அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5


முந்தைய பகுதி இங்கே!


பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


41. சாமரம்


சரதிந்து மரீசி கெளர வர்ணைர்
மணிமுத்து விலஸத் ஸுவர்ண தண்டை: !
ஜகதம்ப விசித்ர சாமரை ஸ்த்வம்
அஹமா நந்த பரேண விஜயாமி !!

சந்திரன் போன்ற வெண்மை நிறங்கொண்டதும், மணிமுத்துக்கள் விளங்கும் பொன் தண்டமுள்ளதுமாகிய அற்புத சாமரங்களை உமக்கு ஆனந்தத்தோடு அளிக்கிறேன்.

சந்திரனின் கதிரெடுத்து இந்திரவில் லாய்வளைத்து
மயிற்பீலி தனையெடுத்து கருத்துடனே கோர்த்துவிட்டு
தங்கத்தில் பிடியமைத்து செய்துவைத்த சாமரத்தால்
தென்காற்றாய் வீசிவிட தேவதையே மகிழ்ந்திடுவாய்! (41)

42. கண்ணாடி


மார்த்தாண்ட மண்டலநிபோ ஜகதம்ப யோயம்
பக்த்யா மயாமணிமயோ முகிரோர் பிதஸ்தே !
பூர்ணேந்து பிம்ப ருசிரம் வதனம் ஸ்வகீபமஸ்மின்

விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!

சஞ்சலமான கண்கள் உடையவளே! நான், உனக்கு சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த கண்ணாடியைத் தருகிறேன். நீ, உன்னுடைய சந்திரன் போன்ற முகத்தை அதில் பார்ப்பாயாக.

பூப்போல திருமுகத்தில் பொன்போன்ற புன்னகையாம்
தேன்போல மொழியழகாம் தென்றல்போல் நடையழகாம்
அகிலத்தின் அழகெல்லாம் உன்னிடத்தில் ஒளிர்ந்திருக்க
கதிரவன்போல் கண்ணாடியில் கமலமுகம் பார்த்தருள்வாய்! (42)

43. நீராஜனம்


இந்த்ராதயோ நதிநதைர் மகுடப்ரதீயை
நீராஜயந்தி ஸததம் தவபாத பீடம் !
தஸ்மாதஹம்தவ ஸமஸ்த சரீர மேதந்
நீராஜயாமி ஜகதம்ப ஸஹஸ்ர தீபை: !!

இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் போது, தங்களுடைய கிரீடமென்னும் தீபங்களால் உமக்கு நீராஜனம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு ஆயிரம் தீபங்களால் நீராஜனம் செய்கிறேனம்மா.


பட்டாடை சிவந்திருக்க பட்டுப்போல் தழுவிநிற்க
சிற்றாடைப் பெண்ணைபோல் சிரித்துநீயும் மகிழ்ந்திருக்க
எடுப்பான உன்தோற்றம் எழிலாகத் தெரிந்திடவே
அடுக்கடுக்காய் காட்டுகின்றோம் ஆயிரமாம் தீபங்கள்! (43)

44. குதிரைகள்

ப்ரியகதி ரதிதுங்கோ ரத்ன பல்யாண யுக்த
கனகமய விபூஷ ஸ்திக்த கம்பீர கோஷ: !
பகவதி கலிதோயம் வாஹனார்த்தம் மயாதே
துரக சத ஸமேத: வாயு வேகஸ் துரங்க: !!

ரத்ன சேணமும், பொன் ஆபரணங்களும் பூட்டி, கம்பீரமாய் கனைக்கின்ற, வாயுவேகமாகச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான குதிரைகளை உமக்கு வாகனமாக கல்பித்து அளிக்கிறேன்.

45. யானை

மதுகர வ்ருத கும்பந்யஸ்த ஸிந்தூர ரேணு:
கனக கலித கண்டா கிங்கிணீசோபி கண்ட: !
ச்ரவண யுகள சஞ்சக் சாமரோ மேகதுல்ய:
ஜனனி தவமுதேஸ்யான் மத்தமாதங்க ஏஷ !!

