அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -3


முந்தைய பகுதி இங்கே!


21. திலக பூஜை

மாத:பாலதே தவாதிவிமலே காஷ்மீர கல்தூரிகா
கர்பூராகருபி: கரோமி திலகம் தேஹேங்காரகம் தத: !
வக்ஷோஜாதீயக்ஷகர் கமரஸம் ஸிக்வாச புஷ்பத்ரவம்
பாதெள சந்தன லேபநாதிபிரஹம் ஸம்பூஜயாமி க்ரமாத் !!

நெற்றியில் குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைகற்பூரம், அகரு முதலியவைகள் கலந்த கலவையால் திலகமிட்டு, மார்பிலும், பாதங்களிலும் சந்தனக் குழம்பைப் பூசி பூஜிக்கிறேன்.

கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம் சேர்திலகம்
கன்னிநல்லாள் கனிவுடனே அணிந்துகொள்ள தந்துவிட்டு
உரைத்துவிட்ட சந்தனத்தை நெஞ்சகத்தில் பூசிவிட்டு
கரைத்தெடுத்து கொஞ்சமதை பாதங்களில் தடவிவிட்டு (21)

22. அக்ஷதார்ச்சனை

ரத்னாக்ஷதைஸ்தவாம் பரிபூஜையாமி
முக்தாபலைர் வாருசிரை ரவித்தை: !
அகண்டிதைர் தேவியவாதிபிர்வா
கம்பீர பாங்காங்கித தண்டுலைர்வா !!

ரத்னமயமான அக்ஷதைகளாலும், துவாரம் இல்லாத முத்துக்களாலும் முனை முறியாத குங்குமப் பூ கலந்த அரிசியாலும் உம்மை பூஜிக்கிறேன்.

நவநவமாய் நல்முத்து ஒளிவீசும் இரத்தினங்கள்
குங்குமப்பூ கலந்துவைத்த புத்தம்புது பச்சரிசி
அத்தனையும் சேர்த்தெடுத்து அன்புடனே அடிபணிந்து
அர்ச்சனைகள் செய்யுகின்றோம் அம்பிகையே ஏற்றருள்வாய்! (22)
23. சந்தனம்


ஜனனி சம்பக தைல மிதம் புரோ
மருகமதோபயுதம் படவாஸகம் !
ஸுரபி கந்த மிதஞ்ச சதுஸ்ஸமம்
ஸபதி ஸர்வமிதம் பரிக்ருஹ்யதாம் !!
தாயே!, சம்பக-தைலம், கஸ்தூரி வாசனைப் பொடி, வாஸனை கந்தம் முதலிய சந்தனாதி உபசாரங்களை ஏற்றுக்கொள்வாயாக.

24. ஸிந்தூரம்
ஸீமந்தேதே பகவதி மாயாஸாதரம் ந்யஸ்தமேதத்
ஸிந்தூரம் மே ஹ்ருதய கமலே ஹர்ஷ வர்ஷம் தநோதி !
பாலாதித்ய த்யுதிரிவ ஸதா வோஹிதா யஸ்யகாந்தி
ரத்தர்த்வாந்தம் ஹரதி ஸகலம் சேதஸா சிந்தயைவ !!

உமது வகிட்டில் நான் இட்ட ஸிந்தூரம் காணப்படுவது எல்லையில்லா சந்தோஷத்தைத் தருகிறது. பாலசூரியனைப் போல எனது மனத்திருளையும் போக்குகிறது.
சந்தனம், சிந்தூரம் ஆகிய இரண்டு உபசாரங்களுக்குமான தமிழ் பாடல் கீழே!

சண்பகத்தின் தைலமுடன் கஸ்தூரி சந்தனமும்
சண்டியுந்தன் மேனியிலே விலேபனம் செய்துவிட (23)
காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே
இளங்கதிரைப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட (24)

25. புஷ்பம்
மந்தார குந்த கரவீர லவங்க புஷ்பை:
த்வாம் தேவி ஸந்ததமஹம் பரிபூஜயாமி !
ஜாதிஜபா வகுள சம்பக கேதகாதி
நாதவிதாதி குஸுமானி க தேநர்பயாமி !!

