இருந்து (ஸ்வாம்) உனது (பூமிம்) இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தி (புன: அபி) மறுபடியும் அடைந்து(புஜக-நிபம்) பாம்பைப் போல் (ஸ்வபிஷி) உறங்குகிறாய்; ஸ்வம் - உன்னுடைய; அத்யுஷ்ட-வலயம் - குண்டலவடிவு

14 comments:

Geetha Sambasivam said...

கடைசிப் படமும், மஹாமேருவும் அபாரம் மெளலி, இந்த gif. ல் இருந்து படங்கள் போடும்போது சரியாவே வரமாட்டேங்குதே? paint shop க்கு மாத்திட்டுத் தானே போட்டீங்க? எனக்கு இன்னும் அது சரியாவே வரலை. jpeg. மட்டும் தான் கொஞ்சம் பரவாயில்லை! :((((

ஸ்லோகங்களும் அதன் அர்த்தங்களும் நல்லா எழுதி இருக்கீங்க. இந்த இடத்தில் "சிந்தாமணி" பற்றிக் குறிப்பிட்டிருப்பது கபில முனிவர் கிட்டே இருந்த சிந்தாமணியா? அல்லது கிருஷ்ணன், ஜாம்பவான் கிட்டே இருந்து சண்டை போட்டு மீட்டு வந்த ச்யமந்தகமணியா? சிந்தாமணி வேறே, ச்யமந்தகமணி வேறேனு நம்பறேன்.

Anonymous said...

Aahaa,
Arputhamana varnanai anna, srilalitha vaasam seyyum grahem chinthamani grahem,kadamba marangalal aana kadamba vanathirku naduvil atthu irruppathaga itheeham,athanal thaan avalai //kadamba vana kuyeley//endru abhiramibhatter poottruvar illaya anna?

Antha Poorna mahameru namba aathu poojaila irrukka? mahabakhyam.

Regards,
Ganeshan

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாமேடம்,

படங்கள் இண்டெர்னெட் உபயம்.

சிந்தாமணி என்பது பற்றி அருமை இளவல் கணேசன் பின்னூட்டத்தில் அருளியிருக்கார் பாருங்க..... அதே.

மெளலி (மதுரையம்பதி) said...

தம்பியாரே...நன்றி...எப்போ எழுத ஆரம்பிக்கிறீர்கள்....உதவிக்கரம் வேண்டுமைய்யா...

ambi said...

மஹாமேரு படம் அற்புதம். சிலிர்த்து விட்டது.
விளக்கங்கள் மிக அருமை.

மெளலி (மதுரையம்பதி) said...

மாஹா மேரு உபயம் இண்டர் நெட்தான்....எங்கள் பூஜையில் ஸ்ரீ சக்ரம் மாத்திரமே.

ambi said...

//சிந்தாமணி என்பது பற்றி அருமை இளவல் கணேசன் பின்னூட்டத்தில் அருளியிருக்கார் பாருங்க//

ஹாஹா! இதேல்லாம் டூ மச்! சொல்லிட்டேன் ஆமா! :)))

மெளலி (மதுரையம்பதி) said...

//இதேல்லாம் டூ மச்! சொல்லிட்டேன் //

ஏன்?, என்ன டூமச்/த்ரிமச் எல்லாம்?...ஆமாம் என்ன வீக் எண்ட் ஆளையே காணவில்லை?

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா அம்பியும் தம்பியும் உங்கபக்கமா/
எல்லாம்அம்பாள் வர்ணனையின் மஹிமை

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சக்கர விளக்கம் அருமை மெளலி!
படங்களும் வெகு அருமை!
ஒவ்வொரு நாடியையும் நனைப்பது போல் என்று வரும் இடத்தில் படத்தைப் பார்த்துக் கொண்டேன்! அதிலும் நனைப்பது போலவே உள்ளது!