வண்டுகள் சூழ்ந்த மத்தகத்தில், சிந்தூரத் துளிகள் உள்ள, மேகம் போன்ற மதயானையை உமது பிரியத்துக்காக உம்மிடம் அளிக்கிறேன்.
46. ரதம்

த்ருததர துரகைர் விராஜமாநம்
மணிமய சக்ர சதுஷ்டயேன யுக்தம் !
கனகமய மும்விதான வந்தம்
பகவதி தே ஹிதரம் ஸமர்ப்பயாமி !!


வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.


குதிரை, யானை மற்றும் ரதங்கள் ஆகிய மூன்று உபசாரங்களுக்கான தமிழ் பாடல் கீழே!

ஆபரணங்கள் அலங்கரிக்கும் சேணமிட்ட குதிரைகளும் (44)
கருமேக நிறங்கொண்ட கம்பீர யானைகளும் (45)
காற்றைப்போல் புரவிகளைப் பூட்டிவிட்ட இரதங்களும் (46)
களிப்புடனே தருகின்றோம் கருணையுடன் ஏற்றருள்வாய்!

47. சதுரங்க சேனைகள்

ஹயகஜ ரதபத்தி சோப மானம்
திசிதிசி துந்துபி மேகநாத யுக்தம் !
அதிபஹு சதுரங்க ஸைன்ய மேதம்
பகவதி பக்தி பரேண தேர்ப்பயாமி !!

ரத, கஜ, துரக, பதாதிகளுடன், ஒவ்வொரு திக்கிலும் துந்துபி நாதம் முழங்க, நால்வகைப் படைகளையும் மிகுந்த பக்தியுடன் உமக்கு அளிக்கிறேன்.

48. கோட்டை

பரிகீ க்ருத ஸப்த ஸாகரம்
பஹுஸம்பத் ஸஹிதம் மயாம்பதே விபுலம் !
ப்ரபலம் தரணி தலாபிதம்
த்ருடதுர்க்கம் நிகிலம் ஸமர்ப்பயாமி !!

ஏழுகடல்களால் எழிலாய் சூழப்பட்டதும், மிகுந்த செல்வம் கொண்டதும், பரந்த பரப்பளவுள்ளதுமான பூமி என்னும் பெயருள்ள கோட்டையை உமக்கு அளிக்கிறேன்.
சதுரங்க சேனை, கோட்டை ஆகியவற்றுக்கான தமிழ் பாடல் கீழே!

சர்வலோக அரசியுனக்கு சதுரங்க சேனைகளும் (47)

கடல்சூழ்ந்த புவியிதுவும் புவிதாங்கும் செல்வங்களும்
கோட்டையென உன்குடைக்கீழ் நீயாள வேண்டுமென
பதம்பணிந்து கேட்கின்றோம் பரமேசீ கொண்டருள்வாய்! (48)

49. விசிறி

சதபத்ர யுதை: ஸ்வபாவ சிதை
அது ஸெரளப்ய யுதை: யராக: பீதை: !
ப்ரமரீ முகரீ கிருதை ரநந்தை:
வ்யஜனை ஸ்த்வாம் ஜகதம்ப விஜயாமி !!

குளிர்ச்சியுடையதும், நறுமணமுள்ளதும், புஷ்ப தூளிகளால் சிவந்ததும், வண்டுகள் ரீங்காரமிடுவதுமான விசிறியால் உங்களுக்கு வீசுகிறேன்.

50. நாட்டியம்

ப்ரமர லுலித லோல குந்தலாலீ
விகளித மால்ய விகீர்ண ரங்கபூமீ: !
இயமதி ருசிராநடீ நடந்தீ
தவஹ்ருதயே முதமாதநோது மாத: !!


வண்டுகள் மொய்ப்பதால் சஞ்சலமான குந்தளத்திலிருந்து விழுந்த புஷ்பங்கள் இறைந்து கிடக்கும் இடமே நாட்ய பூமி, அங்கு நடனமிடும் நடீ உனக்கு சந்தோஷம் அளிக்கட்டும்.

குளுமைதரும் மலர்களுடன் மணம்பரப்பும் விசிறிகொண்டு
பூந்தென்றல் போலமெல்ல வீசிடநீ மகிழ்ந்திடுவாய்! (49)
வாயுவேகம் விஞ்சுகின்ற எழில்வண்ணக் கொடிகளுடன்
இரத்தினப் பதாகைகளும் தந்திடநீ ஏற்றருள்வாய்!


