ஆனந்த லஹரி - 25 & 26


த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

அம்பிகே! உன் பாதத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணினால் போதும், அதுவே த்ரிமூர்த்திகளுக்கும் பண்ணியதாகிறது. அது எப்படி என்றால், த்ரிமூர்த்திகளும் உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் அருகில் அவர்களது சிரஸை வைத்து, சிரஸின் மேலே கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி செய்கிறார்கள். ஆகையால் உன் பாதத்தில் செய்யும் அர்ச்சனையானது அவர்களது சிரசுக்கும் சேர்த்து பண்ணியதாகிறது . இங்கு ருத்ரனுக்கும், சிவனுக்கும் வித்தியாசம் காண்பிக்கும் விதமாக த்ரிகுணத்தின் மூர்த்திகளில் அன்னையின் தமஸில் ஜனித்த ருத்ரன் அன்னையை வணங்குவதாக கூறியுள்ளார். அதாவது அன்னையின் தமஸிலிருந்து ஜனித்ததால் ருத்ரன் அன்னையின் குழந்தையாகிறார். குழந்தை தாயை வணங்குவது சரிதானே?.

த்ரிகுணங்கள் அப்படின்னு இங்கு ஆச்சார்யார் சொல்வது முத்தொழில்களையே. சிவம் சதுர்த்தம் என்பார்கள். த்ரிகுணங்களுக்கு மேலே இருக்கும் துரீயம் என்ற ப்ரஹ்ம நிலைதான் சதுர்த்தம். சாதாரணமாக ப்ரம்ஹம் கார்ய நிலைகளில் அதாவது த்ரிகுண நிலைகளில் இல்லாமல் தனித்து இருக்கும் அதுவே துரீயம். அதன் சித்சக்திதான் காமேஸ்வரி அப்படின்னு முதல் 10 ஸ்லோகங்களிலேயே சொல்லியிருக்கார். இந்த சித்-சக்திதான் த்ரிமூர்த்திகளை த்ரிகுணங்களுக்கான செயல்களுக்காக உருவாக்கியிருக்கிறாள். எனவே 'த்ரிகுண-ஜநிதானாம்'. அவள் ஜனனி, ஜனித்தவர்கள் மும்மூர்த்திகள் அப்படின்னு சொல்வது சரிதானே. 'தவ சிவே' துரீய நிலையில் இருக்கும் சிவன் என்பதாக செயலில்லாமல் ப்ரம்ஹ நிலையில் இருக்கும் சிவனே ஸதாசிவன். இதுவே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும்போது, "ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணிஸம்ஹாரிணி ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரி" என்பதாக சொல்லப்படுகிறது.

சரீரத்தில் உள்ள ஆராதாரங்களை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை ப்ரம்மக்கிரந்தி, விஷ்ணுக்கிரந்தி, மற்றூம் ருத்ரக்ரந்தி என்பதாகச் சொல்லப்படும். ஆறாதாரங்களில் அம்பிகையை அந்தர்முகமாக பூஜிக்கப்படும் போது மும்மூர்த்திகளையும் சேர்த்துப் பூஜிக்கப்பட்டதாகும்.
பவேத் - ஆகும்; நிகடே - சமீபத்தில்; சச்வத் - எப்போதும்; முகுலித கரோ - குவித்த கரங்கள்;

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


மஹா ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம். அதாவது பிர்ம்மா அழிவடைகிறார்; விஷ்ணு அப்படியே செயலின்றி சிலையாகிறார். எல்லோருக்கும் விநாசத்தை தரும் யமனும் நாசமடைக்கிறான். (கீனாசன் என்பதும் யமனது பெயரே). செல்வத்துக்கெல்லாம் அதிபனான குபேரனுக்கும் அச்செல்வத்தால் பயனின்றி முடிந்து போகிறான். (தநதன் என்பது குபேரனுக்கான பெயர்). ஒரு இந்திரன் மட்டுமல்லாது இந்திரப் பட்டாளமே அழிவுக்குள்ளாகிறது. அதென்ன இந்திரப் பட்டாளம்?. ஸ்ருஷ்டி ஆரம்பித்ததில் இருந்து மஹா ப்ரளயம் வரை பல மன்வந்திரங்கள் வந்திருக்குமல்லவா, அவற்றில் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் இருந்திருப்பானல்லவா, அதனால் தான் மாஹேந்த்ரீ விததி என்கிறார் போலும். இந்தமாதிரி மூம்மூர்த்திகளும், தேவர்களும், முனிவர்களும் கூட மீளாத்துயிர் கொள்ளூம் அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆச்சார்யார்.

இங்கு அம்பாளை குறிப்பிடுகையில் ஸதி என்றே கூறுகிறார். அன்னை பரம பதிவ்ரதை. பதிக்கு மரியாதை இல்லாத இடத்தில் தான் இருப்பது சரியல்ல என்றும் அப்படி மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி. அவளது இன்னொரு பெயரே ஸதி. இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?. அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?. ஆகையால்தான் அவன் மட்டும் ப்ரளய காலத்தில் அழிவில்லாது இருக்கிறான் என்கிறார். இப்பாடலில் தநன, நிதந, விநாச, கீநாச என்று வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் பகவத் பாதர்.

86 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சரணயோர்-யா விரசிதா//

விளக்கம் ப்ளீஸ்!

//மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி. அவளது இன்னொரு பெயரே ஸதி. இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?//

கொஞ்சம் விளக்குங்கண்ணா!
தேவி ஜீவனை விட்டாள்-னும் சொல்றீங்க! அழிவில்லாதவள் ன்னும் சொல்றீங்க! எப்படி?
(அறி-வினா ன்னு எல்லாம் சொல்லி எஸ் ஆவக் கூடாது! அனைவரும் பயன்பெற விளக்கணும், ஆமா!)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கொஞ்சம் சிக்கலான கேள்வி!
மன்னிக்கவும்! வேண்டாம் என்றால் பிரசுரிக்க வேண்டாம்!
அறியும் விழைவால் கேட்கிறேன்!

//அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?//

அன்னை அழிவில்லாதவள்!
அவன் அழிவில்லாதவன்!
ஆனால் அவர்கள் குழந்தைகளான மும்மூர்த்திகள் மட்டும் ஏன் அழிகிறார்கள்?

மகா பிரளய காலத்தில்
கணபதி
முருகப் பெருமான்
போன்றோரின் நிலை என்ன? அவர்களுக்கும் அழிவா??

Kavinaya said...

சில விஷயங்கள் எனக்குப் புரிவதில்லை (உங்கள் தவறல்ல - என் ஆன்மீக அறிவில் உள்ள குறையே காரணம் :). ஆனாலும் உங்கள் தயவால் மையக்கருத்து புரிகிறது.

//அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆச்சார்யார்.//

இதற்கான விளக்கத்தை அழகாகத் தந்திருக்கிறீர்கள், மௌலி!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா!!!

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லையே....
உங்களுக்கு தெரிந்த அடவு/ஜதி/ எல்லாம் எனக்கு தெரியாது.

நானும் இப்போதுதான் செளந்தர்ய லஹரியை புரிந்து கொள்ளத் தலைப்பட்டிருக்கிறேன்...

மெளலி (மதுரையம்பதி) said...

//அன்னை அழிவில்லாதவள்!
அவன் அழிவில்லாதவன்!
ஆனால் அவர்கள் குழந்தைகளான மும்மூர்த்திகள் மட்டும் ஏன் அழிகிறார்கள்?

மகா பிரளய காலத்தில்
கணபதி
முருகப் பெருமான்
போன்றோரின் நிலை என்ன? அவர்களுக்கும் அழிவா??//

வாங்க கே.ஆர்.எஸ், மும்மூர்த்திகள் அன்னையின் மூன்று குணங்களே அப்படி உருவகம்...அதனால் அழிவு....யோகத்தில் இந்த மூன்றிலிருந்து வெளிவர வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஆம், கணபதி, ஸ்கந்தன் எல்லோருக்கும் அழிவே!!!

ambi said...

//ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம்//

அப்படினா ஈச்வரன் வேற ருத்ரன் வேற இல்லையா?

ambi said...

//அறி-வினா ன்னு எல்லாம் சொல்லி எஸ் ஆவக் கூடாது! அனைவரும் பயன்பெற விளக்கணும், ஆமா!)//

அந்த இத்தாலி பெண்ணுக்கு அண்ணன் விளக்கிய மாதிரி நீங்களும் விளக்கனும் ஆமா! :))

என்ன சரி தானே கேஆரெஸ் அண்ணே? :p

Geetha Sambasivam said...

இதுவரை கொடுத்த விளக்கங்களிலேயே இது ரொம்பவே ஆழ்ந்து உணர்ந்து எழுதப் பட்டுள்ளது. வாழ்த்துகள். அருமையான விளக்கங்கள்.

Geetha Sambasivam said...

//கொஞ்சம் விளக்குங்கண்ணா!
தேவி ஜீவனை விட்டாள்-னும் சொல்றீங்க! அழிவில்லாதவள் ன்னும் சொல்றீங்க! எப்படி?
(அறி-வினா ன்னு எல்லாம் சொல்லி எஸ் ஆவக் கூடாது! அனைவரும் பயன்பெற விளக்கணும், ஆமா!)//

இதுக்குப் பதில் சொல்லி இருக்கலாமோ?????

மெளலி (மதுரையம்பதி) said...