மந்தாரம், குருக்கத்தி, வைங்கம், அரளி புஷ்பங்களால் உங்களைப் பூஜிக்கிறேன். ஜாதிப்பூ செவ்வரத்தை, மகிழம்பூ, சம்பகப்பூ, தாழம்பூ முதலிய புஷ்பங்களால் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மந்தாரை மலரோடு சாதி, சண்பகமும்
மகிழம்பூ, தாழம்பூ, முல்லை, மல்லிகையும்
மலைவாழை நாரெடுத்து மணமுடனே தொடுத்துவைக்க
மந்திர ரூபிணியே மாலைசூட்டி மகிழ்ந்திடுவாய்! (25)

26. புஷ்பார்ச்சனை
மாலதீ வகுள ஹேம புஷ்பிகா காஞ்சதார கரவீர கேதகை:
கர்ணிகார கிரிகர்ணி காதபி: புஜயாமி ஜகதம்ப தேவபு: !
பாரிஜாத சதபத்ர பாடலைர் மல்லிகா வகுள சம்பகாதிபி
அம்புஜை: ஸுகுஸுமைச்ச ஸாதகம் பூஜயாமி ஜகதம்பவபு: !!

அம்மா!, ஜாதிப்பூ, மகிழம்பூ, மந்தாரை, கொன்றை, முதலிய மலர்களாலும், பாரிஜாதம், தாமரை, பாடலம், மல்லிகை, சம்பகம் ஆகியவற்றாலும் உம்மைப் பூஜிக்கிறேன்.

நர்மதையின் நீர்பாய்ச்சி நந்தவனம் தான்அமைத்து
நறுமணங்கள் கமழுகின்ற பலமலர்கள் சேகரித்து
மருவோடு மருக்கொழுந்தும், பாரிஜாதம், பாடலமும்
தாமரையும் சேர்த்துச்செய்யும் பூசனைகள் ஏற்றருள்வாய்! (26)
27. தூபம்

லாக்ஷாஸம்மிளிதை: ஸிதாப்ரஸஹிதை: ஸ்ரீவாஸஸம் மிச்ரிதை:
கர்பூராகலிதை: சிரை: மதுயுதை: கோஷார்பிஷா லோடிதை: !
ஸ்ரீகண்டாகரு குக்குலுப்ரபிருதிபி: நானாவிதைர் வஸ்துபி:
தூபம் தே பரிகல்பயாமி ஜனனி ஸ்தேஹரத் த்வமங்கீ: !!

சந்தனம், கற்பூரம், அக்ரு, தேன், பசுநெய் இவற்றுடன் குக்குலூ முதலிய வாசனை பொருட்களைச் சேர்த்து தூபம் காட்டுகிறேன் தாயே.

28. நீராஜனம்

ரத்னாலங்கிருத ஹேமபாத்ர நிஹிதை: கோஸர்பிஷா லோடிகை:
தீபைர் தீர்க்கதராத்தகார பிதுரை: பாலார்க்க கோடிப்ரபை: !
ஆதாம் ரஜ்வலதுஜ்வல ப்ரவிலஸத் ரத்ன ப்ரதீபைஸ்ததா
மாதஸ்தவா மஹமாதராத நுதினம் நீராஜயாம் பூர்சகை: !!

தங்கப் பாத்திரத்தில், பசும் நெய்யால் நனைக்கப்பட்ட திரிகளையுடைய தீபங்களால் தினமும் உமக்கு நீராஜனம் செய்கிறேனம்மா.

தூபம் மற்றும் தீப உபசாரங்களுக்காக கவிநயா அவர்கள் எழுதியது கீழே!

சந்தனம், கற்பூரம், குக்குலுவும், அகரு சேர்த்து
செந்தணலில் புகைக்கவிட்டு சாம்பவிக்கு தூபமிட்டு (27)
பாதம்நாளம் கொண்டிருக்கும் தங்கபாத் திரங்களிலே
பசுநெய்யில் திரிநனைத்து பலவிதமாய் தீபமிட்டு (28)

29 நைவேத்யம்

மாதஸ்த்வாம் ததிதுக்தபாயஸ மஹாசால்யன்ன ஸந்தானிகா:
ஸூபாபூப ஸீதாக்ருதை: ஸவடகை: ஸக்ஷெளத்ர ரம்பாபலை
ஏலா ஜீரக ஹிங்கு நாகரநசாகுஸ்தும்பரீ ஸம்ஸ்க்ருதை
சாகைஸ்ஸாகமஹம் ஸுதாதி கரஸை: ஸந்தர்ப்பயாம் யர்சனை: !!

