ஆனந்த லஹரி - 27 & 28




ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்.


அம்பிகைக்கு "தசமுத்ரா சமாராத்யா" அப்படின்னு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இருக்கு. அதாவது, ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா என்னும் பத்து முத்ரைகளால் வணங்கப்படுபவள் அப்படின்னு அர்த்தம். ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை. அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்.
ஆச்சார்யார் இதை சிவமானச பூஜா ஸ்தோத்திரத்திலும் (5ஆம் ஸ்லோகமாக) இங்கே சொல்லியிருக்கார்.


ஜல்ப: - பேச்சு; ஸில்பம் ஸ்கலமபி - கைத்தொழில் அனைத்தும்; முத்ரா விரசனா - முத்ரைகளின் விளக்கமாக; ப்ராதக்ஷிண்ய-க்ரமணம் - பிரதக்ஷணமாகவும்; அசனாதி- உணவு வகைகள்; ஆஹுதிவிதி - ஹோமமாக; ஸம்வேஸ - படுத்துக் கொள்ளுதல்; ப்ரணாம: - நமஸ்காரம்; யத் விலஸிதம் - கார்யம் எல்லாம்; அகிலமபி - அதெல்லாம்; ஸபர்யா-பர்யாய: - பூஜை முறை.

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

அம்பிகே! ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள். ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை. இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.


அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது. அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார். இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார். அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும். இலைகளை சாதாரணமாக பலாசம் எனக் கூறுவார்கள்.சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.

ருத்ரத்தில் "யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே" என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான். பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து. அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.


ப்ரதிபய-ஜராம்ருத்யு - பயங்கரமான மூப்பு-மரணம்; ஸுதா - அம்ருதம்; ஆஸ்வாத்ய அபி - சாப்பிட்டும் கூட; விதி-சதமக - ப்ரம்மா, இந்திரன்; ஆத்யா - முதலிய; திவிஷத - தேவர்களும்; விபத்யந்தே - பிரளய காலத்தில்; க்ஷ்வேலம் - விஷம்; கபலிதவத: - சாப்பிட்ட; காலகலனா - காலத்தை வென்ற

34 comments:

Kavinaya said...

தெளிவான விளக்கங்களுக்கு நன்றி மௌலி!

//அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன்//

இப்படி இருப்பது எவ்வளவு அருமையான மனநிலை!

//உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.//

தாடங்கத்தின் மகிமையை இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

//சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.//

தாடங்கம்னாலே அபிராமிதானே நினைவுக்கு வரா? அவளுடைய தாடங்கமே நிலவாகியதும் இதனால்தானோ?

Anonymous said...

அருமையான பதிவு, நவாபரணபூஜையின் முடிவில் ஒரு வாக்கியம் வரும்,"யதா யோக்யம் ததா குரு"- எனக்கு என்ன யோக்யதை உண்டு என்பதை நீ அறிவாய்,அதற்கேற்ற பலனை நீ அளிப்பாய். //அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன்// என்று நாம் இருந்தாலும் அவளிடம் கேட்காமலேயே எல்லாம் தரும் கற்பகவிருட்சம் அவள்.

தம்பி

மெளலி (மதுரையம்பதி) said...

வாருங்கள் சாக்த ஸ்ரீ கணேசன்...நீங்க வந்து பின்னூட்டமும் இட்டு பெருமை சேர்த்தமைக்கு நன்றி. :-)

விரைவில் மதுரையம்பதி பதிவில் நவகைலாசம் பற்றி ஒரு சிறு தொடர் எழுத எண்ணம்...அங்கும் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இன்றே சொல்லி வைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா...

எல்லாவற்றையும் சமர்பணம் செய்வது நன்றே...ஆனால் எல்லா நேரமும் சுக-துக்கங்களை சமநோக்குடன் பார்த்தால் தானே சமர்பணம் செய்ய இயலும்?...அந்த சம-நோக்கு வரவும் அம்பிகை அருளட்டும்..

ambi said...

அருமையான விளக்கங்கள் மெளலி அண்ணா.

ஹிஹி, தம்பிய நைசா கலாய்ச்சு இருக்கீங்களே..

@தம்பி, நீ எப்பப்பா நவாபரண பூஜை எல்லாம் அட்டெண்ட் பண்ணின? :))

ஒரு வருஷம் காஞ்சி புரத்தில் வசித்தும் ஒரு தடவை கூட அந்த பூஜையை என்னால பாக்க முடியலை. :(

பூஜை முடிஞ்சு இரவு ரெண்டு மணிக்கு பிரசாதம், அதுவும் கோவிலுக்கு வெளியில தான் குடுப்பாங்க. :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி..