//தேவி ஜீவனை விட்டாள்-னும் சொல்றீங்க! அழிவில்லாதவள் ன்னும் சொல்றீங்க! எப்படி?//

சாக்தத்தின் படி தேவியின் ஒரு ரூபமே பார்வதி/மலைமகள் போன்றது....ஸதியாக அவள் அழிந்தாலும், ப்ரம்ஹ சக்தி அப்படியே இருக்கிறதாம்...அதனால்தான் அவள் அழிவில்லாதவள்....இதே மூல சக்தி/ப்ரம்ஹசக்தி/பராசக்தியின் முக்குணங்களே த்ரிமூர்த்திகள்....எனவே ஸதி தேவிபோல் அவர்களும் ப்ரளயகாலத்தில் அழிவினை அடைகிறார்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி சார்... :-)

//அப்படினா ஈச்வரன் வேற ருத்ரன் வேற இல்லையா?//

ஆமாம் அம்பி....ருத்ரன் வேற, ஈஸ்வரன் வேற. ஏகாதச ருத்ரர்கள் அப்படின்னு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க தானே.

இன்னும் தெளிவாச் சொல்லணுமானா, ருத்ரன் வேற, மஹேஸ்வரன் வேற, சதாஸிவன் வேற. பஞ்சப் ப்ரேதஸனா அப்படிங்கறது பத்தி தனியா ஒரு பதிவே எழுதலாம்.....

மதுரையம்பதில ப்ளாக்-ல அழகிக்கு ஆயிரம் நாமங்கள் அப்படிங்கற லேபிள்ள எழுதறேன்...கொஞ்சம் டயம் வேணும். :-).....அதுக்கு முன்னால் தம்பி கணேசனிடம் கேட்டீங்கன்னா தெளிவாச் சொல்லிடுவார். :)

மெளலி (மதுரையம்பதி) said...

//அந்த இத்தாலி பெண்ணுக்கு அண்ணன் விளக்கிய மாதிரி நீங்களும் விளக்கனும் ஆமா!//

ஆஹா!...எனக்கு அந்த மாதிரியெல்லாம் விளக்க தெரியாது...
ஏதேது அம்பி நீங்க மலையையும்-மடுவையும் கம்பேர் பண்றீங்க...

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜெர்ரியம்மா, ஓ சாரி கீதாம்மா!!


//இதுவரை கொடுத்த விளக்கங்களிலேயே இது ரொம்பவே ஆழ்ந்து உணர்ந்து எழுதப் பட்டுள்ளது. வாழ்த்துகள்//

ஆஹா, ஒரே ஸ்டேட்மெண்ட்ல உ.கு- வெ.கு எல்லாம் வச்சுட்டீங்களே.. :-) இப்போ இதை பாராட்டா நினக்கறதா, இல்லை என்னோட பழைய பதிவுகளை பார்க்கச் செல்வதா? அதையும் நீங்களே சொல்லிடுங்க கீதாம்மா :-)

உங்க இன்னுமொரு பின்னூட்டத்துக்கு பதிலிட்டேன். :)

திவாண்ணா said...

மௌலி, கொஞ்சம் உதைக்கிறதே!
அன்னையை பிரம்ஹ ஸ்வரூபிணீ என்று சொல்லி ஆகிவிட்ட பின் பதி எல்லாம் வராதே!
ப்ரம்ஹம் ஏகம் சத்யம்.

நானும் முதலில் பிரம்ஹத்தின் ரஜோ ரூபம் சிவன் என்றே நினைத்தேன். சமீபத்தில்தான் ப்ரம்மா செயலாகவே படைப்பதால் ரஜோ ரூபம்; விஷ்ணு ரட்சிப்பதால் சத்வம்; சிவன் அழிப்பதால் தமோ ரூபம் என்று தெரிந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மும்மூர்த்திகள் அன்னையின் மூன்று குணங்களே அப்படி உருவகம்//

குணங்கள் ஏன் அழிய வேண்டும்?
இறைவன் (இறைவி)-யே கல்யாண குணங்கள் கொண்டவர் தாமே!

ஞானம், ஆனந்தம் முதலான குணங்களைப் பரப்பிரம்ம ஸ்வரூபம்/ஸ்வரூபிணிக்கு விதிக்கிற வேத வாசகம் பொய்யா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆம், கணபதி, ஸ்கந்தன் எல்லோருக்கும் அழிவே!!!//

அப்படி என்றால் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற வாசகத்தின் பொருள் என்ன?
முருகன் அழிவான் என்றால் மறுமுறை முருகன் பிறப்பானா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமாம் அம்பி....ருத்ரன் வேற, ஈஸ்வரன் வேற. ஏகாதச ருத்ரர்கள் அப்படின்னு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க தானே//

கேள்விப்பட்டிருக்கோம்!

//இன்னும் தெளிவாச் சொல்லணுமானா, ருத்ரன் வேற, மஹேஸ்வரன் வேற, சதாஸிவன் வேற//

ஆலயங்களில் நாம் வழிபடுவது யாரை?
நடராஜர்,
மகாலிங்க ஸ்வாமி,
இவர்கள் யார்?
ருத்ரனா? மகேஸ்வரனா? சதா சிவனா?

அப்போ சிவன்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதே மூல சக்தி/ப்ரம்ஹசக்தி/பராசக்தியின் முக்குணங்களே த்ரிமூர்த்திகள்....எனவே ஸதி தேவிபோல் அவர்களும் ப்ரளயகாலத்தில் அழிவினை அடைகிறார்கள்//

சதி தேவியின் அழிவு பிரளய காலம் அல்ல!
அவள் அவதாரங்களைப் போன்றவள்!

மும்மூர்த்திகள் அப்படி அல்லவே! அவர்கள் பரமாத்மாவா? இல்லை ஜீவாத்மாக்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
மௌலி, கொஞ்சம் உதைக்கிறதே!
அன்னையை பிரம்ஹ ஸ்வரூபிணீ என்று சொல்லி ஆகிவிட்ட பின் பதி எல்லாம் வராதே!
ப்ரம்ஹம் ஏகம் சத்யம்//

அடியேனுக்கும் இதே கேள்வி தான்!
அன்னை பிரம்மம் என்றால், அப்போது அவள் பதி யார்?

பிரம்மான அவளைப் பதிவ்ரதை என்று குறிப்பது முறையா?
பிரம்மம் ஏகமா? துவைதமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவனுக்கு ருத்ரம் சமகம் போல், விஷ்ணுவுக்கு புருஷ சூக்தம் போல்,

அம்பாளுக்கு வேதப் பிரமாண சுலோகங்கள் உண்டா? எவை என்று அறியத் தருவீர்களா?

Anonymous said...

நன்னா கோர்வையா எழுதிருக்கே பா! ரெண்டு மூனு பிளாக் வெச்சுண்ட்ருக்கே போலிருக்கே! எதுல எழுதறன்னே தெரிய மாட்டேங்கறது. ஏதோ அந்த அம்பாள் தான் கூட்டிண்டு வந்த மாதிரி வந்துட்டேன்.

பழய பதிவெல்லாம் நேரம் கிடக்கறச்சே படிக்கறேன்.

- சுந்தர கன பாடிகள்
(ரேஷன் கார்டு எண் - TN/07/65321548)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கனபாடிகளே....

ஆச்சார்ய ஹ்ருதயம்/ஸ்தோத்ர மாலா / ப்ளாக் யூனியன் கூட்டுப்பதிவு, பெரியவர் கே.ஆர்.எஸ், திரு திரச, பெரியம்மா கீதாம்மா, திரு. குமரன் போன்ற் ஜாம்பவான்களுடன். செளந்தர்ய லஹரி, மதுரையம்பதி எனக்கே எனக்கானது..

ரேஷன் கார்ட் நம்பர் எல்லாம் எதுக்கு....உங்க போன் நம்பர் குடுங்க...பேசலாம் :)

திவாண்ணா said...

கேஆர் எஸ்,
சாக்தத்தில் எப்படி பார்க்கிரார்கள் என்று தெரியவில்லை.

மஹா பிரலயத்தில் எல்லாமே பிரம்ஹத்தில் ஒடுங்கிவிடும். இதுதான் இதன் குணம் என்று சொல்ல முடியாமல் போவதால் குணங்கள் அழிவதாக ஆகிறது.
பிரம்ஹத்திலிருந்து மீண்டும் லோக உற்பத்தி ஆகும்போது பிரம்ஹத்தின் தமோ குணமே ருத்திரன், ரஜோ குணமே பிரம்ம, சத்வ குணமே விஷ்ணு.
three aspects of the same being!

மெளலி (மதுரையம்பதி) said...

//அம்பாளுக்கு வேதப் பிரமாண சுலோகங்கள் உண்டா? எவை என்று அறியத் தருவீர்களா?//

தூர்க்கா சூக்தம், ஸ்ரீசூக்தம், நீளா சூக்தம், ஸரஸ்வதி சூக்தம் எல்லாம் இருக்கே....இன்னும் சொல்லப் போனால் வேத சாகைகளை தந்த பல சாக்த ரிஷிகள் இருக்கிறார்கள்...

திவாண்ணா நீங்க சொல்லுங்களேன்...:)

மெளலி (மதுரையம்பதி) said...

//அடியேனுக்கும் இதே கேள்வி தான்!
அன்னை பிரம்மம் என்றால், அப்போது அவள் பதி யார்?

பிரம்மான அவளைப் பதிவ்ரதை என்று குறிப்பது முறையா?
பிரம்மம் ஏகமா? துவைதமா?//

திவாண்ணா, கே.ஆர்.எஸ்,

சாக்தத்தில், ப்ரம்மம் என்பது நிஸ்சலனமற்ற ஜடப்பொருள் போன்றது...அதற்கு உயிர்/உணர்வு தருவதே சக்தி....

எப்படி சிவலிங்கத்தில் பாணம் சிவன், ஆவுடை சக்தி என்கிறோமோ அது போல, ப்ரம்மத்தை உணரச்செய்யும் சக்தியே பராசக்தி...

மெளலி (மதுரையம்பதி) said...

