அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6


முந்தைய பகுதி இங்கே!

திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.

Annaikku_64_Upacha...


Annaikku_64_Upacha...


51. நடனம்

முகநயன விலாஸ லோல வேணீ
விவஸித நிர்ஜித லோல ப்ருங்கமாலா !
யுவஜன ஸுககாரி சாருலீலா:
பகவதி தே புரதோ நடந்தி பாலா:

முகம், கண் இவைகளின் அபிநயத்தால் அசைகின்ற வேணியின் விலாசம், வரிசையாகச் சுற்றிவடும் வண்டுகள் வரிசையை விட அழகான இருக்கிறது. நடனக் கலையில் சிறந்த மங்கையர் உம்முன் நடனமாடுவதை சமர்ப்பிக்கிறேன்.

ப்ரம தளிகுல துல்யா லோலதம் மில்ல பாரா:
ஸ்மிதமுக கமலோத்யத் திவ்ய லாவண்ய பூரா: !
அநுபமித ஸுவேஷா வாரயோஷா நடந்தி
பரப்ருத கலகண்ட்யா: தேவிதைன்யம் துநோது: !!

அழகானவர்களும், ஒப்பற்ற வேடம் பூண்டவர்களும், குயில் போன்ற குரலினிமை கொண்டவர்களுடைய நடனம் ஏழ்மையை அகற்றட்டும்.

52. வாத்யம்

டமரு டிண்டிம ஜர்ஜர ஜல்லரீ
ம்ருதுரவத்ர கடத்ர கடாதய: !
ஜடிதி ஜாங்க்ருத ஜரங்க்ருதை:
பஹுதயம் ஹ்ருதயம் ஸுகபந்துமே!!

டமரு, டிண்டிம, ஜாஜ்ர ஜல்லரீ, த்ரகடம் ஆகிய வாத்யங்களின் சப்தம் மனதைச் சுகப்படுத்தட்டும்.


நாட்டியம், நடனம், மற்றும் வாத்யங்களுக்கான உபசார பாடல் கீழே!

நவரசமும் காட்டியுன்னை போற்றுகின்ற நாட்டியமும் (51)
ஜதிகள்சேர்த்து துரிதகதியில் ஆடுகின்ற நடனங்களும் (52)
டமரு,டிண்டிம, கச்சபிகள் முழங்குகின்ற பேரொலியும் (53)
அத்தனையும் உனக்காக, ஆனந்தமாய் மகிழ்ந்திடுவாய்!

53. கானம்

விபஞ்சீஷு ஸப்தஸ்வரான் வாத யந்த்ய:
தவத்வாரி காயந்தி கந்தர்வ கன்யா: !
க்ஷணம் ஸாவ தானேன சித்தேன மாத:
ஸமா கர்ணய த்வம் மயா ப்ரார்த்திதாஸி: !!

கந்தர்வ கன்னியர்கள் வீணையில் கானம் செய்கின்றனர். அந்த இசை இனிமையை நானும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

54. நர்த்தன அபிநயம்

அபிநய கமநீயைர் நர்த்தனைர் நர்த்தகீனாம்
க்ஷணமபி ரமயித்வா சேத ஏதத் த்வதீயம் !
ஸ்வய மஹதி சித்ரை: ந்ருத்த வாதித்ர கீதை:
பகவதி பவதீயம் மானஸம் ரஞ்ஜயாமி !!

நடன மாதர்கள் அழகான அபிநயத்தால் உங்களை மகிழ்விப்பது போல நானும் ந்ருத்த வாத்யங்களால் உங்களை மகிழ்விக்கிறேன்.

கந்தர்வர் இசைக்கின்ற இனிமையான கானங்களும் (54)
கங்காதரன்விளை யாடல்களை அபிநயிக்கும் நர்த்தனங்களும்
கொன்றைமலர் சூடுவோனின் இடமிருக்கும் கொற்றவையே
கடம்பவனப் பேரழகீ, கண்டுநீயும் களித்திடுவாய்!


55. ஸ்துதி

தவ தேவி குணானு வர்ணனே
சதுரா நோ சதுரான நாதய: !
ததிவஹை க முகோஷு ஜந்துஷு
ஸ்தவநம் கஸ்தவ கர்துமீ ச்வர: !!

நான்முகன் முதலான தேவர்களாலேயே உமது குணத்தை வர்ணிக்க முடியாதெனில், என் போன்ற ஒரு முகம் கொண்ட மனிதர்களால் எப்படி வர்ணிக்க இயலும்?