//கபில முனிவர் கிட்டே இருந்த சிந்தாமணியா? அல்லது கிருஷ்ணன், ஜாம்பவான் கிட்டே இருந்து சண்டை போட்டு மீட்டு வந்த ச்யமந்தகமணியா? சிந்தாமணி வேறே, ச்யமந்தகமணி வேறேனு நம்பறேன்//

கீதாம்மாவுக்கு மணி (Money இல்ல, மணி) மேல என்ன தான் அப்படிப் பாசமோ?
முன்பொரு முறை சீதையின் சூளாமணி பற்றி வல்லியம்மா பதிவில் கொழப்பினாங்க! :-)
அம்பி வந்து, சீதைக்கு அதை பேரம் பேசி வாங்கிக் கொடுத்ததே தலைவி தான்-னு சொல்லிட்டுப் போனாரு!

இப்ப சிந்தாமணி, சியமந்தக மணியா?
போச்சுடா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிந்தாமணி = புத்த மதத்திலும் உள்ளது (சீவக சிந்தாமணி)
சிந்தாமணி கணபதியும் பிரபலம்!

கபில முனிவர் சிவனாரிடம் பெற்ற மணி. அதை அபகரித்த கணா என்ற இளவரசனை, விநாயகரின் துணை கொண்டு தோற்கடித்து, மணியை மீண்டும் பெற்றார் கபிலர்.
இறைவனைச் சிந்தையுள் வைத்தால், அவனே சிந்தாமணி ஆவான் என்பதை உணர்ந்து, வெறும் மணியை நிராகரித்து விட்டார்! (அதனால் இப்ப அதை நீங்க கேட்டீங்கனா, அது எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது :-)

சியாமந்தகம் = சூரியன் சத்ராசித்துக்குத் தந்தது. அதைக் கண்ணன் களவாடினான் என்ற வதந்தி கிளம்ப, அதை ஜாம்பவானிடம் இருந்து மீட்டு வந்து கொடுக்கிறான்.

கெளஸ்துப மணி = பாற்கடல் கடைந்து போது தோன்றியது. பெருமாளின் திருமார்பை அலங்கரித்தது! பொன் சிவப்பு நிறம் கொண்ட மணி!

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் நீண்ட சாரம் மிகுந்த பின்னூட்டத்திற்கும் நன்றி ரவி.

இங்கு சிந்தாமணி என்பது அன்னை வசிக்கும் இல்லத்தின் பெயர்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கும் நீண்ட சாரம் மிகுந்த பின்னூட்டத்திற்கும் நன்றி ரவி.

இங்கு சிந்தாமணி என்பது அன்னை வசிக்கும் இல்லத்தின் பெயர்.

குமரன் (Kumaran) said...

பஞ்சபூதங்களால் ஆன பிரகிருதியைத் தாண்டி இருக்கும் அப்ராகிருதமான இடத்தில் ஜீவனும் சிவனும் லயமாகி இருப்பதே முக்தி என்று இன்னொரு இடத்தில் படித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. அதுவே மூலாதாரம் முதலிய சக்ர ரூபங்களாக விளங்கி குண்டலினி ஸ்வரூபினியான தேவி சஹஸ்ராரத்தில் தன் பதியுடன் கலந்து நிற்கும் பேரானந்த நிலை என்று இன்னொரு வகையில் விளக்கப்பட்டிருக்கிறது. புரிகிறது. அனுபவத்தில் வர அம்மையின் அருள் வேண்டும்.

சஹஸ்ராரத்தில் போய் தங்கி பிரபஞ்சமயமான அதில் ஈசனுடன் கூடிய போதும் அம்ருத தாரைகளால் உடல் முழுவதையும் நனைத்த போதும் சில நேரங்களில் அம்பிகை குண்டலினியாய் மீண்டும் மூலாதார சக்ரத்திற்கு வந்து தங்குவதையும் அப்படி ஜீவன் முக்தரானவர்களிடம் மேலும் கீழுமாய் சஞ்சாரம் செய்வதையும் மிக அழகாக ஆசார்யர் விளக்கியிருக்கிறார்.

மிக்க நன்றி மௌலி.