//மும்மூர்த்திகள் அப்படி அல்லவே! அவர்கள் பரமாத்மாவா? இல்லை ஜீவாத்மாக்களா?//

சாக்தம் சொல்வதுபடி மும்மூர்த்திகள் சக்தியின் portfolio managers...they have rotation, like Indiran...:)

பரமாத்மா-ஜீவாத்மா அப்படின்னு வந்துட்டா அது மனித வாழ்வினையும் இணைக்கக் கூடியது...

மும்மூர்த்திகள் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் பரமாத்மாவை அடைய ஒரு வழி காண்பிப்பவர்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆலயங்களில் நாம் வழிபடுவது யாரை?
நடராஜர்,
மகாலிங்க ஸ்வாமி,
இவர்கள் யார்?
ருத்ரனா? மகேஸ்வரனா? சதா சிவனா?

அப்போ சிவன்?//

நல்ல கேள்வி.

லிங்க ரூபம் என்பது சிவ-சக்தி ஐக்கிய ரூபம்...ஆக அது சதாசிவன் என்பர்.

எல்லா சிவன் கோவில்களிலும் இருக்கும் உற்சவ மூர்த்தி மாஹேஸ்வர ரூபம்...

ருத்ரன் என்பதை லிங்க ரூபமாகவே கோவில்களில் காணலாம். பழைய சிவன் கோவில்களில் தென் பகுதியில் தக்ஷிணா மூர்த்திக்கு எதிரே ஒரு பக்கமாக இருக்கும். ஏன் இந்த ரூபம் என்பது தெரியவில்லை..மேலும் ருத்ரன் மந்திர ரூபமாகவே அதிகம் அறியப்பட்டுள்ளான் எனலாம். சரிதானே திவாண்ணா?

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படி என்றால் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற வாசகத்தின் பொருள் என்ன?
முருகன் அழிவான் என்றால் மறுமுறை முருகன் பிறப்பானா?//

கே.ஆர்.எஸ், பரப்ரம்மத்தை சாக்தர்கள் சக்தியாக பார்ப்பது போல முருக பக்தர்கள் குமரனாக பார்த்திருக்கிறார்கள். அதனால் இந்த வாசஙகங்கள்...இதில் நான் அதிகம் நுழைய விரும்பவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஞானம், ஆனந்தம் முதலான குணங்களைப் பரப்பிரம்ம ஸ்வரூபம்/ஸ்வரூபிணிக்கு விதிக்கிற வேத வாசகம் பொய்யா?//

வேத வாசகம் பொய்யான்னு கேட்கக் கூட எனக்கு த்ராணி கிடையாது...நான் அதை கேள்வியின்றி ஏற்கிறவன். :)

ஞானம்/ஆனந்தம் எல்லாம் கடந்த நிலை பரபிரம்ம நிலை.பரபிரம்மத்துக்கு அசைவு/அசைவற்ற இரு நிலைகளாக கொண்டு அசைவற்ற நிலையினை சிவம் என்றும் அசையும் சக்திக்கு பராசக்தி என்றும் சொல்லக் கேட்டிருக்கேன்.

திவாண்ணா said...

// அப்படினா ஈச்வரன் வேற ருத்ரன் வேற இல்லையா?//
ஈஸ்வரன் என்கிற சப்தம் பொதுவா இறைவனை குறிக்கும். வடக்கத்திகாரர்களுக்கு இந்த குழப்பம் இல்லை! அவங்க சர்வ சாதாரணமா அப்படித்தான் புழங்கறங்க.

ஈசன் vs ஜீவன் என்கிறது ஞான மார்கம்.
ருத்திரன் பர பிரம்மத்தோட தமோ குண ரூபம்.

திவாண்ணா said...

மௌலி, கேஆர்எஸ்
பரப்பிரம்ஹம் ஒரு நிலை.
சிவ சக்தி யாக பார்ப்பது வேற நிலை. matter -energy என்கிற மாதிரின்னு தோன்றியதுண்டு.
எல்லாமே இந்த 2 க்குள்ள அடக்கிடலாம்தானே?

புராணங்கள் எளிய மக்களுக்கு எளிமையாக ஆன்மீகத்தை புரிய வைக்க வந்தவை. எந்த புராணத்தை எடுத்துண்டாலும் அந்த அந்த தேவதையை பர பிரஹ்மமா கொண்டே கதை சொல்லி இருக்கும். பல் இடங்கள்ல மற்ற தேவதைகளை பழிக்கவும் பழிக்கலாம். இது ஒரு ஈடுபாட்டை அதிகரிக்கச்செய்கிற யுக்திதான். இதையே இப்ப அறிவாளிகளும் பிடிச்சுகிட்டு இருக்கிறதால விவாதங்கள் அதிகமா இருக்கு. அதுல ஒரு தெளிவும் பிறக்காது.

சூக்தங்கள் வேதங்களில் பல இடங்களிலிருந்து எடுக்கிற compilation. சிலதை தவிர மற்றவை ஒரே இடத்தில் இருக்கிறதில்லை. அவற்றை பூஜைக்கும் ஹோமங்களுக்கும் பயன்படுத்தலாமே தவிர புரிதலுக்கு பயனாகாது. பல இடங்களில சப்தம் இருக்கிறதாலேயே அதை சூக்தத்துல சேத்து இருக்காங்க. அதோட இடத்துல அர்த்தத்தை பாத்தா உதைக்கும்! வேற மாதிரியே இருக்கலாம்.
இப்ப தூக்கம் வரது.
நாளை இன்னும் எழுதலாமா? ஆனா இதுவே இன்னொரு பதிவு அளவுக்கு போயிருச்சு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/பல் இடங்கள்ல மற்ற தேவதைகளை பழிக்கவும் பழிக்கலாம். இது ஒரு ஈடுபாட்டை அதிகரிக்கச்செய்கிற யுக்தி தான்.
இதையே இப்ப அறிவாளிகளும் பிடிச்சுகிட்டு இருக்கிறதால விவாதங்கள் அதிகமா இருக்கு. அதுல ஒரு தெளிவும் பிறக்காது//

சத்தியமான வார்த்தை!
நின்றி திவா சார்!

அதனால் தான்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா
என்று மாணிக்கவாசகர் குற்றாலத்து சித்ரசபை ஈசனைப் பாடுகிறார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா

//சாக்தர்கள் சக்தியாக பார்ப்பது போல முருக பக்தர்கள் குமரனாக பார்த்திருக்கிறார்கள். அதனால் இந்த வாசஙகங்கள்...இதில் நான் அதிகம் நுழைய விரும்பவில்லை//

நானும் தான்!
அதனால் இறைவனின் குறிப்பிட்ட பெயரைக் கொள்ளாது, தத்துவ மார்க்கமாக மட்டும் இனி இங்கு உரையாடலாம்! உங்களுக்கு இதில் மறுப்பு ஒன்றும் இல்லையே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ப்ரம்மத்தை உணரச்செய்யும் சக்தியே பராசக்தி...//

ப்ரம்மம் வேறு, அதை உணரச் செய்யும் சக்தி வேறா?
அத்வைத நெறியில் ஆதிசங்கரர் இவ்வாறு குறித்துள்ளாரா?

//பரபிரம்மத்துக்கு அசைவு/அசைவற்ற இரு நிலைகளாக கொண்டு அசைவற்ற நிலையினை சிவம் என்றும் அசையும் சக்திக்கு பராசக்தி என்றும் சொல்லக் கேட்டிருக்கேன்//

ஹூம்...என் முந்தைய கேள்விக்குப் பதில் போலவும் இருக்கு! ஆனால் பதிலும் இல்லை!

பரப்பிரம்மம் இரண்டு நிலைகள் (அசைவு/அசைவின்மை) என்று சங்கரர் அத்வைத நெறியில் காட்டி உள்ளாரா அண்ணா?

//ப்ரம்மத்தை உணரச்செய்யும் சக்தியே பராசக்தி//

பரம்மமே தன்னை உணரச் செய்ய தானே சக்தியாகவும் இருக்கு!
தானே பிரம்மமாகவும் இருக்கு!
சரியா அண்ணா?

சரி என்றால் என் அடுத்த கேள்வி!
அதே போல் தானே பிரம்மம் மூன்று வித குணங்களாகவும் உருக் கொண்டு தன்னை உணரச் செய்கிறது?

அப்படி என்றால் அவற்றுக்கு மட்டும் அழிவு ஏன்? சக்திக்கு ஏன் அழிவு இல்லை?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மும்மூர்த்திகள் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் இடைப்பட்டவர்கள்//

இந்த இடைப்பட்ட நிலைக்கு ஏதாவது குறிப்பிட்ட பெயர் இருக்கா?
(மத்யாத்மா...அது போல? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரேஷன் கார்டு எண்ணெல்லாம் தந்து கலக்கிடும் சுந்தர கனபாடிகள் அவர்களே!

தாங்களும் பிரம்மம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை அறியத் தர வேணுமாய் பிரார்த்திக்கிறேன்!

//பெரியவர் கே.ஆர்.எஸ்//

மெளலி அண்ணா, ஏன் அடியேனை இப்படி முதலில் முன்னிறுத்துகிறாரோ தெரியலை!
அடியேன் பொடியேன்! மிக மிகச் சிறியேன்! நாயினும் கடையேன்!
அறியாமை ஒன்று தான் அறிவேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/ஈஸ்வரன் என்கிற சப்தம் பொதுவா இறைவனை குறிக்கும். வடக்கத்திகாரர்களுக்கு இந்த குழப்பம் இல்லை!//

இங்கு தெற்கில் நமக்கும் குழப்பம் இல்லை திவா சார்!
ஈஸ்வரன்=இறைவன்!
வேங்கடேஸ்வரேன் என்கிறோமே!
சத்/அசித்/ஈஸ்வரன் என்பது தானே தத்துவமும் கூட!