56. ப்ரதக்ஷிணம்

பதேபதேயத் பரிபுஜ கேப்ய:
ஸத்யோச்வ மேதாதி பலம் ததாதி !
தத்ஸர்வ பாப க்ஷயயேது பூதம்
ப்ரதக்ஷிணம் தே பரிதள் கரோமி !!
பிரதக்ஷிணம் செய்பவர்களது ஒவ்வொரு அடியிலும் 'அச்வ மேதப் பலம்' கிடைக்கும். எனவே பாபங்கள் தீரும் வகையில் நாற்புறமும் பிரதக்ஷிணம் செய்கிறேன்.

பிரம்மன்,விஷ்ணு, சிவனென்ற மூன்றுதிருமூர்த்திகளும்
அடிபணியும் அன்னையுன்னை அன்புடனே வணங்குகின்றோம்! (55)
எண்ணுகின்ற மனதாலும் சொல்லுகின்ற வாக்காலும்
செய்யுகின்ற செயலாலும் உன்னைவலம் வருகின்றோம்! (56)


57. நமஸ்காரம்

ரக்தோத்பலா ரக்தலதா ப்ரபாப்யாம்
த்வஜோர்த்வா லேகா குலிசாங்கிதாப்யாம் !
அசேஷ ப்ருந்தாரக வந்திதாப்யாம்
நமோ பவாநீ பதபங்கஜாப்யாம் !!

தேவர்களால் வணங்கப்படுகிற செந்தாமரை போன்ற பவாநியே உன் பாதகமலங்களில் நமஸ்கரிக்கிறேன்.

சின்னமணி நூபுரங்கள் செல்லமாக கிணுகிணுக்க
வண்ணமணி ரத்தினங்கள் வரிசையாக மினுமினுக்க
சிற்சபையில் சிலம்பொலிக்க சிவனுடனே நடனமிடும்
செந்தாமரைப் பாதங்கள் சிரம்தாழ்ந்து வணங்குகின்றோம்! (57)


58. புஷ்பாஞ்சலி

சரண நளினயுக்மம் பங்கஜை: பூஜயித்வா
கனக கமலாமாலாம் கண்ட தேசேர் பயித்வா !
சிரஸி விநிஹி தோயம் ரத்ன புஷ்பாஞ்சலிஸ்தே
ஹ்ருதய கமலமத்யே தேவி ஹர்ஷம் தநோது !!


கமலத்தால் பூஜித்து, கமலத்தை அணிவித்து, உன்னுடைய முடிமேல் நான் வைக்கும் ரத்ன புஷ்பாஞ்சலி, என்னுடைய இதயத்தில் சந்தோஷத்தை அளிக்கட்டும்.
பலநிறத்தில் மலர்பறித்து பிரியமாக சேகரித்து
சுகமளிக்கும் மலர்பறித்து வாசனையாய் சேகரித்து
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் தொழும்தேவி
எங்களுக்கும் அருளவேண்டி அஞ்சலிகள் செய்யுகின்றோம்! (58)


59. அந்தப்புரம்


அதமணிமய மஞ்சகா பிராமே
கனகமய விதான ராஜமானே !
ப்ரஸதகரு தூபிதேஸ் மின்
பகவதி பவநேஸ்து தே நிவாஸ: !!

மணிமயமாஅன மஞ்சம்; அழகான விதானம்; அகரு, தூபம் புகை; இவையிருக்கும் அந்தப்புரம் வாருங்கள்.

வானளாவும் மாடங்கள் தாமரைத்த டாகங்கள்
துள்ளியோடும் புள்ளிமான்கள் கொஞ்சிக்கூவும் இளங்கிளிகள்
அழகழகாய் பலமணிகள் இரத்தினங்கள் இழைத்திருக்கும்
எழில்அந்தப் புரத்திற்கு வசங்கரியே எழுந்தருள்வாய்! (60)


60. கட்டில்

ஏதஸ்மின் மணிகசிதே ஸுவர்ண பீடே
த்ரைலோக்யா பயவரதெள நிதாய ஹஸ்தெள!
விஸ்தீர்ணே ம்ருதுலத ரோத்தரச் சதேஸ்மின்
பர்ங்கே கனகமயே நிஷீத மாத: !!

மூவுலகுக்கும் வரமளிப்பவளே!, விசாலமான, மேல்விரிப்புள்ள ரத்னக் கட்டிலில் வந்து அமருங்கள்.


