அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -4


முந்தைய பகுதி இங்கே!

பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


31. தீர்த்தம்



க்ஷீர மேத திதமுத்த மோத்தமம்
ப்ராஜ்ய மாஜ்ய மிதமுஜ்வலம் மது !
மாதரே ததம்ருதோப மம்பய:
ஸம்ரமேண பரிபீய தாம்முஹு !!
பால், ருசியுள்ள தேன், அமிர்தம் ஆகிய இத்தீர்த்தங்களை அன்புடன் அளிக்கிறேன், அருந்துவாயாக.

32. கை அலம்புதல், சந்தனம் அளித்தல்

உஷ்ணோதகை: பானியகம் முகஞ்ச
ப்ரக்ஷால்ய மாத: கல தெளத பாத்ரே !
கர்பூர மிச்ரேண ஸகுங்குமேன
ஹஸ்தெள ஸமுத்வர்த்தய சந்தனேன !!


இந்த ஸ்வர்ண பாத்திரத்தில் கைகளையும், முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குங்குமப்பூ கலந்த சந்தனத்தை கைகளில் பூசிக்கொள்ளுங்கள்.

குடிக்க தீர்த்தம், கை அலம்புதல் மற்றும் சந்தனம் அளித்தலுக்கு சகோதரி கவிநயாவின் பாடல்கள் கீழே!

மூலிகைகள் சேர்த்துவைத்த ருசிமிகுந்த நீரதனை
பசியாறு கையில்நீயும் தாகம்தீர பருகிடுவாய்! (31)
தங்கச்செம்பில் முகர்ந்துவைத்த சிந்துநதி நீரெடுத்து
தந்தக்கைகள் தூய்மைசெய்து சந்தனமும் பூசிக்கொள்வாய்! (32)


33. தீர்த்தம்


அதிசீத முசீரவாஸிதம் தபநீய கலசே நிவேசிதம் !
படபூதமிதம் ஜிதாமிருதம் சுசிகங்கா ஜலமம்ப-பீதயதாம் !!

சுத்தமான வடிகட்டிய வாஸனை பொருந்திய தங்கப்பாத்திரத்தில் உள்ள கங்கை நீரை அருந்துங்கள் தாயே!.

34. கனிவகைகள்

ஜம்ப்வாம்ர ரம்பா பலஸம்யுதானி
த்ராக்ஷா பழ க்ஷெளத்ர ஸமன்வதானி !
ஸநாரி கேளானி ஸதாடி மானி
பலானி தே தேவி ஸமர்ப்பயாமி !!

நாவல், மா, வாழை, திராக்ஷை, மாதுளை போன்ற கனிவகைகளை உங்களுக்குப் பிரியமுடன் அளிக்கிறேனம்மா.

கூச்மாண்ட கோசாதிகஸம் யுதாநி
ஜம்பீர நாரங்க ஸமன்விதாநி !
ஸபீஜபூராணி ஸபாதராணி
பலா நிதே தேவி ஸமர்ப்பயாமி !!

விளாம்பழம், எலுமிச்சை, சாரங்கம்(?), இலந்தைப்பழம் ஆகியவற்றையும் அளிக்கிறேனம்மா.

கனிவகைகள் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றுக்கான தமிழ்ப் பாடல் கிழே!

ஆகாய கங்கைநீரில் ஏலமிட்டு மணக்கவிட்டு
ஆகாரம் முடிந்ததுமே நீயருந்த வேண்டுகின்றோம்! (33)
முக்கனிகள், நாவல்,திராட்சை, கொய்யா,வி ளாம்பழமும்
இலந்தையுடன் மாதுளமும் முக்கண்ணியே ஏற்றருள்வாய்! (34)


35. தாம்பூலம்

கர்பூரேணயுதைர் லவங்க ஸஹிதை: தக்கோல சூர்ணான் விதை:
ஸுஸ்வாதுக்ர முகைர் ஸகெளராதிரை: கஸ்நிக்க ஜாதீபலை: !
மாத: கைதகபத்ர பாண்டுர்சிபி: தாம்பூல வல்லிதளை
ஸாநந்தம் முகமண்ட நார்த்த மதுலம் தாம்பூலமங்கீ குரு !!