//ஈசன் vs ஜீவன் என்கிறது ஞான மார்கம்//

உண்மை!
ஈசனும் அல்லாது, ஜீவனும் அல்லாது இருக்கும் நிலை பற்றித் தான் மெளலி அண்ணாவிடம் கேட்டேன்!

பரமாத்மாவும் அல்லாது, ஜீவாத்மாவும் அல்லாது, மும்மூர்த்திகள், மற்ற தெய்வங்கள் ஆகிய இந்த இடைப்பட்ட நிலை பற்றி பரமாச்சார்யர், ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டி அருளும் குறிப்பை யாராவது சற்றே விளக்கினால் நன்றாக இருக்கும்!

மெளலி (மதுரையம்பதி) said...

//இந்த இடைப்பட்ட நிலைக்கு ஏதாவது குறிப்பிட்ட பெயர் இருக்கா?
(மத்யாத்மா...அது போல? :-)//

எனக்குத் தெரிந்து மத்யாத்மாவும் இல்லை, மத்யமாவும் இல்லை. :-)

இது ஒரு உருவகம் தானே. சாதகன் பரபிரம்மத்தை உணர்ந்தால் இதையும் உணரும் சாத்தியம் இருக்குமோ?

மெளலி (மதுரையம்பதி) said...

//நானும் தான்!
அதனால் இறைவனின் குறிப்பிட்ட பெயரைக் கொள்ளாது, தத்துவ மார்க்கமாக மட்டும் இனி இங்கு உரையாடலாம்! உங்களுக்கு இதில் மறுப்பு ஒன்றும் இல்லையே?//

கண்டிப்பாக உரையாடலாம்...:)

மெளலி (மதுரையம்பதி) said...

//ப்ரம்மம் வேறு, அதை உணரச் செய்யும் சக்தி வேறா?
அத்வைத நெறியில் ஆதிசங்கரர் இவ்வாறு குறித்துள்ளாரா?//

ஆதிசங்கரர் சொல்லவில்லை. தேவி பாகவதம் சொல்லியிருக்கு. அந்த ஸ்லோகம் நினைவில் இல்லை..தம்பி கணேசனுக்கு தெரிந்திருக்கலாம். விசாரித்துச் சொல்கிறேன்.

//பரம்மமே தன்னை உணரச் செய்ய தானே சக்தியாகவும் இருக்கு!
தானே பிரம்மமாகவும் இருக்கு!
சரியா அண்ணா?//

ஆமாம், இதுதான் என் புரிதல்.

//சரி என்றால் என் அடுத்த கேள்வி!
அதே போல் தானே பிரம்மம் மூன்று வித குணங்களாகவும் உருக் கொண்டு தன்னை உணரச் செய்கிறது?//

இல்லை, பிரம்மம் மூன்று குணங்களாக மாறவில்லை...மூன்று குணங்களை உருவாக்குகிறது.

//அப்படி என்றால் அவற்றுக்கு மட்டும் அழிவு ஏன்? சக்திக்கு ஏன் அழிவு இல்லை?//

தான் உருவாக்கிய குணங்கள் முழுவதுமாக அழிந்து போகும் நிலையில் ப்ரம்மத்தின் ரூபம் தெரிகிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

//பரமாத்மாவும் அல்லாது, ஜீவாத்மாவும் அல்லாது, மும்மூர்த்திகள், மற்ற தெய்வங்கள் ஆகிய இந்த இடைப்பட்ட நிலை பற்றி பரமாச்சார்யர், ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டி அருளும் குறிப்பை யாராவது சற்றே விளக்கினால் நன்றாக இருக்கும்!//

தேடிப் பார்க்கிறேன் கே.ஆர்.எஸ்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இங்கு தெற்கில் நமக்கும் குழப்பம் இல்லை திவா சார்!
ஈஸ்வரன்=இறைவன்!
வேங்கடேஸ்வரேன் என்கிறோமே!
சத்/அசித்/ஈஸ்வரன் என்பது தானே தத்துவமும் கூட!//

ஆம்!....சந்த்ரமெளலிஸ்வரர், ஜலகண்டேஸ்வரர், சுந்தரேஸ்வரர் போன்ற பெயர்கள் கூட அப்படித்தான். :-)

"ஈஸ்வர், அல்லா தேரே நாம்" அப்படிங்கறதுல நல்லாவே க்ளியாராகுது இல்லையா?

திவாண்ணா said...

பிரம்மம் (இப்படியே எழுதுகிறேன் வசதிக்காக) ஒன்றே.
அதுவே மாய சக்தியை தோற்றுவிக்கிறது. இந்த மாயா சக்தியால் ஆவரணம் என்கிற மறைத்தலும் (அதாவது தான் பிரம்மம் என்கிறது மறையவும்) விக்ஷேப சக்தி என்கிற பல லோகங்களாகவும் இன்ன பிறவாகவும் தோன்றுகிறதும் நடக்கிறது. இது ஞான மார்க சிந்தனை. முன்னால் பரிச்சயம் இல்லாவிட்டால் குழப்பும். இல்லம் சென்று கைவல்லிய நவனீதம் என்கிற பதிவுகளை முழுமையாக பார்க்கலாம்.
--
வேறு சுலபமான பக்தி ரீதியில் பார்த்தால் பிரம்மம் > உள்ளே தான் பிரம்மம் என்று தெரிந்து கொண்டே role playing போல வெளியே வேறாக காட்டிக்கொண்டு இயங்குகிறவர்கள் அம்பாள் விஷ்ணு சிவன். இப்படி தெய்வத்தின் குரலில் படித்த நினைவு.

--
சாக்த ரீதியாக தேவி ஜீவனை விட்டாள் என்றால் பிரம்மம் ஒரு தோற்றத்தை withdraw செய்து கொண்டது என்று பொருத்தி பாருங்கள்.
--
பிரம்மமே எல்லாம் ஆகையால் பிரம்மம் வேறு மாயை வேறு என்று ஆகாது. இதை விளக்க போனால் குழப்பமே மிஞ்சும் என்பதால் விளக்கவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது ஒரு உருவகம் தானே. சாதகன் பரபிரம்மத்தை உணர்ந்தால் இதையும் உணரும் சாத்தியம் இருக்குமோ?//

எப்படி இருக்கும்? இங்கு தான் சற்றே முரண்படுகிறீர்களோ? இதற்கு முன்பு நீங்கள் சொன்னது
//மும்மூர்த்திகள் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் பரமாத்மாவை அடைய ஒரு வழி காண்பிப்பவர்கள்//

ஆக, சாதகன் பரபிரம்மத்தை உணர இவர்கள் வழி காண்பிப்பவர்கள்!
இவர்கள் காட்டிய வழியில், சாதகன் பரபிரம்மத்தை உணர்கிறான்!

அப்படி இருக்க, பரபிரம்மத்தை உணர்ந்த பின், இதை உணரும் சாத்தியம் எப்படி இருக்கும்?

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படி இருக்க, பரபிரம்மத்தை உணர்ந்த பின், இதை உணரும் சாத்தியம் எப்படி இருக்கும்?//

தவறுதான் கே.ஆர்.எஸ்.நான் சொல்ல நினைத்தது பின்வருமாறு:
" சாதகன் ப்ரம்மத்தை உணரத் தலைப்பட்டால், முதலில் இவர்களை உணர்ந்து, அதன் மூலமாக பிரம்ம ஞானம் கிடைக்குமோ?"

மெளலி (மதுரையம்பதி) said...

//சாக்த ரீதியாக தேவி ஜீவனை விட்டாள் என்றால் பிரம்மம் ஒரு தோற்றத்தை withdraw செய்து கொண்டது என்று பொருத்தி பாருங்கள்//

இதைச் சொல்லத்தான் நான் இம்புட்டு கஷ்டப்பட்டேனோ?. சரியா வரும் போல இருக்கே?..

ப்ரளயகாலத்தில் எல்லாமும் வித்ட்ரா ஆகிடுது...ஆனா சிவமும்-சக்தியும் மட்டும் மிஞ்சுது...சரிதான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேத வாசகம் பொய்யான்னு கேட்கக் கூட எனக்கு த்ராணி கிடையாது...நான் அதை கேள்வியின்றி ஏற்கிறவன். :)//

உங்களுக்கே இல்லை என்னும் போது அடியேனுக்கும் சுத்தமாக அருகதை இல்லை தான் மெளலி அண்ணா!

//ஞானம்/ஆனந்தம் எல்லாம் கடந்த நிலை பரபிரம்ம நிலை//

ஆனால் வேதங்கள்
எல்லாம் கடந்த "பிரப்பிரம்மத்துக்கு" சத்யம், ஞானம், அனந்தம் முதலான "குணங்களை" விதிக்கின்றனவே! அப்புறம் எப்படி குணங்கள் இல்லாத நிலை என்று சொல்கிறீர்கள்? சங்கரர் குணங்கள் இல்லை என்றா சொல்கிறார்? இல்லை சாக்த கருத்தா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாக்த ரீதியாக தேவி ஜீவனை விட்டாள் என்றால் பிரம்மம் ஒரு தோற்றத்தை withdraw செய்து கொண்டது என்று பொருத்தி பாருங்கள்//

withdraw is a very apt word!
dankees thiva sir!
பாருங்க ஆங்கிலம் கை கொடுக்குது தேவிக்கு!
ஐம்+க்லீம் என்பது தேவியின் அட்சரம்! ஆங்க்லீம்-ன்னு ஆங்கிலம் கைகொடுக்குது! :-)

திவாண்ணா said...