வெண்தந்தம் இழைத்துவைத்து இரத்தினங்கள் பதித்துவைத்து
பட்டுமெத்தை விரித்துவைத்தவி சாலமான கட்டிலிலே
பெண்நிலவே பேரெழிலே சிரமபரி காரம்செய்து
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க கண்மணியே வந்தருள்வாய்! (60)


61. நலங்கு

தவதேவி ஸ்ரோஜ சின்னயோ:
பதயோர் நிர்ஜித பத்மராகயோ: !
அதிரக்த தரை ரலக்தை:
புனருக்தாம் ரசயாமி ரக்ததாம். !!

தாமரை அடையாளமுள்ளதும், பத்மராகம் போன்றதுமான உமது சிவந்த திருவடிகளுக்கு செம்பஞ்சுக் குழம்பினால் நலங்கிட்டு, மேலும் செம்மையாக்குகிறேன்.
செங்கமலங் களும்வணங்கும் மென்பிஞ்சுப் பதங்களுக்கு
செம்பஞ்சுக் குழம்பெடுத்து செஞ்சித்திர மாய்தீட்டி
பூந்தளிர்போல் பதங்களுக்கு பூப்போல எழில்கூட்டி
பூவைக்கு நலுங்கிடவே பூமகளே நீமகிழ்வாய்! (61)

62. வாய் கொப்புளித்தல்
அதமாத ருசீர வாஸிதம்
நிஜதாம்பூல ரஸேன ரஞ்சிதம் !
தபநீய மயேஹி பட்டகே
முககண்டூஷ ஜலம் விதியதாம் !!

வெட்டிவேர் வாசனையுடன், உமது தாம்பூல ரசத்தால் சிவந்து போன வாயிலுள்ள நீரை, இந்த பொற்கிண்ணத்தில் கொப்பளியுங்கள்.

63. சயனம்

க்ஷணமத ஜகதம்ப மஞ்சகேஸ்மின்
ம்ருதுதர தூலிகயா விராஜமானே !
அதிரஹஸி முதா சிவேன ஸார்த்தம்
ஸுகசயனம் குருதத்ர மாம் ஸ்மரந்தீ !!

மிக மென்மையான மெத்தையுடன் கூடிய கட்டிலில் சிவனாருடன் மகிழ்வுடன் படுத்துக் கொள்வீர்களாக.


வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு (63)
கட்டியமண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்
எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர
கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா! (64)


64. த்யானம்
முக்தா குந்தேந்து கெளராம் மணிமய
மகுடரம் ரத்ன தாடங்க யுக்தாம்
அக்ஷஸ்ரக் புஷ்ப ஹஸ்தாம் அபய வரகராம்
சந்த்ர சூடாம் தரிணேத்ராம் !
நானாலங்கார யுக்தாம் ஸுரமகுட
மணித்யோதித ஸவர்ண பீடாம்
ஸானந்தம் ஸுப்ரஸன்னாம் த்ரிபுவன
ஜனனீம் ஸேதஸா சிந்தயாமி !!

முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும், மணிக்கீரீடமுள்ளவளும், ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும், ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும், அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும், சந்திரனைத் தலையில் சூடியவளும், மூன்று கண்களை உடையவளும், அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும், ஆனந்தமானவளும், மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!, நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன்.

க்ஷமை வேண்டல்
ஏஷா பக்த்யா தவ விரசிதா யாமயா தேவிபூஜா
ஸ்விக்ருத்யைநாம் ஸபதி கைலான் மேப்ராதான் க்ஷமஸ்வ !
ந்யூனம் யுத்தத்தவ கருணையா பூர்ண தாமேது ஸத்ய:
ஸானந்தம் மே ஹ்ருதய கமலே தேஸ்து நித்யன் நிவாஸ : !!

தேவி, நான் பக்தியுடன் மானஸீகப் பூஜை செய்கிறேன். அதை ஏற்று, என்னுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்வாயாக. பூஜையில் ஏதேனும் குறையிருக்குமானால். அதை உனது கருணையால் பூர்த்தி செய்வாயாக. நீ எனது ஹ்ருதய கமலத்தில் என்றும் வாசம் செய்ய வேண்டும் தாயே!.

அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்
குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!
அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள்யாம்
தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!

கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!
கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று
கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்! மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!
கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்!