//ஹிஹி, தம்பிய நைசா கலாய்ச்சு இருக்கீங்களே..//

அட, இதிலென்ன கலாய்த்தல்...உண்மைதானே

//பூஜை முடிஞ்சு இரவு ரெண்டு மணிக்கு பிரசாதம், அதுவும் கோவிலுக்கு வெளியில தான் குடுப்பாங்க. :))//

இது, இதச் சொல்லுங்க...

தி. ரா. ச.(T.R.C.) said...

தாடங்க மகிமையை பற்றி தெரிந்து கொண்டேன். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி காதில் ஆதி சங்கரரால் ச்ரீ சகர வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தாடங்கம் ஒளிரும் அழகே அழகு.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாங்க திராச. அகிலாண்டேஸ்வரி தாடங்கம் பற்றி சொன்னதுக்கு நன்றி. இதனால்தான் படத்தில் அகிலாண்டேஸ்வரி படம் போட்டேன். :)

ஷைலஜா said...

எங்க அரங்கனின் ஊர் அருகில் இருக்கும் ஆனைக்கா அன்னைபடம் போடதிலேயே பதிவு சிறப்பாய் மிளிர்கிறது.
//அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது..//

புதிய தக்வல் எனக்கு இது.

.கர்நாடகாவில் மஹாராஷ்ட்ரத்தில் இந்த கருகமணிச்சரம்பழக்கத்தில் இருக்கு.

அம்பிகையைப்பற்றி என்ன எழுதினாலும் யார் எழுதினாலும் அதுசிறப்பாகவேவந்துவிடுகிறது.
மதுரையம்பதி எழுதும்போது அம்பிகை இன்னும் மிளிர்கிறாள்..

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஷைலஜா....அதென்ன உங்க அரங்கன்:))....ஹல்லோ எங்களுக்கும் தான் :))

மெளலி (மதுரையம்பதி) said...

//.கர்நாடகாவில் மஹாராஷ்ட்ரத்தில் இந்த கருகமணிச்சரம்பழக்கத்தில் இருக்கு.//

ஆமாம் ஷைல்ஸக்கா....இன்றைய மாங்கல்ய தாரணம் என்பது பின்னாளில் வந்தது என்றே படித்திருக்கிறேன்.

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
.//

ஆமாம் ஷைல்ஸக்கா....இன்றைய மாங்கல்ய தாரணம் என்பது பின்னாளில் வந்தது என்றே படித்திருக்கிறேன்//

ஆமாம் ஆண்டாளீன் வாரணமாயிரம்பாடல்களில் மாங்கல்யதாரணம் வந்திருக்காது.கைத்தலம் பற்றும்வரைதான் இருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஷைலஜா சொல்லுவது சரி ஆண்டாள். கைத்தலம் பற்றுவதையும் சப்தபதியும் பற்றி பாடியுள்ளார்.மாங்கள்யதாரனம் பின்னால் வந்ததுதான்.

ஆஹா திரைமறைவில் இருந்த தம்பி காவலில் இருந்து தப்பி வந்து விட்டாரா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை. அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்//

அருமை!
இது தான் உண்மையான ஆனந்த லஹரி!

லயிப்பவர்க்கே லலிதை!
லியப்பவர் செயல்கள் எல்லாம் லலிதையின் செயல்களாகவே ஆகி விடும்.

எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர். அவர் சாதாரணமாகக் கிணற்றடியில் தண்ணீர் சேந்தினால் கூட, அவர் கை அசைவு என்னமோ சுவாமி விக்ரகத்துக்கு சோடச உபசாரம் செய்வது போல் இருக்கும்!

//இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்//

இதை இன்னும் கொஞ்சும் தெளிவாக்குங்கள் அண்ணா! இல்லையேல் அற்ப சுகங்களுக்காகச் செய்யக்கூடிய (வன்)செயல்களும், உன் பூஜையாகவே ஆகட்டும் என்று பொருளாகி விடப் போகிறது!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று பாபங்களையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க எண்ணுவார்கள் பாண்டவர்கள்! அப்போது அதன் உண்மையான தாத்பர்யம் அவர்களுக்குச் சொல்லி விளக்கப்படும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாக்த ஸ்ரீ கணேசன் வந்திருக்காரா?
ஆகா...
இந்தப் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ?
சாக்த ஸ்ரீ-க்க்கு அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்!