கேஆரெஸ்
பரப்பிரம்மத்தை உணர்ந்துவிட்டால் லயமாகிவிட்டால் திரும்பி வரமாட்டோம்.
ஆனால் இந்த பிறவியில் பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்ட கர்மா தீரும் வரை சரீரம் இங்கு இருக்கும்.
// அப்படி இருக்க, பரபிரம்மத்தை உணர்ந்த பின், இதை உணரும் சாத்தியம் எப்படி இருக்கும்?//
என்றால் கனவு காணும் ஒருவன் விழித்து அது கனவு என்று தெரிந்து கொண்ட பின் அப்போதும் அதை மீண்டும் உணர முடிகிறதல்லவா? அது போல். இன்னும் எளிமையாக சினிமா பார்க்கும்போது இது உண்மையில்லை என்று தெரிந்தே பார்க்கிறோம் இல்லையா அது போல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா சார்
Continuing our discussion on philosophical lines...
//பிரம்மமே எல்லாம் ஆகையால் பிரம்மம் வேறு மாயை வேறு என்று ஆகாது//

பிரம்மம் சுத்த ஞான ஸ்வரூபம்! இது வேத வாக்கியம்! ஆனால் மாயை அவித்யை! பிரம்மத்தையும் ஜீவனையும் சேரவொண்ணாமல் தடுப்பது! இரண்டும் எப்படி ஒன்றாகும்?

மாயை என்பது பிரம்மத்தைப் போல் தனியாக இருந்து இயங்குவதா?
இல்லையென்றால் பிரம்மத்தின் குணங்களில்(பரிமாணங்களில்) மாயையும் ஒன்றா?

மெளலி (மதுரையம்பதி) said...

//மாயை என்பது பிரம்மத்தைப் போல் தனியாக இருந்து இயங்குவதா?
இல்லையென்றால் பிரம்மத்தின் குணங்களில்(பரிமாணங்களில்) மாயையும் ஒன்றா?//

மாயையும் பிரம்ம குணங்களில் ஒன்றுதான் கே.ஆர்.எஸ். "பஞ்சகிருத்திய பாராயணா", அப்படின்னு அம்பாளுக்கு ஒரு நாமம் இருக்கிறது. இந்த நாமத்தை மதுரையம்பதியில் அழகிக்கு ஆயிரம் நாமங்கள் தொடரில் எழுதுகிறேன்.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//உங்களுக்கே இல்லை என்னும் போது அடியேனுக்கும் சுத்தமாக அருகதை இல்லை தான் மெளலி அண்ணா! //

அதென்ன "உங்களுக்கே"?....எனக்கு இல்லாவிடில் உங்களுக்கு இருக்ககூடாது என்பது என்ன கட்டாயம். என்னால் வேதத்தை கேள்வி கேட்க முடியாது என்பதே நான் அங்கு சொல்ல வந்தது.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் வேதங்கள்
எல்லாம் கடந்த "பிரப்பிரம்மத்துக்கு" சத்யம், ஞானம், அனந்தம் முதலான "குணங்களை" விதிக்கின்றனவே! அப்புறம் எப்படி குணங்கள் இல்லாத நிலை என்று சொல்கிறீர்கள்? சங்கரர் குணங்கள் இல்லை என்றா சொல்கிறார்? இல்லை சாக்த கருத்தா?//

சங்கரர் மட்டுமல்ல, மற்றவர்களும் ப்ரம்மத்தை அப்படித்தான் வர்ணிக்கிறார்கள். சாக்த கருத்துக்கும் அத்வைதத்துக்கும் ஏதும் பெரிய வித்யாசம் கிடையாது. :-)

திவாண்ணா said...

பிரம்மத்தின் குணங்களில் (பரிமாணங்களில்) மாயையும் ஒன்றா?
ஆமாம் கேஆர்எஸ்! அப்படித்தான்.

பிரம்மமே எல்லாம் என்றால் மாயையும் பிரம்மம் தானே என்பது பல நாட்கள் என் மனதை அரித்த கேள்விகளில் ஒன்று. சமீபத்தில்தான் தெளிவு ஏற்பட்டது.
நாம் பிரம்மம் என்பது போல மாயையும் பிரம்மம்தான். அதன் ஒரு பரிணாமம்தான்.
ஆனால் பிரம்மம் மாயை அல்ல.

மாயை அனாதியானது. ஆனாலும் அழிவு உள்ளது. மலை தோன்றிய போதிருந்தே மலைகுகையும் அதில் இருட்டும் இருந்தாலும் விளக்கு வெளிச்சம் வந்தவுடன் இருட்டு அகலுவது போல மாயை அழியும் என்று கீதாசாரியன் சொல்லி இருக்கிறானாமே! எங்கே என்று எனக்கு தெரியாது!

மாயை ஞானிகளை பொருத்த மட்டிலாவது அழியக்கூடியது. பிரம்மம் நித்தியம், அழியாதது என்பதால் மாயை பிரம்மம் இல்லை. இப்படி ஒரு வாதம்.

ஆனால் மாயை எங்கோ ஒரு இடத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு வாதம்.

so, two schools of thoughts!

ஒரு இந்திர ஜாலக்காரன் (magician) ஒர் மாயையை (illusion) தோற்றுவிக்கிறான். அப்போது அது உண்மை போலவே தோன்றுகிறது. மாயையை நீக்கிய உடன் "அட! இது வெறும் மாஜிக்!” என்று உணர்கிறோம். இந்திரஜாலக்காரனும் அந்த இல்லூஷனும் வேறு வேறு அல்ல. அவனே உண்டாக்கினான்; அவனே நீக்கிவிட்டான்.

அது போல பிரம்மம் மாயையை உருவாக்கி சில சமயம் நீக்குகிறது.

திவாண்ணா said...

ஏதோ ஒரு வழியில் பிரமத்தை புரிய வைக்க வேண்டும் என்று பிரமத்தின் குணங்களாக பலதும் சொல்லப்படுகிறது. ஆனால் அதை குணங்களை சொல்லி வரையருக்க இயலாது. இப்படி இப்படியும் இருக்கும் என்றும், இப்படி இப்படி இல்லாதது என்றும் பல சப்தங்களால் சொல்லப்படுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொதல்ல திவா சார் மற்றும் மெளலி அண்ணாவுக்கு நன்றி!
பின்னூட்டங்களில் இவ்வளவு சாரமான விடயங்களை, மிகவும் இயல்பாக விவாதிக்க முடியும் என்பதைத் தான் இந்தப் பதிவின் கலந்துரையாடல் காட்டுகிறது!
Hats Off!

ஜீவா, குமரன், திராச ஐயா, கீதாம்மா போன்றவர்கள் கலந்துக்கிட்டா இன்னும் களை கட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிரம்மமே எல்லாம் என்றால் மாயையும் பிரம்மம் தானே என்பது பல நாட்கள் என் மனதை அரித்த கேள்விகளில் ஒன்று. சமீபத்தில்தான் தெளிவு ஏற்பட்டது.
நாம் பிரம்மம் என்பது போல மாயையும் பிரம்மம்தான்//

திவா சார்/மெளலி அண்ணா
இன்னொரு கேள்வி! :-)
(சாரி...அடியேன் உங்களை விட்டா வேறு யாரைக் கேட்கப் போகிறேன்!)

பிரளய காலத்தில் அனைத்தும் அழிந்து சிவ-சக்தி என்னும் பிரம்மத்துள் ஒடுங்கும் என்று சொன்னீர்கள்!

அப்போது...
1. ஜீவாத்மாக்கள் அனைத்தும் தத்தம் கர்மாக்களை தீர்த்துக் கொண்டு விடுவார்களா? அதற்கு அப்புறம் தான் இந்த மகாப் பிரளயமா?

2. ஒடுங்கிய பிரளய நிலையில் அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவோடு கலந்து விடும்! அப்படி என்றால் ஜீவாத்மா-பரமாத்மா, இவை இரண்டுக்கும் தடையாய் இருந்த மாயையின் நிலை என்ன? எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவோடு கலந்த பின் மாயை எங்கு இருக்கும்? எப்படி இருக்கும்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாயையும் பிரம்ம குணங்களில் ஒன்றுதான் கே.ஆர்.எஸ்//

ஆகா...
பிரம்மம் நிர்க்குணம் என்று தானே முதலில் சொன்னீர்கள்!
இப்போது பிரம்மத்துக்கு குணம் இருப்பதாகச் சொல்கிறீர்களே!

பிரம்மம், மாயை இவை இரண்டும் தனித்தனி நிலைகள் என்று சொன்னால் அத்வைதம் போய் அது துவைதமாகி விடும்!
ஆனால் மாயை என்பது தனியான இரண்டாம் நிலை அல்ல! அதுவும் பிரம்மத்தின் குணங்களில் ஒன்று என்று சொன்னால், அப்போதும் அத்வைதக் கருத்து அடிபடுகிறதே!

நிர்விசேஷம் சின் மாத்திரம் பிரம்ம என்பதல்லவா அத்வைதம்!

மெளலி (மதுரையம்பதி) said...

//மொதல்ல திவா சார் மற்றும் மெளலி அண்ணாவுக்கு நன்றி!
பின்னூட்டங்களில் இவ்வளவு சாரமான விடயங்களை, மிகவும் இயல்பாக விவாதிக்க முடியும் என்பதைத் தான் இந்தப் பதிவின் கலந்துரையாடல் காட்டுகிறது! Hats Off!//

ஆமாம், செளந்தர்ய லஹரி ஆரம்பிச்ச நேரத்தில் நானும் நினைத்ததுண்டு...ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இங்கு சத்சங்கம் நடக்கிறது...இதில் எனக்கும் பரம திருப்தி...கே.ஆர்.எஸின் கேள்விகள் எனக்கும் பல புரிதல்களை தந்தது என்றால் மிகையில்லை.