*******************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

*******************************************************************************

எனது வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு உபசாரத்திற்கும் தமிழில் அழகாகப் பாடல்கள் எழுதிக் கொடுத்த சகோதரி கவிநயாவிற்கும், தானாக முன்வந்து பாடல்களைப் பாடிக் கொடுத்த திரு. கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

படித்துப் பின்னூட்டமிட்ட, மற்றும் படித்து மட்டும் சென்ற எல்லோருக்கும் எனது நன்றிகள், மற்றும் வணக்கங்கள்.


அம்பிகை ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரி பரபட்டாரிகா எல்லோருக்கும் அவரவர் மனோ-பீஷ்டங்களை அருள வேண்டிக் கொண்டு, இந்த வலைப் பூவை முடிக்கிறேன்.

சுபமஸ்து !!!

10 comments:

Kavinaya said...

உபசாரங்களை, குறிப்பாக நவராத்திரி சமயத்தில் எழுத எனக்கு வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும், மௌலி. ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!!

ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் இருந்தது. அவள் அருளால்தான் சாத்தியமானது.

உபசாரங்களை பாடித் தந்த கண்ணனுக்கும், கவிராஜர் பாடல்களை பதம் பிரித்து பொருள் சொன்ன குமரனுக்கும், வாசிக்கும் அனைவருக்கும், என் நன்றிகள் உரித்தாகுக.

அபிராமி அந்தாதி நிறைவுற்ற போதும் மனசு இப்படித்தான் வாடியது. இப்போதும் அப்படியே :(

அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாட்டளித்து பாட வைத்த கவிக்காவுக்கும்,
இந்தக் கைங்கர்யத்தில் அடியேனை அனுமதித்த மெளலி அண்ணாவுக்கும்,

என் சார்பாகவும், வாழைப்பந்தல் கிராமத்தில் கொலுவிருக்கும் பூவாடைக்காரியான எங்கள் அம்பாள் பச்சையம்மன் சார்பாகவும் நன்றி! :)

ஊரிலுள்ள அவளை முழுக்காட்டி உபசரிக்கறா மாதிரியே நினைச்சிக்கிட்டுத் தான் பாடினேன்! உபசாரங்கள் இனிமையாக வந்து விட்டது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபிராமி அந்தாதி நிறைவுற்ற போதும் மனசு இப்படித்தான் வாடியது. இப்போதும் அப்படியே :(//

ஹா ஹா ஹா
அதனால என்னக்கா? லலிதா சகஸ்ரநாமம் தொடங்கீட்டாப் போச்சு! :)

அதற்கு முன் செளந்தர்யலஹரியை மின்-புத்தகமாக்கி விடுங்கள்!
பலரும் பயனடைய ஏதுவாய் இருக்கும்!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. உண்மையில் நான் தான் நன்றி சொல்ல வேண்டும். கேட்டவுடன் ஏற்றுக்கொண்டு விரைவில் முடித்துக் கொடுத்தீர்களே, அதற்கு நான் நன்றி கொள்ள வேண்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ். ஆர்வமுடன் பாடி அளித்தமைக்கு நன்றி.

Kavinaya said...

//அதனால என்னக்கா? லலிதா சகஸ்ரநாமம் தொடங்கீட்டாப் போச்சு! :)//

எனக்கு ஆசைதான்... :) அம்மாவும் தம்பியும் மனம் வைக்கணுமே :)

//அதற்கு முன் செளந்தர்யலஹரியை மின்-புத்தகமாக்கி விடுங்கள்!
பலரும் பயனடைய ஏதுவாய் இருக்கும்!//

ஆமாம், நானும் நினைச்சேன்.

Kavinaya said...

//ஊரிலுள்ள அவளை முழுக்காட்டி உபசரிக்கறா மாதிரியே நினைச்சிக்கிட்டுத் தான் பாடினேன்! உபசாரங்கள் இனிமையாக வந்து விட்டது!//

ஆமாம், நடனத்துக்கு "தோம்தரிகிடதோம்" போட்டு பாடியிருக்கீங்க. அதே போல இன்னொண்ணு சொல்லணும்னு நினைச்சேன், உடனே எழுதாததால மறந்திடுச்சு :( கடைசியில் பாடியிருக்கும் சரணமும் அருமை. மீண்டும் நன்றிகள் கண்ணா.

Anonymous said...

Please publish Sri Bala thiripura sundari amman photo and also publish Soundarya lahari songs also

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...