//நவகைலாசம் பற்றி ஒரு சிறு தொடர் எழுத எண்ணம்//

தம்பி பாதம் பட்டதற்கே இப்படி ஒரு மறுமலர்ச்சியா! அடியேன் கணேசானுஜ தாசன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாங்க ஷைலஜா....அதென்ன உங்க அரங்கன்:))....ஹல்லோ எங்களுக்கும் தான் :))//

அதெல்லாம் கிடையாது!
கங்கை காவிரி எல்லாருக்கும் பொது தான்! ஆனால் தோன்றும் இடத்தில் முதல் சிறப்பு அவரவர்களுக்கே!

"எங்க" ஷைலஜா அக்காவின்
அரங்கன் தான் அரங்கத்து அரங்கன்!
"எங்க" செல்ல அக்கா என்பதால் "எங்க" அக்காவின் அரங்கன், "எங்க" அரங்கனும் கூட!
"எங்க" எல்லாப் பதிவர்களுக்கும் இது தெரியும்!
"எங்க" மெளலி அண்ணா, இதை மொதல்ல தெரிஞ்சிக்கோங்கண்ணா! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது..//

வீட்டில் மணமாகும் முன்னரே இயற்கை எய்தும் பெண்களை அம்மனின் சொரூபமாக, பாலாம்பிகையாகப் போற்றும் வழக்கம் எங்கள் கிராமத்தில் உண்டு! ஆயர்களிடமும் உண்டு! பூவாடைக்காரி பால அம்பிகை என்பார்கள்!

அம்மா அவர்களுக்கு வைக்கும் பொங்கலிலும், பூசையிலும் இந்தக் காதோலைக் கருகமணியை கல்யாண அணிகலனாக (திருமாங்கல்யமாக) சார்த்துவார்கள்! புதுப் புடைவையைச் சுருட்டிச் சுருட்டி ஒரு சிரு பெண் போலச் செய்து, காதோலை கருகமணி சார்த்திப் படையல் வைப்பது வழக்கம்!

தெலுங்கரிடமும், கன்னடத்திலும் கருகமணி உண்டு! திருமலையில் தாயாருக்கு வட்ட வடிவான திருமாங்கல்யமும், கருகமணியும் சார்த்தப்படும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.//

ஆனால் இந்தக் கருகமணி தான் தாடங்கமா?

இது போன்ற கருகமணி அமைப்பிலா ஆதிசங்கரர் செய்வித்து உலகன்னையின் உக்கிரத்தைச் சாந்தப்படுத்தினார்?

அப்படி என்றால் கருகமணியைக் கழுத்தில் அல்லவா தரிக்க வேண்டும்? ஏன் காதில் அணிவித்துள்ளார்கள்???

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்

////இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.//

பரமாச்சார்யார் தனது விளக்கத்தில், பிற்காலத்தில் பலாசத்தால் (பனையோலையால்) தாலி செய்வதும் இருந்திருக்கிறது அதனால்தான் பலாசத்தால் ஆன தாலி-தாடங்கம் என்று கூறியிருப்பதாக சொல்லியிருக்கார்.

//ஆனால் இந்தக் கருகமணி தான் தாடங்கமா? //

கருக + மணி கருப்பான சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மணி, அதை மாலையாக கோர்த்து அணிவது கர்நாடக/ஆந்திரத்தில் இன்றும் வழக்கம்.

இதே கருப்பான மண்ணால் பெரியதாக 3-4 செண்டிமீட்டர் டையாமீட்டரில் வளையல் மாதிரி செய்து, அதன் உள்ளே பனை ஓலை சுற்றி இருப்பது காதோலை. அந்த காலத்தில் இந்த காதோலையே சுவாசினிகள் மட்டுந்தான் அணிவர்.

//இது போன்ற கருகமணி அமைப்பிலா ஆதிசங்கரர் செய்வித்து உலகன்னையின் உக்கிரத்தைச் சாந்தப்படுத்தினார்? //

ஆதிசங்கரர் அணிவித்த தாடங்கம் ஸ்ரீசக்ரம். மேலே திரச சொல்லியிருக்கார், அகிலாண்டேஸ்வரி படமும் பாருங்க. :)

//அப்படி என்றால் கருகமணியைக் கழுத்தில் அல்லவா தரிக்க வேண்டும்? ஏன் காதில் அணிவித்துள்ளார்கள்???//

மேல சொன்ன 2 பதில்களும் தெளிவாக்கிடுச்சா?