//ஜீவா, குமரன், திராச ஐயா, கீதாம்மா போன்றவர்கள் கலந்துக்கிட்டா இன்னும் களை கட்டும்!//

ஆம்!, குமரனின் கீதை நாலட்ஜ், ஜீவாவின் கருத்தாழம் மிக்க பின்னூட்டங்கள் மற்றும் பெரியவர்கள் திராச, கீதாம்மாவின் பகிர்தல் இன்னும் நமது புரிதலை கண்டிப்பாக அதிகமாக்கும்....

மெளலி (மதுரையம்பதி) said...

//திவா சார்/மெளலி அண்ணா
இன்னொரு கேள்வி! :-)
(சாரி...அடியேன் உங்களை விட்டா வேறு யாரைக் கேட்கப் போகிறேன்!)//

முன்னமே சொன்னது தான் கே.ஆர்.எஸ்...உங்கள் கேள்விகளால் நானும் பயன் பெறுகிறேன்....ந

நாம் விவாதிக்கும் பொருள் குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து விளக்குவது போல்தான் என்றாலும், நமது கர்ம-வினை சரியாக இருக்குமானால் முழு யானையையும் சேர்த்து உருவகப்படுத்தி புரிந்து கொள்ள இறைவன் கண்டிப்பாக உதவுவான்.

//பிரளய காலத்தில் அனைத்தும் அழிந்து சிவ-சக்தி என்னும் பிரம்மத்துள் ஒடுங்கும் என்று சொன்னீர்கள்!

அப்போது...
1. ஜீவாத்மாக்கள் அனைத்தும் தத்தம் கர்மாக்களை தீர்த்துக் கொண்டு விடுவார்களா? அதற்கு அப்புறம் தான் இந்த மகாப் பிரளயமா?//

ஆம், அப்படிங்கறதுதான் எனது புரிதல்...எல்லாம் முடியும் அந்த பிரளய நேரம் கம்ளிட் நியுட்ரல் ஸ்டேட். ஜீவாத்மாக்களும் பரபிரம்மத்தில் ஒடுங்கிவிடுகிறது...இன்னும் சொல்லப் போனால் ஜீவாத்மாக்கள் மஹாபிரளயம் வரைகூட காத்திருக்க வேண்டாம்...எந்த ஒரு ஜீவனின் கர்மா நல்லபடியிர்ருப்பின், அந்த ஜீவாத்மா ப்ரளயத்திற்கு முன்பே பரமாத்மாவுடன் இணைந்துவிடும் என்றே தெரிகிறது..


//2. ஒடுங்கிய பிரளய நிலையில் அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவோடு கலந்து விடும்! அப்படி என்றால் ஜீவாத்மா-பரமாத்மா, இவை இரண்டுக்கும் தடையாய் இருந்த மாயையின் நிலை என்ன? எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவோடு கலந்த பின் மாயை எங்கு இருக்கும்? எப்படி இருக்கும்?//

மாயை என்பதும் ஜீவாத்மா போல் பிரம்மத்திலிருந்து பிரிந்ததுதானே, அதுவும் பரபிரம்மத்தில் ஒடுங்கிவிடும் என்பது எனது புரிதல்..

திவாண்ணா சரிதானே?

திவாண்ணா said...

ப்ரலயம் 4 வகை.
1. நித்திய பிரலயம்:
நாம் தூங்கும் போது தினசரி ஏற்படுவது. ஆழ் துயிலில் எல்லாம் ஒடுங்கி விடுகிறது.
2.நைமித்திக பிரலயம்: பிரம்மாவின் நாள் முடிந்து அவர் தூங்கப்போகும்போது ஏற்படுவது. பூ புவ சுவர் லோகங்கள் பிரலய அக்னியில் அழியும். சீவன்களின் சூக்ஷ்ம சரீரங்கள் அடுத்த படைப்புக்காக காத்து இருக்கும்.
3. மஹா பிரலயம்:
பிரம்மாவின் வாழ்நாள் - அவருடைய 100 வருஷங்கள்- முடியும்போது ஏற்படும்.
ஈரேழு 14 லோகங்களும் அழியும். எல்லா சீவர்களின் காரண சரீரங்களும் ஈசனுடன் ஒடுங்கும். (காரண சரீரம்= அடுத்த பிறப்பு ஏற்பட காரணமாக உள்ள சரீரம். இதுவே சூக்ஷ்ம சரீரத்தை இழுத்துப்போய் அடுத்த பிறவியை உண்டாக்கும். இதுவே ஆணவம் கன்மம் மாயை எனப்படுவது.)
அடுத்த பிரம்மா வந்து மீண்டும் படைத்தலை ஆரம்பிப்பார்.
பிரலயத்தில் ஜீவன்கள் இரண்டற கலப்பதில்லை. அவற்றின் காரண சரீரங்கள் தனித்தனியாகவே இருந்து மீண்டும் பிறப்படையும்.

அதாவது கர்மாக்கள் தீரா. அவையே பிறப்புக்கு காரணம்.
அதனால் மாயையும் இருக்கவே இருக்கும்.

பிரம்ம லோகத்தில் தவம் செய்யும் பிரம்ம ஞானிகள் மட்டுமே திரும்பி வாரார். அவர்கள் 4 வது பிரலயத்தை அடைவார்கள்.

4. மோக்ஷம்: ஜீவன் என்கிற அடையாளத்தையே முழுக்க இழந்து பிரம்மத்துடன் கலப்பது.

ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் தத்தம் கர்மாக்களை தீர்த்துக்கொள்ள மாட்டார்கள். பிரலயத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அப்படி தீர்க்கும் சிலர் முதல் மூன்று பிரலயத்துக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்.

திவாண்ணா said...

சொல்லபோனால் நல்ல கர்மா கூட பந்தம்தான். சுவர்கத்துக்கு போய் அனுபவித்து மீண்டும் இங்கே வர வேண்டும். கர்மா கணக்கு 0 வந்தால்தான் மோக்ஷம். கர்மாவே ஒட்டாத நிலையே வேண்டும்.

Geetha Sambasivam said...

//லிங்க ரூபம் என்பது சிவ-சக்தி ஐக்கிய ரூபம்...ஆக அது சதாசிவன் என்பர்//

சதாசிவன் பற்றிப் படிச்சது வேறே மாதிரியா இருந்தது??? மறுபடியும் தேடிப் பார்த்துப் படிச்சுட்டு வரேன்.!!!!!

Geetha Sambasivam said...

//சுவர்கத்துக்கு போய் அனுபவித்து மீண்டும் இங்கே வர வேண்டும்.//

சுவர்கத்துக்குப் போறதைப் பற்றிய முத்கலரின் கருத்து நினைவுக்கு வருது!!!!!

திவாண்ணா said...

//சுவர்கத்துக்குப் போறதைப் பற்றிய முத்கலரின் கருத்து நினைவுக்கு வருது!!!!!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சொல்ல வேன்டியதுதானே?
யாரான என்னன்னு கேக்கணுமா?
:P

ambi said...

//சொல்ல வேன்டியதுதானே?
யாரான என்னன்னு கேக்கணுமா?
//

சபாஷ், இத தான் நான் எதிர்பார்த்தேன். :))

அவங்களுக்கு அந்த கதை தெரியுமாம். :p

geethasmbsvm6 said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சொல்ல வேன்டியதுதானே?
யாரான என்னன்னு கேக்கணுமா?
:P//

Brutus??????????????

geethasmbsvm6 said...

//சபாஷ், இத தான் நான் எதிர்பார்த்தேன். :))

அவங்களுக்கு அந்த கதை தெரியுமாம். :p//

@ambi, just wait!!!!!!!

geethasmbsvm6 said...

ada, athu sariya ezutharathukulee publish ayiduche?

ambi, irunga, time varumpothu kavanikkiren! grrrrrrrrrrrrr

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா சார், மெளலி அண்ணா
கேள்விகள் என்னும் வேள்விகள் இன்னும் உள்ளனவே! :-)

(அம்பி, பயந்து போய், மத்வாச்சாரியாரை இங்கிட்டு அனுப்பச் சொல்லி இருக்கான்! :-)

இப்போ கீதாம்மாவும் ஜாயின் சேஸ்துன்னானு! ஆனா ஆப்-ரெஃபரென்ஸ் கொடுத்துட்டு ஆப்படிக்க ஆரம்பிச்சிடறாங்க!

குருவே கீசா!
அம்பி ஒரு அப்பாவிக் குழந்தை! அவன் ரேஞ்சுக்கு நீங்களும் எறங்கலாமா?

நீங்க மாதா மகீ!
ஒழுங்கா வெளக்கம் கொடுங்க!
அம்பி கூட தும்பி பிடிக்கறது எல்லாம் அப்பறம் வச்சிக்கலாம்! :-))

வீ வான்ட் வெளக்கம்ஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அத்வைதம் போய் அது துவைதமாகி விடும்!//

திவா சார்/மெளலி அண்ணா
இதுக்கு நீங்க இன்னும் விளக்கம் தரலையே!

பிரம்மம், மாயை இவை இரண்டும் தனித்தனி நிலைகள் அல்ல! = இப்படிச் சொன்னா அத்வைதம் தான்!

ஆனாக் கூடவே மாயை பிரம்மத்தின் குணம் என்றும் சொல்கிறீர்களே!
அப்போ அத்வைதம் போய் த்வைதம் ஆகி விடுகிறதே!

நிர்க்குணம், குணமே இல்லை,
நிர்விசேஷம் சின் மாத்திரம் பிரம்ம என்பதல்லவா அத்வைத வாசகம்?
நீங்கள் சொல்வது அத்வைத வாசகத்துக்கு எதிராக உள்ளதே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா சார் சொன்ன நால் வகைப் பிரளயங்கள், அதன் விளக்கங்கள் அருமை!
வாழ்க நீ எம்மான்!

//அப்படி தீர்க்கும் சிலர் முதல் மூன்று பிரலயத்துக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்//

போச்சு
இது விசிஷ்டாத்வைதம் ஆயிருச்சி!