பச்சைக்கர்பூரம், லவங்கம், தக்கோலம் சேர்க்கப்பட்ட வெளுப்பான வெற்றிலை, பாக்கை ஆனந்தமாக அளிக்கிறேன் தாயே!

தாம்பூல நிர்ஜித ஸுதப்த ஸுவர்ண வர்ணம்
ஸ்வர்ணாக்த பூகபலமெளக்திக சூர்ணயுக்தம் !
ஸெளவர்ண பாத்ர நிஹிதம் கதிரேண ஸார்த்தம்
தாம்பூலமம்ப வதனாம் புருஹே க்ருஹாண !!

ஸ்வர்ண பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் போன்ற பாக்குப் பொடியையும், முத்துச் சுண்ணாம்பையும் ஏற்றுக் கொள்ளுங்களம்மா.

36. கற்பூரவீடிகள்

ஏலா லவங்காதி ஸமன்விதானி
தக்கோல கற்பூர விமிச்ரிதானி !
தாம்பூல வல்லீதள ஸம்யுதானி
பூசானி தே தேவி ஸமர்ப்பயாமி !!


ஏலம், லவங்கம், பச்சைக்கற்பூரம், பாக்கு ஆகியவற்றை சேர்த்து மடித்த வெற்றிலையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தாம்பூலம், கற்பூர வீடிகளுக்கான தமிழ் பாடல் கீழே!

பசுங்கொழுந்து வெற்றிலையில் பச்சைக் கற்பூரமும்
இலவங்கம்,முத்துச் சுண்ணமுடன் வாசனைப்பாக்கும் சேர்த்து
பக்குவமாய் கூட்டிவைத்து பாங்காக மடித்துத்தர
பரிபுரையே தாம்பூலம் தரும்சிவப்பில் மகிழ்ந்திடுவாய்! (35, 36)

37. ஹாரத்தி

மஹதி கனக பாத்ரே ஸ்தாபயித்வா விசாலான்
டமரு ஸத்ருச ரூபான் பத்தகோதூம தீபான் !
பஹுக்ருத மதேஷு ந்யஸ்ய தீபான் ப்ரக்ருஷ்டான்
புவன ஜனனி குர்வே நித்ய மாரார்த்திகம் தே !!


உலக நாயகியே!, பொற்கிண்ணத்தில் உடுக்கை போன்று கோதுமை மாவால் செய்யப்பட்டுள்ள நெய்திரி கொண்ட தீபங்களால் தினமும் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.


38. ஹாரத்தி

ஸவிநயமத தத்வா ஜாத்யுக்மம் தரண்யாம்
ஸபதி சிரசித்ருத்வா பாத்ரமாரார்தி கஸ்ய !
முககமல ஸமீபே தேம்ப ஸார்த்தம் த்ரிவாரம்
ப்ரமயதிமயீ பூயாத்தே க்ருபார்த்ர: கடாக்ஷ !!


முழங்கால்களை பூமியில் வைத்து, ஹாரத்தி தட்டினை தலைமீது வைத்து உங்கள் முகத்தருகே மும்முறை சுற்றும்போது, உமது அருட்பார்வை என்மீது விழட்டும்.

இருவித ஹாரத்திக்குமான தமிழ் பாடல் கீழே!

புத்தரிசி ஊறவைத்து அச்சுவெல்லம் சேர்த்திடித்து
புத்துருக்கு நெய்ஊற்றி மாவிளக் காய்ஏற்றி (37)
தங்கத்தாம் பாளத்திலே கற்பூர தீபமேற்றி
தாயுன்னைச் சுற்றிவர தாரகையே அருள்புரிவாய்! (38)

39. தக்ஷிணை

அத பஹுமணி மிச்ரை: மெளக்தி கைஸ்த்வாம் விகீர்ய
த்ரிபுவன கமநீயை: புஜயித்வா ச வஸ்த்ரை: !
மிலித விவித முக்தாம் திவ்ய மாணிக்ய யுக்தாம்
ஜனனி கனக வ்ருஷ்டிம் தக்ஷிணாம் தே அர்ப்பயாமி !!

பல மணிகளுடன் கலந்த முத்துக்களை இறைத்து, முவ்வுலகிலும் அழகான வஸ்த்ரங்களால் அலங்கரித்து, பலவகை மாணிக்கங்களுடன் சுவர்ணத்தை தக்ஷிணையாகத் தருகிறேன்.