மெளலி (மதுரையம்பதி) said...

//வீட்டில் மணமாகும் முன்னரே இயற்கை எய்தும் பெண்களை அம்மனின் சொரூபமாக, பாலாம்பிகையாகப் போற்றும் வழக்கம் எங்கள் கிராமத்தில் உண்டு! ஆயர்களிடமும் உண்டு! பூவாடைக்காரி பால அம்பிகை என்பார்கள்!//

ஆமாம், இங்கு, கர்நாடகாவில் அர்ச்சனா கும்குமத்துடன் (சுமங்கலிகளுக்கு தரும் வெற்றிலை-பாக்கு, சீப்பு-கண்ணாடி...) இந்த ஓலையும் தருவார்கள்

//அம்மா அவர்களுக்கு வைக்கும் பொங்கலிலும், பூசையிலும் இந்தக் காதோலைக் கருகமணியை கல்யாண அணிகலனாக (திருமாங்கல்யமாக) சார்த்துவார்கள்! புதுப் புடைவையைச் சுருட்டிச் சுருட்டி ஒரு சிரு பெண் போலச் செய்து, காதோலை கருகமணி சார்த்திப் படையல் வைப்பது வழக்கம்!//

ஆம், இவை மங்கலப் பொருள்களுடன் சேர்ந்தது அல்லவா!

//தெலுங்கரிடமும், கன்னடத்திலும் கருகமணி உண்டு! திருமலையில் தாயாருக்கு வட்ட வடிவான திருமாங்கல்யமும், கருகமணியும் சார்த்தப்படும்!//

:-)

மெளலி (மதுரையம்பதி) said...

//அதெல்லாம் கிடையாது!
கங்கை காவிரி எல்லாருக்கும் பொது தான்! ஆனால் தோன்றும் இடத்தில் முதல் சிறப்பு அவரவர்களுக்கே!//

இதே லாஜிக்கால் தான் காவிரி நீர் கர்நாடகாவை தாண்ட மாட்டேங்குதோ? :)

//"எங்க" ஷைலஜா அக்காவின்
அரங்கன் தான் அரங்கத்து அரங்கன்!
"எங்க" செல்ல அக்கா என்பதால் "எங்க" அக்காவின் அரங்கன், "எங்க" அரங்கனும் கூட!
"எங்க" எல்லாப் பதிவர்களுக்கும் இது தெரியும்!
"எங்க" மெளலி அண்ணா, இதை மொதல்ல தெரிஞ்சிக்கோங்கண்ணா! :-)//

சரிங்கண்ணா. ஹிஹி ஏதோ நீங்க 4-5 நாளா காணோம், இந்த நேரத்துல ஷைலஜாக்காவை கொஞ்சம் கலாச்சுக்கலாமுன்னு பாத்தேங்கண்ணா..:-)

அக்கா, செ/வெ தம்பி கே.ஆர்.எஸ்:

நீங்க இப்படியெல்லாம் அராஜக உரிமை கொள்வதால்தான் நாங்க கர்நாடகாவிலும் ஸ்ரீரங்க(ப்பட்டினத்தை) பெருமாளை கூப்பிட்டு சயனிக்க வச்சுருக்கோம் தெரியுமில்ல? :)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


அதெல்லாம் கிடையாது!
கங்கை காவிரி எல்லாருக்கும் பொது தான்! ஆனால் தோன்றும் இடத்தில் முதல் சிறப்பு அவரவர்களுக்கே!//


>>>
இப்படி திரு வாசகமாய் சொல்ல எனது செல்லத்தம்பிய விட்டு உலகத்துல வேற யார் இருக்கா?:)( யாரு அங்க ஐஸ் ஐஸ்னு குரல் கொடுக்கறது?:):)

//"எங்க" ஷைலஜா அக்காவின்
அரங்கன் தான் அரங்கத்து அரங்கன்!
"எங்க" செல்ல அக்கா என்பதால் "எங்க" அக்காவின் அரங்கன், "எங்க" அரங்கனும் கூட!
"எங்க" எல்லாப் பதிவர்களுக்கும் இது தெரியும்!
"எங்க" மெளலி அண்ணா, இதை மொதல்ல தெரிஞ்சிக்கோங்கண்ணா! //
:-)

எங்க மௌலி தம்பி எங்க பெங்களூர்ல எங்க பேட்டைல இருக்காரு..புரிஞ்சிப்பாரு ச்சமத்தாச்செ!!!