மெளலி அண்ணா அத்வைதமா ஆரம்பிச்சி, அது விவாதத்தில் துவைதமாகி, இப்போ விசிஷ்டாத்வைதம் வரை வந்து நிக்குது!

அடியேன் ராமானுஜ தாசன்! :-))

அச்சோ நான் சொல்லலை!
கமல் சொல்றது, தசாவதாரத்துல!
ஹா ஹா ஹா
:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யோவ் மெளலி அண்ணா

அடுத்த லஹரி பதிவு எங்கே? 27 & 28??
இந்த விவாதம் தனி! பதிவு தனி!
இது பாட்டுக்குன்னு இது! அது பாட்டுக்குன்னு அது!

ஒழுங்காப் பதிவு போடாம எப்படி என்ன வேலை உமக்கு?

ஒழுங்கா உங்க "நித்யப் பிரளயம்" முடிஞ்சாப் பிறகு அடுத்த பதிவு போடுங்க! இல்லாட்டி பிரளயம் பண்ணிருவேன்! ஜொள்ளிட்டேன்! ஆமா! :-)))

திவாண்ணா said...

/ ஏதோ ஒரு வழியில் பிரமத்தை புரிய வைக்க வேண்டும் என்று பிரமத்தின் குணங்களாக பலதும் சொல்லப்படுகிறது. ஆனால் அதை குணங்களை சொல்லி வரையருக்க இயலாது. இப்படி இப்படியும் இருக்கும் என்றும், இப்படி இப்படி இல்லாதது என்றும் பல சப்தங்களால் சொல்லப்படுகிறது.//
ippati munnaaleeyee solliteenee!

like a mirror image maya comes from brahman.
when there is maya there is dwaitha.
no doubts about it.

திவாண்ணா said...

//போச்சு, இது விசிஷ்டாத்வைதம் ஆயிருச்சி!//

அதெப்படி?
விளக்கவும்!

திவாண்ணா said...

அத்வைதத்தில் பிரமத்தை தவிர வேறு எதுவுமே எப்போதுமே இல்லை.
பிரம்மத்தின் ஒரு பகுதி (25%? பாதோஸ்ய விஸ்வா பூதானி..) மாயை சம்பந்தப்பட்டு இந்த உலகங்களாயும் ஜீவர்களாயும் தன்னை நினைக்கிறது. மாயை நீங்கியதும் தான் பிரம்மம் என்று தெரிந்து போய் விடுகிறது - இப்படி சொல்வது கூட தவறுதான். இயல்பு நிலையை அடைகிறது.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு தலை சிறந்த நாடக நடிகன் தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் அப்படியே ஒன்றி போய் அதுவாகவே ஆகிவிடுகிறான். நாடகம் முடிந்ததும் தான் யார் என்பது நினைவுக்கு வந்து விடுகிறது. ஆனால் வேடம் போட்டபோது பாத்திரத்தையேதான் தானாக நினைக்கிறன்.வேடம் போடு முன்னும், போட்டபோதும், முடிந்தபோதும் அவன் மட்டுமேதான் இருக்கிறன். வேறு ஒருவர் இல்லை. அது போல எப்போதும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது.

Geetha Sambasivam said...

//இப்போ கீதாம்மாவும் ஜாயின் சேஸ்துன்னானு! ஆனா ஆப்-ரெஃபரென்ஸ் கொடுத்துட்டு ஆப்படிக்க ஆரம்பிச்சிடறாங்க! //

இங்கே வந்து பாருங்க, அமர்க்களத்தை! ஒரு புத்தகம் எடுக்க முடியலை, கணினியை இடம் மாத்தினதிலே அது வேறே கோவிச்சுக்கிட்டது. உள்ள பதிவே எழுத முடியலை, ஆனால் இன்னிக்கு இந்த சுவர்க்கம் பத்தின வேளுக்குடியோட விளக்கம் பொதிகையிலே சூப்பர், கீதை 9-ம் அத்தியாயம், 20-ம் சுலோகம்??? ஆமாம்னு நினைக்கிறேன். பிரளயங்கள் பத்தியும் அவர் ஒரு மாசம் முன்னாலேயே இன்னும் அதிகமா (:P) விளக்கினார். 8-வது அத்தியாயத்திலேனு நினைக்கிறேன். இப்போதைக்கு ஜூட் விட்டுட்டு அப்புறமா சூடு பிடிச்சால் வரேன்!

Geetha Sambasivam said...

//போச்சு
இது விசிஷ்டாத்வைதம் ஆயிருச்சி!//

KRS, don't take it literally!!!! :))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//போச்சு, இது விசிஷ்டாத்வைதம் ஆயிருச்சி!//

அதெப்படி?
விளக்கவும்!///

திவா சார்
நீங்க குறிப்பிட்டது -//இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்//

அதாச்சும் "வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே" என்னும் திருவாய்மொழி! :-)

அதாச்சும் முதல் மூன்று பிரலயத்துக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. மாயை அகலும் வரை காத்து இருக்க வேண்டியதில்லை! இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்! மாயை என்ற ஒன்றே இல்லை!
இது விசிஷ்டாத்வைதம் அல்லவா? அதைத் தான் சொன்னேன்!

//like a mirror image maya comes from brahman.
when there is maya there is dwaitha.
no doubts about it//

ஆக, அத்வைதத்தில், த்வைதம் ஒளிந்துள்ளது என்று சொல்கிறீர்கள்? :-)

உங்கள் கூற்றுப்படி
த்வைதம் கூட இல்லை! த்ரைதம்!
பிரம்மம்!
ஜீவன்!
மாயை!

மாயையும் பிரம்மம் தான் என்று சொல்லிச் சமாளிக்கக் கூடாது!
அப்படீன்னா ஜீவனும் பிரம்மம் தானே!
அப்படிப் பார்த்தா த்வைதம் என்பதே கிடையாதே!

ஆனால் ஜீவன் தனியாக இருப்பதால் த்வைதம் ஆகிறது! மாயை தனியாக இருப்பதால் த்ரைதம் ஆகிடுமோ?

கன்னா பின்னாவென்று கேள்வி கேட்கிறேனோ? உண்மையான ஐயங்களைத் தான் பெரியோர் முன் வைத்தேன்! தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேடம் போடு முன்னும், போட்டபோதும், முடிந்தபோதும் அவன் மட்டுமேதான் இருக்கிறன். வேறு ஒருவர் இல்லை. அது போல எப்போதும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது//

அருமை!

ஆனால் ஒரே ஒரு இடறல்!
தான் உண்மையில் அந்தக் கதாபாத்திரம் இல்லை என்று அவனுக்கே தெரியும்!

இது தெரிந்தே தான் நாடகத்தில் நடிக்கிறான்! ஆக தெரிந்தே தான் நாமும் மாயையில் (நாடகத்தில்) வீழ்கிறோமா? மீண்டும் மீண்டும் வீழ்கிறோமா?

நாடகத்தின் நடு நடுவே கூட அவன் யார் என்று அவனுக்குத் தெரியும்! யாரையும் கத்தியால் குத்தி விட மாட்டான்! நாடகம் என்று உணர்ந்தே நடிப்பான்!
ஆனால் மாயை என்று நாம் உணர்ந்தே தான் கர்மாக்களைச் செய்கிறோமா என்ன? மாயையில் இருக்கும் போது நாம் உணர்வதில்லையே!

இங்கு தான் மாயை/மாயாவாதம் அடியேனுக்குப் பிடிபடவில்லை!
மாயை என்ற ஒன்றே இல்லை, அனைத்தும் உண்மை தான் என்று விசிஷ்டாத்வைதம் இதனை வேறு மாதிரி எளிதாக விளக்கி விடுகிறது!

மற்றபடி உங்கள் அக்கறையான விளக்கங்கள் எல்லாம் அடியேனுக்குச் சிறு சிறு ஒளிக்கீற்றுகள்!
புரியாதனவும் புரிய வைக்க, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே அல்லவா!
"மயர்வற மதி நலம்" அருளினன் யவனவன், துயரறு சுடரடி தொழுதெழன் மனனே!

உங்களிடம் நேரடியாகவும் இது பற்றிப் பேச ஆசை! :-)
அருமையான சிந்தனைக் களம் அமைத்துக் கொடுத்த திவா சார், மற்றும் மெளலி அண்ணா....
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

திவாண்ணா said...

/வேடம் போடு முன்னும், போட்டபோதும், முடிந்தபோதும் அவன் மட்டுமேதான் இருக்கிறன். வேறு ஒருவர் இல்லை. அது போல எப்போதும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது//

அருமை!

ஆனால் ஒரே ஒரு இடறல்!
தான் உண்மையில் அந்தக் கதாபாத்திரம் இல்லை என்று அவனுக்கே தெரியும்!//

நான் சொல்ல வந்தது அதுவல்ல. சில சமயங்களில் சில உயர்ந்த கலைஞர்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார்களே, அதை தான் சொன்னேன். நாடகத்தின் இடையிலோ அல்லது நாடகம் முடிந்தபின்னோ அவர் "தான் யார்" என்ற சுய நினைவுக்கு வருவார். இங்கேயும் அப்படித்தானே? கால அளவுதான் வேறு.

// இது தெரிந்தே தான் நாடகத்தில் நடிக்கிறான்! ஆக தெரிந்தே தான் நாமும் மாயையில் (நாடகத்தில்) வீழ்கிறோமா? மீண்டும் மீண்டும் வீழ்கிறோமா? //

"நாம்" எங்கே வீழ்கிறோம்? பிரம்மம் தெரிந்தேதான் தன்னை வேறொன்றாக வேடமிட்டு விளையாடுகிறது! ஆமாம் மீண்டும் மீண்டும்தான்.