பசும்பொன்னால் பாளங்களும், முத்து,பவளம், மாணிக்கமும்,
புட்பராகம், மரகதமும் வைரம்,வை டூரியமும்,
கோமதக இரத்தினமும் வர்ணஜாலம் காட்டிவர
காணிக்கையாய் தருகின்றோம் கௌமாரி ஏற்றருள்வாய்! (39)

40. குடை

மாத: காஞ்சதண்ட மண்டடிதமிதம் பூர்ணேந்து பிம்பப்ரபம்
நானாரத்ன வீசோபுஹேம கலசம் லோகத்ரயாஹ்லாதகம் !
பாஸ்வன் மெளக்திக ஜாலிகாபரிவிருதம் ப்ரீத்யாத் மஹஸ்தேத்ருதம்
சத்ரம் தேபரிகல்பயாமி சிரஸி த்வஷ்ட்ராஸ் வயம் நிர்மிதம் !!

தங்கப் பிடியுள்ளதும், சந்திர காந்தி உள்ளதும், முத்துக்கள் வரிசையாகத் தொங்குவதுமான குடையை அன்புடன் அளிக்கிறேன்.

வெண்நிலவின் தண்மைதரும் வெண்பட்டுத் துணிபோர்த்தி
பெண்மகளின் மனம்மகிழ பொன்கம்பி யுடன்கோர்த்து
பனிமுத்துப் பரல்பதித்த வெண்கொற்றக் குடையதனை
கனிவுடனே பிடிக்கின்றோம் கற்பகமே குளிர்ந்தருள்வாய்! (40)

7 comments:

Anonymous said...

//வெண்நிலவின் தண்மைதரும் வெண்பட்டுத் துணிபோர்த்தி
பெண்மகளின் மனம்மகிழ பொன்கம்பி யுடன்கோர்த்து
பனிமுத்துப் பரல்பதித்த வெண்கொற்றக் குடையதனை
கனிவுடனே பிடிக்கின்றோம் கற்பகமே குளிர்ந்தருள்வாய்! //

moonai roomba alaga irukku!

Thambi

Kavinaya said...

நன்றி தம்பீ :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முக்கனிகள், நாவல், திராட்சை, ....முக்கண்ணியே ஏற்றருள்வாய்//

கவிக்கா..
முக்கனி-முக்கண்ணி-ன்னு பாடலில் கொஞ்சம் அப்படி இப்படி எக்ஸ்ட்ராவா சேர்த்துட்டேன்-க்கா! :)
உரிமை எடுத்துக்கிட்டேன்! கோச்சிக்க மாட்டீங்க! தெரியும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//39. தக்ஷிணை//

நாம் அன்னைக்கே தட்சிணை கொடுப்பது எப்படி?
காணிக்கை தானே? எது சரியான சொல்லாடல் மெளலி அண்ணா?
காணிக்கையா? தட்சிணையா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பசுங்கொழுந்து வெற்றிலையில் பச்சைக் கற்பூரமும்
இலவங்கம்,முத்துச் சுண்ணமுடன் வாசனைப்பாக்கும் சேர்த்து
பக்குவமாய் கூட்டிவைத்து பாங்காக மடித்துத்தர
பரிபுரையே தாம்பூலம் தரும்சிவப்பில் மகிழ்ந்திடுவாய்!//

அப்படியே வாசனை தூக்குது!
என் வாயும் தாம்பூலச் சிவப்பில் சிவந்து போச்சின்னா பாத்துக்குங்க! :)

Kavinaya said...

கவனிச்சேன் கண்ணா. ஆட்சேபணை ஒண்ணும் இல்லை. அனைத்தும் அவள் விருப்பப்படி... :)

//என் வாயும் தாம்பூலச் சிவப்பில் சிவந்து போச்சின்னா பாத்துக்குங்க! :)//

அது சரி :)

மெளலி (மதுரையம்பதி) said...

//நாம் அன்னைக்கே தட்சிணை கொடுப்பது எப்படி?
காணிக்கை தானே?//

போஜனம் முடித்த பின் தரும் போஜன தக்ஷிணையைச் சொல்லியிருக்கலாம்.

ஸ்வர்ண புஷ்பம், குதிரை, யானை எல்லாம் தருவது போலதான் இதுவும் என்று நினைக்கிறேன்.