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//அதெல்லாம் கிடையாது!
கங்கை காவிரி எல்லாருக்கும் பொது தான்! ஆனால் தோன்றும் இடத்தில் முதல் சிறப்பு அவரவர்களுக்கே!//

//இதே லாஜிக்கால் தான் காவிரி நீர் கர்நாடகாவை தாண்ட மாட்டேங்குதோ? :)//

அட அட!!! ரூம் போட்டு சிந்திப்பிங்களா மதுரையம்பதி?:)


//சரிங்கண்ணா. ஹிஹி ஏதோ நீங்க 4-5 நாளா காணோம், இந்த நேரத்துல ஷைலஜாக்காவை கொஞ்சம் கலாச்சுக்கலாமுன்னு பாத்தேங்கண்ணா..:-)//

செ.தம்பி உடையாள் படைக்க(!) அஞ்சாள்:)


//அக்கா, செ/வெ தம்பி கே.ஆர்.எஸ்:

நீங்க இப்படியெல்லாம் அராஜக உரிமை கொள்வதால்தான் நாங்க கர்நாடகாவிலும் ஸ்ரீரங்க(ப்பட்டினத்தை) பெருமாளை கூப்பிட்டு சயனிக்க வச்சுருக்கோம் தெரியுமில்ல? :)//

என்ன நாங்க ? நீங்களே வைகைவள்ளல்!

ரீ ஏன்ரீ கர்நாடகா
மகா ஆகிதீரா நீவு?:) நானு யாவாகிலும் ஈ மண்ணின (மரு)மகளே!!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//என்ன நாங்க ? நீங்களே வைகைவள்ளல்!

ரீ ஏன்ரீ கர்நாடகா
மகா ஆகிதீரா நீவு?:) நானு யாவாகிலும் ஈ மண்ணின (மரு)மகளே!!!!!//

ஹவுது ரீ, முன்ச்சேனே ( 2003யல்லி ) கர்நடாக ராஜ்யதவரு நனகு ஸ்பெஷல் சிட்டிசன்ஷிப் கொட்ரூ... :)

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையில் இருக்கும் முதல் சுலோகம் அருமை மௌலி. மீண்டும் மீண்டும் படித்து மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டியது. அப்போது தான் அதனைச் சொல்லி வேண்டும் போது அது உண்மையாக இருக்கும்.

சுமங்கலிகள் எப்போதும் தோடு அணிந்தே இருக்க வேண்டும் என்று இதனால் தான் பெரியவர்கள் சொல்கிறார்களா? சரி தான். முதிர்ந்த சுமங்கலிகள் எண்ணெய்க் குளியலின் போது வைரத் தோட்டை எடுத்துவிட்டு தங்கத் தோட்டை பூட்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

தாலம் என்பது பனைக்கான தமிழ்ச்சொல். அது அப்படியே வடமொழியிலும் இருப்பதை இன்று அறிந்து கொண்டேன். பனையோலையையே அந்தக் காலத்தில் தாலியாக அணிந்திருக்கிறார்கள் - தாலத்தை அணிந்ததாலேயே அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

குமரன் (Kumaran) said...

//அடியேன் கணேசானுஜ தாசன்!//

இங்கே பிழை இருக்கிறது இரவிசங்கர். அம்பியானுஜ தாசன் என்று சொல்லுங்கள். இல்லை கணேச தாசன் என்று சொல்லுங்கள். அதென்ன கணேசானுஜ தாசன் என்கிறீர்கள்? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//மீண்டும் மீண்டும் படித்து மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டியது. அப்போது தான் அதனைச் சொல்லி வேண்டும் போது அது உண்மையாக இருக்கும். //

//பனையோலையையே அந்தக் காலத்தில் தாலியாக அணிந்திருக்கிறார்கள் - தாலத்தை அணிந்ததாலேயே அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.//

ஆம்!

//சுமங்கலிகள் எப்போதும் தோடு அணிந்தே இருக்க வேண்டும் என்று இதனால் தான் பெரியவர்கள் சொல்கிறார்களா? சரி தான். முதிர்ந்த சுமங்கலிகள் எண்ணெய்க் குளியலின் போது வைரத் தோட்டை எடுத்துவிட்டு தங்கத் தோட்டை பூட்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். //

உண்மை, நானும் கவனித்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இங்கே பிழை இருக்கிறது இரவிசங்கர். அம்பியானுஜ தாசன் என்று சொல்லுங்கள். இல்லை கணேச தாசன் என்று சொல்லுங்கள். அதென்ன கணேசானுஜ தாசன் என்கிறீர்கள்? //

கே.ஆர்.எஸ், ப்ளீஸ் நோட்....இது நான் சொல்லலை... :))

திவாண்ணா said...