// நாடகத்தின் நடு நடுவே கூட அவன் யார் என்று அவனுக்குத் தெரியும்! யாரையும் கத்தியால் குத்தி விட மாட்டான்! நாடகம் என்று உணர்ந்தே நடிப்பான்!
ஆனால் மாயை என்று நாம் உணர்ந்தே தான் கர்மாக்களைச் செய்கிறோமா என்ன? மாயையில் இருக்கும் போது நாம் உணர்வதில்லையே!//

உண்மைதான். உணர்ந்தால் அது மாயை இல்லையே?! பிரம்மம் தன்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லாதபோது கர்மா ஏது? தன்னை உணர்ந்தவனுக்கு கர்மா ஏதும் தேவையில்லை. அப்படி செய்தாலும் அது அவனை பாதிக்காது.

// இங்கு தான் மாயை/மாயாவாதம் அடியேனுக்குப் பிடிபடவில்லை!
மாயை என்ற ஒன்றே இல்லை, அனைத்தும் உண்மை தான் என்று விசிஷ்டாத்வைதம் இதனை வேறு மாதிரி எளிதாக விளக்கி விடுகிறது! //

புரிதலில் இவை வேறு வேறு நிலைகள்! அவரவர் பார்வை .....

// மற்றபடி உங்கள் அக்கறையான விளக்கங்கள் ...
உங்களிடம் நேரடியாகவும் இது பற்றிப் பேச ஆசை! :-)//

ஆஹா! மீண்டும் பாரதம் வரும்போது நேரம் ஒதுக்கிக்கொண்டு வாருங்கள். :-))
அதுதானே கஷ்டம்? புரிகிறது!

திவாண்ணா said...

//திவா சார்
நீங்க குறிப்பிட்டது -//இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்//

அதாச்சும் "வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே" என்னும் திருவாய்மொழி! :-)

அதாச்சும் முதல் மூன்று பிரலயத்துக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. மாயை அகலும் வரை காத்து இருக்க வேண்டியதில்லை! இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்! மாயை என்ற ஒன்றே இல்லை!
இது விசிஷ்டாத்வைதம் அல்லவா? அதைத் தான் சொன்னேன்!//



நான் குறிப்பிட்டது சிலர் இங்கேயே இப்போதே மோக்ஷம் அடைவார்கள் என்பது வரை பொறுத்த வரை மாயை அகன்றுவிடும். அதாவது இன்னொரு கோணத்தில் பார்த்தால் பிரமத்தின் ஒரு துணுக்கு தன் மாயயை நீக்கிக்கொள்ளும். மற்ற துணுக்குகள் அப்படியே இருக்கும்.

//like a mirror image maya comes from brahman.
when there is maya there is dwaitha.
no doubts about it//

ஆக, அத்வைதத்தில், த்வைதம் ஒளிந்துள்ளது என்று சொல்கிறீர்கள்? :-)//

ம்ம்ம்ம்ம்...த்வைதத்தில் அத்வைதம் மறைந்துவிட்டது! இப்படியும் பார்க்கலாம். பார்வை எப்படியோ அப்படி.

// உங்கள் கூற்றுப்படி
த்வைதம் கூட இல்லை! த்ரைதம்!
பிரம்மம்!
ஜீவன்!
மாயை!

மாயையும் பிரம்மம் தான் என்று சொல்லிச் சமாளிக்கக் கூடாது!
அப்படீன்னா ஜீவனும் பிரம்மம் தானே!
அப்படிப் பார்த்தா த்வைதம் என்பதே கிடையாதே!

ஆனால் ஜீவன் தனியாக இருப்பதால் த்வைதம் ஆகிறது! மாயை தனியாக இருப்பதால் த்ரைதம் ஆகிடுமோ?//

அத்வைதம் /த்வைதம்/ விஷிஷ்டாத்வைதம் இவற்றில் கேள்வியே இறை/ ஜீவர்கள் வேறு வேறா (செபரேட் என்டிடி) அல்லது ஒன்றா என்பதே.
அத்வைதம் ஒன்றே என்கிறது.
த்வைதம் வேறு வேறு என்கிறது.
விசிஷ்டாத்வைதம் வேறு வேறுதான் ஆனால் ஜீவன் இறை ஆகிவிட முடியும் என்கிறது.

அதனால் மாயையப்பத்திய பேச்சே இங்கு இல்லை. த்ரைதமும் இல்லை.

// கன்னா பின்னாவென்று கேள்வி கேட்கிறேனோ? உண்மையான ஐயங்களைத் தான் பெரியோர் முன் வைத்தேன்! தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!//

ஒரு தவறும் இல்லையே? கேள்வி கேட்டால்தானே தெளிவு வரும்? அப்போதுதான் நானும் அதைப்பத்தி யோசிப்பேன். எல்லாருக்கும் லாபம்தான்!

ஆனால் ஒரே ஒரு விஷயம். இந்த பதிவு மௌலியுடையது. அவர் எழுதுவதோ த்வைதம். நம் வாதங்கள் இங்கே தொடருவது சரியா? வேறு இடத்துக்கு போகலாமா? பின்னூட்டங்கள் பதிவுகளின் கருத்தை விட்டு திசை திரும்பிவிடக்கூடாது இல்லையா?

திவாண்ணா said...

// திவா சார்
நீங்க குறிப்பிட்டது -//இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்//

அதாச்சும் "வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே" என்னும் திருவாய்மொழி! :-)

அதாச்சும் முதல் மூன்று பிரலயத்துக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. மாயை அகலும் வரை காத்து இருக்க வேண்டியதில்லை! இப்போதே இங்கேயே மோக்ஷமடைவார்கள்! மாயை என்ற ஒன்றே இல்லை!
இது விசிஷ்டாத்வைதம் அல்லவா? அதைத் தான் சொன்னேன்!//

அதாவது அந்த ஜீவனை பொருத்தவரை மாயை விலகுகிறது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் பிரமத்தின் ஒரு துணுக்கு தன் மாயையை விலக்கிக்கொள்கிறது. மற்ற துணுக்குகள் அப்படியே இருக்கின்றன.

//ஆக, அத்வைதத்தில், த்வைதம் ஒளிந்துள்ளது என்று சொல்கிறீர்கள்? :-) //
ம்ம்ம்ம்ம், த்வைதத்தில் அத்வைதம் மறைந்துவிட்டது. இப்படியும் சொல்லலாம். பார்வையில்தான் இருக்கிறது.

// உங்கள் கூற்றுப்படி
த்வைதம் கூட இல்லை! த்ரைதம்!
பிரம்மம்!
ஜீவன்!
மாயை!

மாயையும் பிரம்மம் தான் என்று சொல்லிச் சமாளிக்கக் கூடாது!
அப்படீன்னா ஜீவனும் பிரம்மம் தானே!
அப்படிப் பார்த்தா த்வைதம் என்பதே கிடையாதே!

ஆனால் ஜீவன் தனியாக இருப்பதால் த்வைதம் ஆகிறது! மாயை தனியாக இருப்பதால் த்ரைதம் ஆகிடுமோ?//

அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றில் கேள்வியே இறை/ ஜீவன் வேறு வேறா ஒன்றா என்பதே.
அத்வைதம் ஒன்றே என்கிறது.
த்வைதம் இல்லை, வேறு வேறு என்கிறது.
விசிஷ்டாத்வைதம் வேறு வேறுதான், ஆனாலும் ஜீவன் இறையாக ஆகிவிடலாம் என்கிறது.

ஆக மாயையைப்பத்தி பேச்சே இல்லை. த்ரைதமும் இல்லை.

// கன்னா பின்னாவென்று கேள்வி கேட்கிறேனோ? //

கேள்வி கேட்டால்தானே தெளிவு கிடைக்கும்?
நீங்க கேட்டாதானே நானும் யோசிப்பேன்?
எல்லாருக்கும் லாபம்தான்.

ஆனால் ஒன்று.
வேறு களத்துக்கு போய் விடலாமோ? இந்த பதிவு மௌலியுடையது. அவர் எழுதுவது த்வைதம். பின்னூட்டங்கள் பதிவின் கருத்திலிருந்து திசை திரும்பக்கூடாது இல்லையா?

மெளலி (மதுரையம்பதி) said...

//வேறு களத்துக்கு போய் விடலாமோ? இந்த பதிவு மௌலியுடையது. அவர் எழுதுவது த்வைதம். பின்னூட்டங்கள் பதிவின் கருத்திலிருந்து திசை திரும்பக்கூடாது இல்லையா?//

அடடா!! அப்படியெல்லாம் ஒன்றும் விசனம் வேண்டாம் திவாண்ணா. எனக்கு கொஞ்சம் வேலைப் பளூ அதிகம், அதனால்தான் நான் இந்த கலந்துரையாடலில் பங்கு பெற முடியல்ல. ஆனாலும், எல்லாவற்றையும் படித்து, பப்ளிஷ் பண்ணறதுடன் நிருத்திக்கறேன்.

இந்த கலந்துரையாடலுக்குத் தானே நானும் காத்திருக்கிறேன். தயவு செய்து இங்கேயே நடத்துங்கள். :-))

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...

//மாயையும் பிரம்மம் தான் என்று சொல்லிச் சமாளிக்கக் கூடாது!
அப்படீன்னா ஜீவனும் பிரம்மம் தானே!
அப்படிப் பார்த்தா த்வைதம் என்பதே கிடையாதே!//

கே.ஆர்.எஸ், மாயையும் பிரம்மம் என்பது எப்படிச் சமாளிப்பு என்று புரியல்ல...அத்வைதம்தான் எல்லாம் பிரம்மம் என்று கூறுகிறதே?...த்வைதம்-வசிஷ்டாத்வைதம் என்பதே எல்லாவற்றையும் பிரம்மம் இல்லை என்பதில் தானே ஆரம்பம். நீங்க சொல்றது புரியல்ல.தசெவி. :))