நாட்டியத்திற்கான தமிழ் பாடல் அடுத்த பதிவில் வெளிவரும்.

12 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

41 சாமரம்
49 விசிறி

மொதல்ல சாமரம் வீசிட்டு, அப்பறமாத் தான் விசிறி வீசுவாங்களாண்ணா(க்கா)?

43. நீராஜனம்
என்றால் என்ன? தீபத்தை எதுக்கு நீராஜனம்-ன்னு சொல்லுறாய்ங்க?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!//

கண்ணாடிச் சேவையில் இந்த வரிகள் ரொம்ப அழகா வந்திருக்கு சுலோகத்தில்!
பொருள் சொல்லுங்களேன் சொல்லுக்குச் சொல்!

Anonymous said...

Akka, aajar
Thambi

கவிநயா said...

கண்ணா, எனக்கு பதில் தெரியாத கேள்வியா கேட்கறீங்க :) மௌலி தான் சொல்லணும்.

கவிநயா said...

//Akka, aajar
Thambi//

ஒன்லி ஆஜர்? நோ வாசிப்பு? :)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

கோவில் ஆகமங்களில் வேறுமாதிரி இருக்க வாய்ப்புண்டு. நான் கவனித்ததில்லை. வைதீக பூஜைகளில் இந்த உபசாரங்கள் முன்னே-பின்னே மாறுவதில் தவறொன்றும் இல்லை. வைதீக பூஜையில் ஷோடச உபசாரங்கள் தான் ப்ராதான்யமாகச் சொல்லப்பட்டிருக்குன்னு தெரிகிறது.

கணேசர் வந்து ஏதாவது மாற்றுக் கருத்து வைப்பாராகில் மேலும் அறியமுடியும்.

மெளலி (மதுரையம்பதி) said...

சொல்லுக்குச் சொல் பொருள் சொல்ல தற்போது நேரமில்லை, நேரமிருக்கையில் சேர்க்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி கவிக்கோ கவிக்கா.

Anonymous said...

//கோவில் ஆகமங்களில் வேறுமாதிரி இருக்க வாய்ப்புண்டு. நான் கவனித்ததில்லை.// kovil aagamam mattum allaa, desaachaaram poruththum poojai muraigal maarupadum.i have no idea about kovil aagamam (it is a ocean actually)

//வைதீக பூஜைகளில் இந்த உபசாரங்கள் முன்னே-பின்னே மாறுவதில் தவறொன்றும் இல்லை. வைதீக பூஜையில் ஷோடச உபசாரங்கள் தான் ப்ராதான்யமாகச் சொல்லப்பட்டிருக்குன்னு தெரிகிறது.//
yes, vaithika poojaiyil sodasoopajaramum perumpaalana kovilgalil manthra ruupamaagavey irrukkum. Aaagamathil mattumey poojai muraigal migavum visthaaramaaga irukkum.(for example varities of deeparathanai's and the way of swamy aavahanam and etc))

//கணேசர் வந்து ஏதாவது மாற்றுக் கருத்து வைப்பாராகில் மேலும் அறியமுடியும்.// maatru karuthulellam onnum illai, ethoo daily vanthu namba kavinaya akka kaiyaala sundal vaangi saapadalaamnu vantha koorthu vidappakkaley maduraiyampathi anna! Tirunelvelli kaaraaluku vaarthai jaalam ellam kaata varathu......;)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க தம்பியாரே. பாராயணம் எல்லாம் எப்படி நடந்தது?.

திருநெல்வேலிக்கு வார்த்தை ஜாலம் கிடையாதா?....அம்பியைப் பக்கத்தில் வச்சுண்டு இப்படி எல்லாம் பேசலாமா?. :)

Geetha Sambasivam said...

नीराजनम्=waving of bright light

இங்கே கற்பூர தீபத்தையும், நெய் தீபத்தையும் ஸ்வாமிக்கு ஆலாத்தி சுற்றுவது போல் சுற்றுவதைக் குறிக்கும்.

Geetha Sambasivam said...

மத்தது இன்னும் படிக்கலை, அப்புறமா வரேன்.