தயிர், பால், பாயஸம், சக்கரைப் பொங்கல் முதலியவைகளையும், பருப்பு, வடை, அதிரசம், தேன் கலந்த பழங்கள், ஏலக்காய், ஜீரகம் ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்டஉணவு வகைகளையும் உமக்கு அளிக்கிறேனம்மா.
பாலோடு பாயஸமும் சர்க்கரையில் பொங்கலிட்டு
தேனூறும் கனிகளுடன் செந்தேனும் கலந்துவிட்டு
பலவகையாய் சித்ரான்னம் பக்குவமாய் சமைத்துவைத்து
பக்தியுடன் படைக்கின்றோம் பத்மாக்ஷி உனக்காக! (29)

30. பக்ஷணங்கள்

ஸாபூப ஸூபததிதுக்த ஸிதாக்ருதானி
ஸுஸ்வாது பக்த பரமான்ன புரஸ்ஸராணி !
சாகோல்லஸன் மரிசி ஜீரக பால்ஹிகானி
பக்ஷ்யாணி புங்க்ஷ்வ ஜகதம்ப மயார்பிதானி !!


வடை, பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்த ருசி மிக்க பக்ஷணங்களையும், மிளகு, ஜீரகம், குங்குமப்பூ சேர்த்த காய் வகைகளையும் அளிக்கிறேன், உண்ணவேண்டுமம்மா நீங்கள்.


லட்டோடு அதிரசமும் பருப்போடு இனிப்புருண்டை
வடையோடு பலப்பலவாய் பலகாரம் பட்சணங்கள்
பொடித்தவெல்லம் சேர்த்துச்செய்த திரட்டுப்பால் அத்தனையும்
தித்திப்பாய் தருகின்றோம் திரிபுரையே ஏற்றருள்வாய்! (30)
தமிழ்பாடல்களை திரு கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார். அந்த லிங்க் கிழே!.


Annaikku_64_Upacha...

13 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே
இளங்கதிரை ப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட

சபாஷ் ! என்ன ஒரு உதாரணமைய்யா!

Kavinaya said...

நல்லாருக்குல்ல? :)) ஆனா அது சொந்தமில்லை, சௌந்தர்யலஹரியில் இருந்தே சுட்டுட்டேன்! :)) மௌலி கண்டு பிடிப்பார்னு நினைச்சேன், நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க தி.ரா.ச. ஐயா :))

மெளலி (மதுரையம்பதி) said...

நான் கவனித்தேன் அக்கா... செளந்தர்ய லஹரி வலைப்பூவாக வந்ததன் நோக்கம் நிறைவேறியதாகவும் நினைத்தேன் :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச சார். வருகைக்கு நன்றிகள் பல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஷூ ஷூ...எல்லாரும் வழி விடுங்க, வழி விடுங்க....
லட்டோடு அதிரசமும் பருப்போடு இனிப்புருண்டை
வடையோடு பலப்பலவாய் பலகாரம் பட்சணங்கள்
பொடித்தவெல்லம் சேர்த்துச்செய்த திரட்டுப்பால் அத்தனையும்
தித்திப்பாய் தருகின்றோம்....

அப்படியே எங்களுக்கும் தந்தருள்வாய்!

லட்டான உன் மகனுக்கு லட்டை முதல் கொடுத்து விடு
உன் அதி ரசமாம் சங்கரன் நான் அதிரசமும் அளித்து விடு

நடையாடும் கண்ணனுக்கு தடை நீக்கி வடை கொடுப்பாய்!
திரட்டுப் பால் திரட்டித் என் தோழிக்கும் எனக்கருள்வாய்! :)

Anonymous said...

//காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே
இளங்கதிரை ப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட //

Akka, intha line sowndaryalahariyil sumangaligaludaya netthi vaguttil irrukkum kungumaththin perumaiyai vilakkum slokaththin baashyam poola ullathu.