அட அவர் முருகதாஸ்பா! (பித்துக்குளி இல்லையே?)

:-))))

பலாஸம்ன்னா முருக்கன் என்கிற புரசு இல்லையோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//அடியேன் கணேசானுஜ தாசன்!//

இங்கே பிழை இருக்கிறது இரவிசங்கர். அம்பியானுஜ தாசன் என்று சொல்லுங்கள். இல்லை கணேச தாசன் என்று சொல்லுங்கள்.//

அதெல்லாம் சொல்ல முடியாது!
நாக்கொண்டு மானுடம் பாடோம்! :-)

//அதென்ன கணேசானுஜ தாசன் என்கிறீர்கள்? :-)//

நான் சொன்னது அடியேன் கணேசனின் அனுஜனான முருகனின் தாசன் என்பது!

தகப்பன் சாமி போல், அண்ணனுக்கே சாமியா இருக்காரு இந்தச் சின்னத் தம்பி! ஆனாலும் அடியேன் முருகப்பெருமான் தாசன் தான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எண்ணெய்க் குளியலின் போது வைரத் தோட்டை எடுத்துவிட்டு தங்கத் தோட்டை பூட்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். //

//உண்மை, நானும் கவனித்திருக்கிறேன்//

யோவ் மெளலி அண்ணா
உன்மையைச் சொல்லும்! எதைக் கவனித்திருக்கீரு?
குளியலின் போது இந்த வேண்டாத வேலை எல்லாம் எதுக்கு உமக்கு?

குமரன் - யூ டூ?

அண்ணீஸ் - நோட் திஸ் பாயிண்ட்! பூரிக்கட்டை ரெடி ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படி என்றால் கருகமணியைக் கழுத்தில் அல்லவா தரிக்க வேண்டும்? ஏன் காதில் அணிவித்துள்ளார்கள்???//

மேல சொன்ன 2 பதில்களும் தெளிவாக்கிடுச்சா?//

இல்லை!
தாலீ பலாச தாடங்காம் என்னும் போது தால(பனை) ஓலையால் செய்த தாடங்கம் என்னும் பொருள் கொண்டால், அப்போ அது வளையலில் சுற்றிய காதோலை மட்டும் ஆகும்! காதில் அணிவிப்பது சாலவும் பொருத்தம்!

தாலீ என்பது திருமாங்கல்யம் என்று கொண்டால், தால ஓலையால் செய்த திருமாங்கல்யம்! கருகமணியில் கோர்த்து கழுத்தில் அணிவது!

அப்போ பனை ஓலை என்பது காதிற்கும் கழுத்துக்கும் பொதுவாகவே இருந்திருக்கிறது! "தாலி"யைக் காதிலும் அணிந்து இருக்கின்றனர்! கழுத்திலும் அணிந்து இருக்கின்றனர்! சரியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அக்கா, செ/வெ தம்பி கே.ஆர்.எஸ்:

நீங்க இப்படியெல்லாம் அராஜக உரிமை கொள்வதால்தான் நாங்க கர்நாடகாவிலும் ஸ்ரீரங்க(ப்பட்டினத்தை) பெருமாளை கூப்பிட்டு சயனிக்க வச்சுருக்கோம் தெரியுமில்ல? :)//

என்னாது, நீங்க சயனிக்க வச்சீங்களா? அடிங்க!
அரங்கத்தில் எங்கள் அன்பில் மூழ்கி இருக்கும் பெருமாள்; ஆனால் கர்நாடகத்தில் உங்களைக் கண்காணிக்க வேண்டுமே! அதான் ஸ்ரீரங்க-பட்டினம் ஒன்றை உண்டாக்கி, அவரை அங்கு சயனிக்குமாறு எழுந்தருளப் பண்ணி, மெளலி அண்ணா முதலானவர்கள் உள்ள ஒரு லிஸ்ட்டு கொடுத்து, கண்காணிக்கச் சொல்லி உள்ளோம்! :-)

Anonymous said...

//நான் சொன்னது அடியேன் கணேசனின் அனுஜனான முருகனின் தாசன் என்பது!
//

இது தான் ஊருக்கே தெரியுமே கேஆரெஸ் அண்ணா! :p

நான் தான் ரவுடி! நான் தான் ரவுடினு ஜீப்ல நீங்களே ஏறிக்கறிங்களே! :))