த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்
அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம். பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம். ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார். இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஏதத் - என்னுடைய; த்வத் ரூபம் - உன் ரூபம்; ஸகலம் அருணபம் - முழுவதும் சிவப்பான நிறத்துடன்; த்ரிநயனம் - முக்கண்களுடன்; குசாப்யாம்- ஸ்தனங்கள்; அநம்ரம் - வளைந்த; குடில-சசி-சூடால மகுடம் - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்; வாமம் வபு: சரீரத்தின் இடது பகுதி; அபரி த்ருப்தேன - முழுமையான த்ருப்தியில்லாத; அபரம் சரீரார்த்தம் அபி - சரீரத்தின் இன்னொரு பாதியும்; ஹ்ருதம் அபூத் - கவர்ந்து கொள்ளப்பட்டது; சங்கே - சந்தேகம்
ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ
இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள் அம்பாள். இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார். ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.
தா(4)தா - ப்ரம்மா; ஜகத்-ஸுதே - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்; க்ஷபயதே - அழிக்கும்; திரஸ்குர்வன் ஏதத் - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்); ஸதா பூர்வ: சர்வம் - ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்; க்ஷண-சலிதயோ: - நொடி நேர அசைவினால்; ப்ரூலதிகயோ - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்); லதை-லத்திகா அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்); ஆஜ்ஞாம் - ஆணை; ஆலம்ப்ய - அனுசரித்து; அனுக்ருஹ்ணாதி - அனுக்கிரஹம்
7 comments:
//ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து //
இன்னும் சொல்லி இருக்கிறாரே ஆசாரியர்? ஆண் கட்டுவது வெண்மை நிறமுள்ள வேஷ்டி, பெண்ணுக்கு அரக்குப் புடவை, நெற்றியில் அணிவது விபூதி, பெண் அணிவது குங்குமம், நாமத்தின் ஓரங்களில் வெண்மை, நடுவே அம்பாள் ஸ்வரூபமான ஸ்ரீசூர்ணம், கோலத்தை அரிசிமாவால் வெண்மையாகப் போட்டுவிட்டுப் பின்னர் சுற்றிலும் இடும் செம்மண் பட்டை, அல்லது காவிப்பட்டை, ரத்தத்திலே கூட வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், இதற்கு நேர்மாறான, நீல விஷ்ணு, அல்லது கறுப்புக்காளி, அதையும் சொல்லி இருக்கலாமே?
வாங்க கீதாம்மா!
//இன்னும் சொல்லி இருக்கிறாரே ஆசாரியர்?//
அப்படியா?, எங்க? எதற்கு சொன்னார்?, எப்போது சொன்னார்?...தனி போஸ்ட் ப்ளிஸ்.. :-)
நான் பதிவில் சொல்லியிருப்பது அந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் சொல்லியிருப்பதை மட்டுமே!!!
பார்க்க, "தெய்வத்தின் குரல்" ஆறாம் பகுதி, அத்தியாயம் "கண்ட ரேகையில் கண்ட மும்மை, ஆணின் வெண்மை, பெண்ணின் செம்மை"
//பார்க்க, "தெய்வத்தின் குரல்" ஆறாம் பகுதி, அத்தியாயம் "கண்ட ரேகையில் கண்ட மும்மை, ஆணின் வெண்மை, பெண்ணின் செம்மை"//
கீதாம்மா, இந்த 2 ஸ்லோகங்களுக்கா பரமாச்சார்யார் அப்படி வியாக்யானம் கொடுதிருக்கார்?, அப்படியே கொடுத்திருந்தாலும், இந்த ஸ்லோகங்களில் ஆரம்பித்து, ஜெனரலாக மற்ற எல்லா ஓப்புமைகளையும் சொல்லியிருக்கலாம்.
ஆனால் இந்த இரண்டு ஸ்லோகங்களில் சங்கர பகவத்பாதர் நீங்க சொன்னதை எல்லாம் சொல்லவில்லை. பாடல் எளிமையானது தான் மீண்டும் ஒரு முறை படிங்க, உங்களுக்கே தெரியும்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் சொன்னது, இந்த இரண்டு ஸ்லோகங்களுக்கான பொதுவான அர்த்தம் மட்டும் இல்லை, பொதுவாக இதை இன்னும் விபரமாய் எழுதலாமே என்றுதான் சொன்னேன். புரிஞ்சுக்கத் தெரியலை! இதுக்கு ஒரு மெயிலா? நற நறநறநற நற
ருண விமோசனத்திற்கு என்று சொல்லாமல் 'கடனிலிருந்து விடுதலை' என்று சொல்லியிருக்கலாமே மௌலி. இன்னும் நன்றாகப் புரியுமே. :-)
மாதொருபாகனைப் பார்க்கத் தொடங்கி மாதை மட்டும் கண்டேன். ஐந்தொழிலவனைக் காணத் தொடங்கி ஐந்தொழிலையும் நடத்துபவளைக் கண்டேன். நன்றி.
//ருண விமோசனத்திற்கு என்று சொல்லாமல் 'கடனிலிருந்து விடுதலை' என்று சொல்லியிருக்கலாமே மௌலி. இன்னும் நன்றாகப் புரியுமே//
இன்னுமே சொல்லிடறேன் குமரன். நரசிம்ம ஜெயந்திக்கு மதுரையம்பதியில் சிறப்பு பதிவே ருண விமோசன ஸ்லோகம் தான். :)
Post a Comment