Nice flow.

Thambi

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ், கணேசன்.

Kavinaya said...

//நான் கவனித்தேன் அக்கா... செளந்தர்ய லஹரி வலைப்பூவாக வந்ததன் நோக்கம் நிறைவேறியதாகவும் நினைத்தேன் :)//

அப்படியா... நல்லது மௌலி :)

//அப்படியே எங்களுக்கும் தந்தருள்வாய்!//

அது சரி கண்ணா... எல்லாம் உங்களுக்கேவா, எங்களுக்கு? :)

உடம்பு சரியில்லாத போதும் அருமையாக பாடி தந்தமைக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Kavinaya said...

//Akka, intha line sowndaryalahariyil sumangaligaludaya netthi vaguttil irrukkum kungumaththin perumaiyai vilakkum slokaththin baashyam poola ullathu.

Nice flow.

Thambi//

ஆமாம், அதேதான். ஈயடிச்சான் காப்பி! :) கூர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி தம்பீ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படியே எங்களுக்கும் தந்தருள்வாய்!//

//அது சரி கண்ணா... எல்லாம் உங்களுக்கேவா, எங்களுக்கு? :)//

யக்கா..."எங்களுக்கும்" தந்தருள்வாய்-ன்னு தானே சொன்னேன்! அந்த "எங்கள்"-ல்ல, நீங்களும் இருக்கீயளே! :)
அதிரசம் மட்டும் மொதல்ல நான் எடுத்துக்கறேன்! நீங்க லட்டு பக்கமா போயி நில்லுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடம்பு சரியில்லாத போதும் அருமையாக பாடி தந்தமைக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்//

ஹிஹி! தொலைபேசி வழியாக ரெக்கார்ட் பண்ணதால், குளிரோடு சேர்ந்து கொஞ்சம் பிசிறும் தட்டுது! அட்ஜஸ்ட் மாடி! :)

பாட்டு இசை போலவும் அதே சமயம் ஓதும் ஸ்டைலிலும் இருப்பதால்...மிகவும் பிடிச்சி இருந்தது-க்கா!
அதான் துணிஞ்சி பாடிட்டேன்! :)

மெளலி அண்ணா, இந்த செளந்தர்யலஹரி வலைப்பூவைத் துவக்கிய நாளில் இருந்தே இது பற்றி நாங்கள் நிறைய உரையாடல் செய்துள்ளோம்! மனனமும் செய்துள்ளேன்!

நடுவில் சில பல காரணங்களால் படித்தாலும் பின்னூட்டவில்லை. என்றாலும், இந்த வலைப்பூ நிறையும் சமயத்தில், இது போன்ற உபசார கைங்கர்யங்களைச் செய்யவே மனம் விழைந்தது!

இந்தக் கைங்கர்ய வாய்ப்பைக் கொடுத்தமைக்கு நன்றி கவிக்கா, மெளலி அண்ணா!

பிகு:
முன்பு அம்மன் பாட்டு-100ஐத் தொட்ட போது, கிட்டத்தட்ட இதே உபசார பூசைகளைப் பற்றித் தான் கேட்டது, பேசினோம். ஞாபகம் இருக்கா? :)
அது இன்று இன்னும் அருமையாக ஈடேறியது!

64 உபசாரங்களும் நிறைந்த பின், இந்த இடுகைகளின் நகல்களை அம்மன் பாட்டு வலைப்பூவுக்கும் தாருங்கள் மெளலி அண்ணா! அது என்ன ஓக்கே தானே? ஓக்கே தான் :)

குமரன் (Kumaran) said...

படித்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆசை தான்; ஆனால் பலமுறை மறந்து போய்விடும். ஆனால் கவிக்கா படித்ததை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அவற்றைப் பாடல்களிலும் கொடுப்பது மிக அழகாக இருக்கிறது.

Kavinaya said...

//ஆனால் பலமுறை மறந்து போய்விடும்.//

இங்கே அதை விட மோசம்ப்பா! ஏதாவது ஒன்றிரண்டு தப்பித் தவறி நினைவில் பதிந்து விடும், அதில் ஒன்றுதான் இதுவும் :)